புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 பிப்., 2023

உள்ளூராட்சித் தேர்தல் அறிவிப்பு சட்டபூர்வமானதே

www.pungudutivuswiss.com



உள்ளூராட்சிமன்றத் தேர்தல் வாக்கெடுப்பை நடத்துவதற்கான அனைத்து செயற்பாடுகளும் அரசியலமைப்பிற்கு அமையவும், ஆணைக்குழுவின் உறுப்பினர்களின் ஒருமித்த தீர்மானத்திற்கு அமையவும் முன்னெடுக்கப்பட்டது. தேர்தல் திகதி தொடர்பான அறிவிப்பு உத்தியோகபூர்வமானதே என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் வாக்கெடுப்பை நடத்துவதற்கான அனைத்து செயற்பாடுகளும் அரசியலமைப்பிற்கு அமையவும், ஆணைக்குழுவின் உறுப்பினர்களின் ஒருமித்த தீர்மானத்திற்கு அமையவும் முன்னெடுக்கப்பட்டது. தேர்தல் திகதி தொடர்பான அறிவிப்பு உத்தியோகபூர்வமானதே என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் வாக்கெடுப்பை எதிர்வரும் மார்ச் மாதம் 09 ஆம் திகதி நடத்த எடுக்கப்பட்ட தீர்மானத்தின் உத்தியோகப்பூர்வ தன்மை தொடர்பில் தவறான நிலைப்பாடுகள் சமூக மயப்படுத்தப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது. இவ்விடயம் தொடர்பில் நாட்டு மக்களை தெளிவுபடுத்துவது தேர்தல்கள் ஆணைக்குழுவின் பொறுப்பாகும்.

ஸ்ரீ லங்கா ஜனநாயக சோசலிச குடியரசின் அரசியலமைப்பின் 104 ஆ(1) உறுப்புரையின் பிரகாரம் ஜனாதிபதி தெரிவு,பாராளுமன்ற உறுப்பினர் தெரிவு,மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்றங்களுக்கான உறுப்பினர்களை தெரிவு செய்துக் கொள்ளல் மற்றும் மக்கள் வாக்கெடுப்பு நடத்தவது தொடர்பில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்கெடுப்பை நடத்துவதற்கான அதிகாரம் 2017 ஆம் ஆண்டு 16 ஆம் இலக்க திருத்த உள்ளூராட்சிமன்றத் தேர்தல் வாக்கெடுப்பு கட்டளைச் சட்டம் (262 பிரிவு) ஊடாக வழங்கப்பட்டுள்ளது. அந்த கட்டளைச்சட்டத்தின் 24 ஆவது உறுப்புரையில் உள்ளூராட்சிமன்றங்களுக்கான உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு இந்த கட்டளைச்சட்டம் மற்றும் அதனுடனான விதி விதானங்களுக்கு அமைய இடம்பெற வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

2018.02.10 ஆம் திகதி இடம்பெற்ற உள்ளூராட்சிமன்றத் தேர்தல் வாக்கெடுப்பு ஊடாக 340 உள்ளூராட்சிமன்றங்களுக்கான மக்கள் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டார்கள்.

தெரிவு செய்யப்பட்ட 340 உள்ளூராட்சிமன்றங்களின் பதவி காலம் 2022.03.19 ஆம் திகதியுடன் நிறைவடைந்ததை தொடர்ந்து உள்ளூராட்சிமன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சரின் அதிகாரத்தின் ஊடாக உள்ளூராட்சிமன்றங்களின் பதவி காலம் ஒரு வருட காலத்திற்கு நீடிக்கப்பட்டது,இதற்கமைய எதிர்வரும் மார்ச் மாதம் 19ஆம் திகதி உள்ளூராட்சி மன்றங்களின் பதவி காலம் நிறைவடையும்.

தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுக்க 2022.12.16 ஆம் திகதி மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்கள் மற்றும் உதவி தெரிவத்தாட்சி அலுவலர்கள் நியமிக்கப்பட்டார்கள்.

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட ஆலோசனைக்கு அமைய 2023.01.04 ஆம் திகதி தெரிவத்தாட்சி அலுவலர்கள் கட்டுப்பணம் மற்றும் வேட்பு மனுத்தாக்கல் தொடர்பான அறிவித்தலை உத்தியோகப்பூர்வமாக வெளியிட்டார்கள்.

இதற்கமைய கடந்த ஜனவரி மாதம் 18,19,20 மற்றும் 21 ஆகிய திகதிகளில் 339 உள்ளூராட்சி மன்றங்களுக்காக அங்கிகரிக்கப்பட்ட 59 அரசியல் கட்சிகளும்,329 சுயாதீன குழுக்களும் வேட்பு மனுக்களை சமர்ப்பித்தார்கள். வேட்பு மனுக்கள் கையளித்தல் நிறைவு பெற்றதை தொடர்ந்து மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்கள் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆலோசனைக்கு அமைய 2023.03.09 ஆம் திகதி உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான வாக்கெடுப்பை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக உள்ளூராட்சிமன்றத் தேர்தல் வாக்கெடுப்பு கட்டளைச் சட்டத்தின் 38(1) உறுப்புரையின் விசேட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக அறிவிக்கப்பட்டது.

ad

ad