புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 பிப்., 2023

இளைஞனை கிணற்றில் தள்ளிக் கொன்ற நண்பர்கள்! - மதுபோதையில் சம்பவம்.

www.pungudutivuswiss.com


புதுக்குடியிருப்பு, சுதந்திரபுரம், வெள்ளப்பள்ளம் பகுதியில் இளைஞன் ஒருவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை உடலமாக மீட்கப்பட்டுள்ளார். வெள்ளப்பளத்தைச் சேர்ந்த 21 அகவையுடைய விஜயராசா யசீகரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

புதுக்குடியிருப்பு, சுதந்திரபுரம், வெள்ளப்பள்ளம் பகுதியில் இளைஞன் ஒருவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை உடலமாக மீட்கப்பட்டுள்ளார். வெள்ளப்பளத்தைச் சேர்ந்த 21 அகவையுடைய விஜயராசா யசீகரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்

நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்திக்கொண்டிருந்த வேளை, நண்பர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து, ஏனைய மூன்று நண்பர்களால் குறித்த இளைஞன் கிணற்றுக்குள் தள்ளி விழுத்தப்பட்டுள்ளார்.

வாக்குமூலங்களின் அடிப்படையில், பொலிஸ் விசாரணையைத் தொடர்ந்து சம்பவத்துடன் தொடர்புடைய மூவரை, புதுக்குடியிருப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவர்களை திங்கட்கிழமை முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது, 14 நாள்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளதுடன் உயிரிழந்தவரின் உடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ad

ad