புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 பிப்., 2023

1,100 சிங்கள சிற்றூழியர்களை நியமிக்கிறது வடக்கு மாகாண சபை!

www.pungudutivuswiss.com
மிக்கிறது வடக்கு மாகாண சபை!
[Sunday 2023-02-26 16:00]



வடக்கு மாகாணசபைக்கு உட்பட்ட சிற்றூழியர்கள் வெற்றிடங்களுக்காக தென்பகுதியிலிருந்து சிங்களவர்களை நியமிப்பதற்கான நகர்வுகள் எடுக்கப்பட்டு வருவதாகத் தெரியவருகின்றது.

வடக்கு மாகாணசபைக்கு உட்பட்ட சிற்றூழியர்கள் வெற்றிடங்களுக்காக தென்பகுதியிலிருந்து சிங்களவர்களை நியமிப்பதற்கான நகர்வுகள் எடுக்கப்பட்டு வருவதாகத் தெரியவருகின்றது

இது தொடர்பில் அதிகாரிகள் மட்டத்திலான பேச்சு நடைபெற்றுள்ள நிலையில் விரைவில் கோரிக்கை கடிதம் வடக்கு மாகாணத்திலிருந்து அனுப்பப்படவுள்ளது. ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச தெரிவு செய்யப்பட்ட பின்னர், ஒரு லட்சம் பேருக்கான வேலை வாய்ப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

இந்தத் திட்டத்திற்க வடமாாணத்திலிருந்து அதிகளவானோர் தெரிவு செய்யப்படவேண்டிய நிலையில், அப்போதைய ஆளுங்கட்சி அரசியல்வாதிகளின் தலையீட்டால் குறைந்தவானோரே தெரிவாகினர்.

இவர்களில் 100 பேர் வரையில் தற்போது வடக்கு மாகாண சபைக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால் வடக்கு மாகாண சபையின் சிற்றூழியர், தகைசார் பணியாளர் உட்பட சுமார் 1,200 வெற்றிடங்கள் காணப்படுகின்றன.

இந்த வெற்றிடங்களுக்கு ஏனைய மாகாணங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்டவர்களிலிருந்து 1,100 பேரை நியமிக்குமாறு வடக்கு மாகாண சபையால் கோரிக்கை முன்வைக்கப்படவுள்ளது.

வடக்கு மாகாணத்தில் பெருமளவானோர் வேலைவாய்ப்பின்றிக் காணப்படுகின்ற நிலையில் தென்பகுதியிலிருந்து சிங்களவரை இங்கு நியமிக்க முயற்சிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ad

ad