புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 பிப்., 2023

க்குகள் எரிப்பது நாட்டின் எதிர்காலத்தையே!

www.pungudutivuswiss.com



அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை பௌத்த பிக்குகள் எரிக்கிறார்கள், அவர்கள் எரிப்பது 13 ஆவது திருத்த நகல்களை அல்ல இந்த நாட்டின் எதிர்காலத்தை என்பதை அரச தலைவர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை பௌத்த பிக்குகள் எரிக்கிறார்கள், அவர்கள் எரிப்பது 13 ஆவது திருத்த நகல்களை அல்ல இந்த நாட்டின் எதிர்காலத்தை என்பதை அரச தலைவர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை இடம்பெற்ற அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரை மீதான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் கொள்கை உரையில் அதிகாரங்களை பரவலாக்கி புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்ற வகையில் அவர் கருத்து வெளியிட்டிருந்தாலும் பொலிஸ் அதிகாரங்கங்கள் இல்லாத அதிகார பரலாக்கம் வழங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஒற்றையாட்சிக்குள் அர்த்தமுள்ள அதிகார பகிர்வு சாத்தியமற்றது.

75 ஆவது சுதந்திர தினம் கடந்த வாரம் கொண்டாடப்பட்டது. ஆனால் தமிழ் மக்களுக்கு சுதந்திரம் இன்னும் கிடைக்கவில்லை. சுதந்திரமடைந்த நாள் முதல் தமிழ் மக்கள் அடக்கி ஒடுக்கப்பட்டே வருகின்றனர்.

அவர்கள் 30 வருடங்களாக ஆயுத ரீதியில் போராட்டத்தையும் நடத்தினர். வடக்கு கிழக்கில் இருந்து ஆயிரக்கணக்கான இளைஞர்கள் போராட்டத்தில் இணைந்தனர்.

இந்நிலையில் இலங்கை - இந்திய ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. இதன் மூலம் 13 ஆவது திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது.

இது அரசியலமைப்பில் உள்ள ஒரு அங்கமாகும். இதனை நிறைவேற்றாது இருப்பதானது அரசாங்கமே அரசியலமைப்பை மீறுகின்றது என்பதனையே காட்டுகின்றது.

இதேவேளை பௌத்த நாடு என்பதனால் பௌத்த பிக்குகளை எதிர்த்து எதனையும் நிறைவேற்ற முடியாது என்று மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.

2015ஆம் ஆண்டில் அவரை சிறுபான்மை மக்களே ஜனாதிபதியாக்கினர். அந்த மக்களின் கருத்தைகூட கருத்திற்கொள்ளாது மைத்திரிபால சிறிசேன கூறியமை தொடர்பில் கவலையடைகின்றேன்.

13 ஆவது திருத்தம் தமிழ் மக்களின் அரசியலமைப்பு தீர்வு அல்ல. இதுவொரு ஆரம்பப் புள்ளி மாத்திரமே. எங்களுக்கு மீளப்பெற முடியாத சமஷ்டியே தேவையாகும். 13 ஆவது திருத்தச் சட்டத்தை பௌத்த பிக்குகள் எரிக்கின்றனர். அவர்கள் எரிப்பது இந்த நாட்டையே என்பதனை புரிந்துகொள்ள வேண்டும் என்றார்.

ad

ad