வெள்ளி, டிசம்பர் 20, 2013

தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் ஆண் அனகொண்டாவை விழுங்கிய பெண் அனகொண்டா!
தெஹிவளை மிருகக்காட்சிச் சாலையில் ஆண் அனகொண்டா பாம்பு ஒன்றை, பெண் அனகொண்டா பாம்பு ஒன்று விழுங்கியுள்ளது.ஒரே கூட்டில் அடைக்கப்பட்டிருந்த ஆண் அனகொண்டா பாம்பை, குறித்த பெண் அனகொண்டா பாம்பவிழுங்கியுள்ளது.
இரண்டு பாம்புகளையும் வெவ்வேறு கூடுகளில் அடைக்குமாறு மிருக வைத்தியர்கள் பல தடவைகள் நிர்வாகத்தினரை வலியுறுத்தியுள்ளனர்.
எனினும், இந்தக் கோரிக்கையை நிர்வாகத்தினர் ஏற்றுக்கொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
2004ம் ஆண்டு இந்த இரண்டு அனகொண்டா பாம்புகளும் கொண்டு வரப்பட்டிருந்தது.
குறித்த பாம்புகளின் பல குட்டிகள் தெஹிவளை மிருகக் காட்சிச்சாலையில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.