புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 பிப்., 2023

வசாவிளான் ஆலயத்தில் வழிபாட்டுக்கு அனுமதி

www.pungudutivuswiss.com

நீண்டகாலமாக உயர்பாதுகாப்பு வலயத்தை காரணம் காட்டி பூசை வழிபாடுகளுக்கு தடுக்கப்பட்டுவந்த வாசாவிளான் மேற்கு மானம்பிராய் பிள்ளையார் கோயிலில் பூசை வழிபாடுகளை மேற்கொள்ள பொதுமக்களுக்கு ஞாயிற்றுக்கிழமை முதல் அனுமதி வழங்கப்பட்டது.

நீண்டகாலமாக உயர்பாதுகாப்பு வலயத்தை காரணம் காட்டி பூசை வழிபாடுகளுக்கு தடுக்கப்பட்டுவந்த வாசாவிளான் மேற்கு மானம்பிராய் பிள்ளையார் கோயிலில் பூசை வழிபாடுகளை மேற்கொள்ள பொதுமக்களுக்கு ஞாயிற்றுக்கிழமை முதல் அனுமதி வழங்கப்பட்டது.

உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள குறித்த ஆலயத்துக்கு பக்தர்கள் சென்றுவர ஆரம்ப காலங்களில் அனுமதி கொடுக்கப்பட்டு வந்த போதிலும் பின்னர் பாதுகாப்பு விடயங்களை காரணம் காட்டி மறுக்கப்பட்டது.

இந்நிலையில் ஆலய நிர்வாகத்தினர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்த தமது பூர்வீக ஆலயத்தில் பூசை வழிபாடுகளை மேற்கொள்ள அனுமதி பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதற்கிணங்க பாதுகாப்பு உயரதிகாரிகளுடன் குறித்த விடயம் தொடர்பில் கலந்துரையாடிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பொதுமக்கள் பூசை வழிபாடுகளை மேற்கொள்வதற்கு அனுமதி பெற்றுக் கொடுத்துள்ளார்.

இதனடிப்படையில் இந்துக்களின் சிறப்பு நாளான தைப்பூச தினமான நேற்று ஆலயத்திற்கு பக்கத்ரகள் செல்வதற்க அனுமதி கொடுக்கப்பட்டதற்கு இணங்க தைப்பூச வழிபாடுகள் மற்றும் சிறப்பு பொங்கல் நிகழ்வுகளை பொதுமக்கள் முன்னெடுத்திருந்தனர்.

ad

ad