புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 பிப்., 2023

இலங்கைக்கு 400 மில்லியன் டொலர் - உலக வங்கி அறிவிப்பு!

www.pungudutivuswiss.com


இலங்கைக்கு அத்தியாவசிய இறக்குமதிகளுக்கு நிதியளிப்பதற்காக நாணய பரிமாற்ற வசதியின் கீழ் 400 மில்லியன் டொலர் வழங்குவதாக உலக வங்கியின் முதலீட்டுப் பிரிவான இன்டர்நஷனல் ஃபைனான்ஸ் கோர்ப்பரேஷன் அறிவித்துள்ளது.

இலங்கைக்கு அத்தியாவசிய இறக்குமதிகளுக்கு நிதியளிப்பதற்காக நாணய பரிமாற்ற வசதியின் கீழ் 400 மில்லியன் டொலர் வழங்குவதாக உலக வங்கியின் முதலீட்டுப் பிரிவான இன்டர்நஷனல் ஃபைனான்ஸ் கோர்ப்பரேஷன் அறிவித்துள்ளது

கடுமையான டொலர் தட்டுப்பாட்டினால் மிக மோசமான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு இந்த நிதி மிகவும் தேவையான அந்நிய செலாவணி என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை நீண்ட கால நிதியுதவி மற்றும் ஆலோசனை சேவைகளை வழங்குவதற்கான மேலதிக திட்டங்கள் குறித்தும் உலக வங்கியின் முதலீட்டுப் பிரிவான இன்டர்நஷனல் ஃபைனான்ஸ் கோர்ப்பரேஷன் தெரிவித்துள்ளது.

இதேவேளை சர்வதேச நாணய நிதியத்துடன் 2.9 பில்லியன் டொலர் கடனுதவியை பெற்றுக் கொள்வதற்கான ஊழியர்மட்ட ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ள அதேவேளை எதிர்வரும் மார்ச் மாதமளவில் உதவி கிடைக்கும் என்றும் இலங்கை நம்பிக்கை கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ad

ad