புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 பிப்., 2023

கடவுச்சீட்டு விநியோகத்தில் இடம்பெறும் பாரிய மோசடி! இலட்சக்கணக்கான பணத்தை பெறும் அதிகாரிகள்

www.pungudutivuswiss.com
கடவுச்சீட்டு விநியோகத்தில் ஈடுபட்டுள்ள சில அதிகாரிகள் நாளொன்றுக்கு சுமார் பத்து இலட்சம் ரூபாவை மோசடியாக பெற்று வருவதாக குடிவரவு திணைக்கள ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில், குடிவரவு குடியகழ்வுக் கட்டுப்பாட்டாளர் ஹர்ஷ இலுக்பிட்டிய கருத்து தெரிவிக்கையில்,

தரகர்கள் குழுவொன்றும், சில அதிகாரிகளும் இவ்வாறு இலஞ்சம் பெறும் மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

அதற்கமைய, இலஞ்ச ஊழல் விசாரணை அதிகாரிகள், இரகசிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் சிவில் உத்தியோகத்தர்களைப் பயன்படுத்தி பாதுகாப்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கடவுச்சீட்டு விநியோகத்தில் இடம்பெறும் பாரிய மோசடி! இலட்சக்கணக்கான பணத்தை பெறும் அதிகாரிகள் | Massive Fraud In Passport Distribution Srilanka

வெளிநாட்டு துப்பாக்கி உரிமம்
அதன்படி, ஏற்கனவே இலஞ்சம் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் அலுவலக உதவியாளர் ஒருவரும் மூன்று தரகர்களும் இலஞ்ச ஊழல் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு இலஞ்சம் பெற்றவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு மேற்கொண்ட முயற்சிகளுக்கு எதிராக சிலர் செயற்படுவதாகவும் தெரியவந்துள்ளது.

கடவுச்சீட்டு விநியோகத்தில் இடம்பெறும் பாரிய மோசடி! இலட்சக்கணக்கான பணத்தை பெறும் அதிகாரிகள் | Massive Fraud In Passport Distribution Srilanka

கொரிய மொழிப் புலமைத் தேர்வில் கலந்துகொள்பவர்கள் நாளொன்றுக்கு ஏழாயிரம் பேர் கடவுச்சீட்டு பெறுவதற்காகத் திணைக்களத்திற்கு வருகின்றனர்.

இதன்போது இலஞ்சம் வாங்கும் மோசடி நடப்பதாகவும், அத்துறையின் அதிகாரிகள் குழுவும் இதில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதிகாரிகள் மற்றும் தரகர்கள் சிலர் வெளிநாட்டு துப்பாக்கி உரிமத்தை ஏற்பாடு செய்ய சுமார் நாற்பதாயிரம் ரூபாய் வசூலிக்கிறார்கள் என்றும் அந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

ad

ad