புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 பிப்., 2023

இரா.சம்பந்தன் விரும்பினால் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு தலைவராக வர முடியும்: பா.கஜதீபன்

www.pungudutivuswiss.com
இரா.சம்பந்தன் விரும்பினால் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு தலைவராக வர முடியும் 
என தமிழ் தேசிய கூட்டமைப்பின் வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் பா.கஜதீபன் தெரிவித்துள்ளார்.

ஆசனங்கள்தான் தேவையென கேட்டீர்களென்றால், அனைத்து ஆசனங்களையும் விட்டுத் தந்திருப்போம் என்றும் மேலும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குத்துவிளக்கு சின்னத்தில் நல்லூர் தொகுதியில் போட்டியிடும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர்களுடன் நேற்று (05.02.2023) நடைபெற்ற சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இரா.சம்பந்தன் விரும்பினால் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு தலைவராக வர முடியும்: பா.கஜதீபன் | Can Become The Leader Of Tamil National Federation

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் அரசு கட்சியின் எம்.பி இரா.சம்பந்தன் ஐயாவிற்கு இன்று 90ஆவது பிறந்தநாள். அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஏனெனில், அவர் எங்கள் எல்லோருக்கும் ஒரு காலத்தில் தலைவராக இருந்தவர். இப்போது கூட, அவர் விரும்பினால் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு தலைவராக வர முடியும்.

சம்பந்தன் ஐயாவில் எமக்கு ஒரேயொரு கவலை மட்டும்தான் உள்ளது. அரசியலுக்கு 10 வருடம் வந்து, எந்தவித நெருக்கடியையும் சந்திக்காமல், ஆயுதம் தூக்கி போராடிய போராளிகள் அனைவரையும் தரக்குறைவாக பார்க்கும் ஒரு கூட்டத்தினர் பேசும்போது அதை நீங்கள் பார்த்துக் கொண்டிருந்தீர்கள். அந்த கூட்டத்தினருடன் இருந்தீர்கள். அவர்களிற்கு புத்தி சொல்லி திருத்தாமல் விட்டுவிட்டீர்கள் என்பது மட்டும்தான் எமக்குள்ள ஒரேயொரு கவலை.

மற்றும்படி, உங்களில் எமக்கு எந்த கோபமும், வருத்தமுமில்லை. உங்கள் 28ஆவது வயதில், 1961ஆம் ஆண்டு சத்தியாக்கிரகத்தில் நீங்கள் கைது செய்யப்பட்டீர்கள்.

அதன்பின், தந்தை செல்வாவும், அமிர்தலிங்கமும் உங்களை அரசியலுக்கு அழைத்து வந்தார்கள். தலைவர் சிவசிதம்பரத்துடன் இணைந்து நீங்கள் நாடாளுமன்றத்தில் ஆற்றிய பங்கு மகத்தானது. அப்போது உங்கள் இருவரையும் இரட்டைக்குழல் துப்பாக்கிகள் என்றுதானே வர்ணித்தனர்.

இரா.சம்பந்தன் விரும்பினால் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு தலைவராக வர முடியும்: பா.கஜதீபன் | Can Become The Leader Of Tamil National Federation

பதவி வாங்கிக் கொடுக்கலாம்

ஆனால், இந்த அறிவு அனுபவத்தை வைத்து, நேற்று அரசியலுக்கு வந்த, மக்களுக்கும் மண்ணுக்கும் தொடர்பில்லாத, யாருடைய ஏஜெண்ட்கள் என்றே தெரியாதவர்கள் சொல்வதை கேட்டு செயற்பட்டீர்கள்.

நல்லூர் பிரதேசசபையில் ஒரு ஆசனத்தை அதிகமாக பிடிக்கலாம், திருகோணமலை பட்டினமும் சூழலில் ஒரு ஆசனத்தை அதிகமாக பிடிக்கலாம், மாநகரசபையில் 2 ஆசனங்களை அதிகமாக பிடிக்கலாம், எனக்கு தெரிந்தவருக்கு பதவி வாங்கிக் கொடுக்கலாம், என்னைப் பற்றி புகழ்ந்து எழுதுபவர்களிற்கு முதல்வர் பதவி வாங்கிக் கொடுக்கலாம் போன்ற சில்லறை காரணங்களை அவர்கள் சொல்வதை கேட்டு செயற்படாமல், அவர்களிற்கு புத்தி சொல்லியல்லவா நீங்கள் திருத்தியிருக்க வேண்டும். தமிழ் அரசு கட்சிக்குள் உள்ள அந்த குழுவினர், நாங்கள் சொல்லிக் கேட்க மாட்டார்கள்.

நீங்களாவது சொல்லியிருக்கலாமே ஐயா. அதை சொல்லவில்லையென்ற ஒரே கவலைதான் எங்களிற்குள்ளது. உங்களது 100ஆவது பிறந்தநாளில் நான் உயிரோடு இருந்தால் உங்களிற்கு வாழ்த்துச் சொல்ல விரும்புகிறேன்.

நீங்கள் தமிழ் மக்களின் மிகப்பெரிய தலைவர் என்ற மணிமுடி உங்கள் தலையிலிருந்தது. அதை நீங்களே இறக்கி வைத்து விட்டீர்கள். அதை மீண்டும் தூக்கி உங்கள் தலையில் வைக்க வேண்டுமென்றுதான் விரும்புகிறோம். அது உங்களின் கைகளில்தான் உள்ளது. இப்போது கூட காலம் கடந்து விடவில்லை.

இரா.சம்பந்தன் விரும்பினால் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு தலைவராக வர முடியும்: பா.கஜதீபன் | Can Become The Leader Of Tamil National Federation

தமிழ் மக்களின் ஒற்றுமைக்காக மட்டும்

இந்த தவறுகளை திருத்தி, நீங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராகலாம். உங்களிற்கு ஆசனம்தான் தேவை, பங்காளிக்கட்சிகளிற்கு ஒன்றுகூட விட்டுத்தர மாட்டோம் என்றால் கூட விட்டுத்தந்திருப்போம்.

2013ஆம் ஆண்டு வட மாகாணசபை அமைத்த போது, எமது தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தனை சாதாரண உறுப்பினராக உட்கார வைத்தீர்கள். 1985ஆம் ஆண்டு திம்பு பேச்சில் உங்களுடன் கலந்து கொண்டவர்களில், சித்தார்த்தன் மட்டும்தான் அரசியலில் இயங்கிக் கொண்டிருக்கிறார். அவருக்கு சிறிய பதவிகூட கொடுக்க வேண்டுமென நீங்களோ, உங்கள் கட்சித் தலைவர்களோ யோசிக்கக்கூட இல்லை. இப்படி இன்னும் எத்தனையோ அவமானங்களை நாங்கள் சந்தித்தோம்.

ஆனால் அவற்றை தாங்கிக் கொண்டது- தமிழ் மக்களின் ஒற்றுமைக்காக மட்டும்தான். எமக்கு பதவிதரவில்லையென்பதற்காக நாம் கூட்டமைப்பை உடைக்கவில்லை. உடைக்க வேண்டுமென மனதளவில்கூட யோசிக்கவில்லை. இது ஒரு உதாரணம். இன்னும் பல உள்ளன. வெளியில் சொல்ல முடியாத அவமானங்கள் கூட உங்களால் உமக்கு கிடைத்துள்ளன.

ஆனால், அவற்றையெல்லாம் தமிழ் மக்களின் ஒற்றுமைக்காக மட்டும்தானே தாங்கினோம். இப்போதும் நீங்கள் அவமானப்படுத்தியிருந்தால், தமிழ் மக்களின் ஒற்றுமைக்காக நாங்கள் தாங்கியிருப்போம். தமிழ் மக்களின் குரல் ஓரணியாக ஒலிக்க வேண்டுமென்பதற்காக நாம் எதையும் தாங்கத் தயாராக இருக்கிறோம்.

ஆனால், அதையெல்லாம் கடந்து, தமிழ் தேசிய கூட்டமைப்பை உடைத்து, தமிழ் அரசு கட்சி தனித்து போட்டியிட வேண்டுமென ஏன் முடிவெடுத்தீர்கள்? தயவுசெய்து இதற்கெல்லாம் நீங்கள் பதில் சொல்ல வேண்டும். இன்று இந்த கேள்விக்கு நீங்கள் மக்களிற்கு பதில் சொல்லாமல் தவிர்க்கலாம்.

இரா.சம்பந்தன் விரும்பினால் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு தலைவராக வர முடியும்: பா.கஜதீபன் | Can Become The Leader Of Tamil National Federation

பெரும்பாலான சபைகளை கைப்பற்றுவோம்

ஆனால், நாளைய வரலாற்றிடமிருந்து நீங்கள் பதில் சொல்லாமல் தப்ப முடியாது. தமிழ் அரசு கட்சி எடுத்த முடிவு பிழையென, அந்த கட்சியின் பல மூத்த தலைவர்கள் இப்போது சொல்ல ஆரம்பித்துள்ளனர்.

ஆனால், காலம் கடந்த ஞானத்தினால் என்ன பலன்? தமிழனத்தின் ஒற்றுமையை உங்கள் கட்சி உடைத்த போது மௌனமாக பார்த்துக் கொண்டுதானே இருந்தீர்கள் நல்லூர் பிரதேசசபையில் உள்ள 20 ஆசனங்களில், 60 வீதமான 12 ஆசனங்களை கைப்பற்றுவதென்றால், தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் அரசு கட்சி, தமிழ் மக்கள் கூட்டணியென்பன இணைந்துதான் போட்டியிட்டிருக்க வேண்டும். அனைவரும் இணைந்திருந்தால் 60 வீதமான ஆசனங்களை கைப்பற்றி ஆட்சியமைத்திருக்கலாம்.

அதுதானே தொழில்நுட்ப முறை. அதைவிட்டு, உடைந்து சிதறி கேட்டால் அது தமிழினத்திற்கே பாதகமானது. தற்போது நல்லூர் பிரதேசசபையில் ஆட்சியிலிருக்கும் தரப்பில், தவிசாளர் மயூரன் மட்டும்தான் வட்டாரத்தில் வெற்றியீட்டிய ஒரேயொரு நபர். இரண்டொரு உதிரிகளுடன் இணைந்து ஆட்சியமைத்துள்ளார்.

இந்த பிரதேசசபையில் எதிர்வரும் 11ஆம் திகதி நாங்கள் ஆட்சியைப் பிடிப்போம். அங்கு மட்டுமல்ல, வடக்கு கிழக்கிலுள்ள பெரும்பாலான சபைகளை கைப்பற்றுவோம். அது எமக்கு பெரிய பிரச்சினையில்லை என மேலும் அவர் தெரிவித்துள்ளார்.

ad

ad