புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 டிச., 2013





               ந்து மாநில தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, டெல்லி  சென்றிருந்த தமிழக காங்கிரஸின் மூத்த தலைவரும், கட்சியின் நிர்வாகக்குழு உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், சோனியாவை சந்தித்து தமிழக அரசியல் நிலவரம் குறித்துப்
பேசிவிட்டு சென்னை திரும்பினார். இந்தச் சூழலில், அவரை அவரது இல்லத்தில் சந்தித்து சில கேள்விகளை முன்வைத்தோம்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டம் என வர்ணிக்கப்பட்ட ஐந்து மாநில தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு பலத்த அடி விழுந்துள்ளது.இந்த தேர்தல் முடிவுகள் காங்கிரஸுக்கு பெரும் பின்னடைவு தானே?


தேர்தல் முடிவுகள் காங்கிரஸுக்கு தோல்வியைத் தந்துள்ளது என்பதை ஏற்றுக் கொள்கிறோம். ஆனால், பின்னடைவு என் பதை ஏற்க முடியாது. எத்தனையோ தேர்தல் களில் காங்கிரஸ் தோற்றிருக்கிறது. பிறகு அடுத்த தேர்தலில் இமா லய வெற்றி பெற்ற வரலாறு உண்டு. அரசியல் தெரிந்தவர்களுக்கு இந்த உண்மை புரியும்.

டெல்லி, மத்தியபிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் ம.பி. மற்றும் ராஜஸ்தானில் பா.ஜ.க. ஆட்சியும் மற்ற 3 மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியும் இருந்தது. இதில் தனது ஆட்சியை பா.ஜ.க. தக்கவைத்துக் கொண்டது மட்டுமல்லாமல் டெல்லியிலும் ராஜஸ்தானிலும் காங்கிரஸை வீழ்த்தியிருப்பதால் பா.ஜ.க.வின் செல்வாக்கு அதிகரித்திருப்பதாகத் தானே அர்த்தம்?

பா.ஜ.க.வின் செல்வாக்கு உயர்ந் திருப்பதால் அக்கட்சி வெற்றி பெற்றதாக எடுத்துக்கொள்ளக்கூடாது. காங்கிரஸ் தோற்ற மாநிலங்களில் காங்கிரஸில் நடந்த உள்கட்சி பூசல்கள்தான் பா.ஜ.க.வின் வெற்றிக்கு வழி வகுத்திருக்கிறது. அதனால் ஒவ்வொரு மாநிலத்திலும் வெடிக்கும் உள்கட்சி கோஷ்டி பூசல்களில் இருந்து காங்கிரஸ் விடுபட வேண் டும். கோஷ்டி பூசல்தான் காங்கிரஸுக்கு பெரிய எதிரி. அதனை வீழ்த்துவதில் காங் கிரஸ் தோற்றுப்போவதால் பலவீனமான பா.ஜ.க. பூதாகரமாக தெரி கிறது.மேலும் காங்கிரஸின் சாதனைகளை மக்க ளிடம் சரியாக கொண்டு சேர்ப்பதிலும்  காங்கிரசின் வேகம் போதாது.  மற்றபடி பா.ஜ.க.விற்கு மக்கள் ஆதரவு பெருகி விட்டதாக சொல்வதெல்லாம் ஹம்பக்.

பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் பிரச்சாரத்தில் உருவான அலைதான் காங்கிரஸை வீழ்த்தியது என்கிறார்களே?

மோடியாவது... மூடியாவது... எந்த அலையும் இந்த தேர்தலில் வீசவில்லை. அதெல்லாம் ஒரு மாயை. பிரதமர் வேட்பாளர்னு அறிவிக்கப்பட்டவரின் பிரச்சாரம் மக்கள் நலன் சார்ந்த பிரச்சாரமாக இருக்க வேண்டும். அப்படியா இருந்தது? நான்காம் தர அரசியல்வாதியின் பிரச்சாரம் போலல்லவா இருந்தது. "மோடி வித் லேடி' என்கிற செய்தியே அவர் எப்படிப்பட்டவர் என்று காட்டியது. அதனை காங்கிரஸ் பூதாகரமாக்கியிருந்தால்... மோடி காணாமல் போயிருப்பார். அந்த ஆபாசமான அரசியலை காங்கிரஸ் கையிலெடுக்க விரும்பவில்லை. மோடி அலை என்று பா.ஜ.க. சொல்லுதே ஒழிய மக்கள் சொல்லவில்லை. அதனால் மோடியின் வித்தை நாடாளுமன்ற தேர்தலில் பலிக்காது. 



காங்கிரஸின் பலகீனமான தலைமைதான் இந்த தோல்விக்கு காரணமென்று காங்கிரஸின் தோழமைக்கட்சி தலைவர்களான சரத்பவாரும் ஃபரூக் அப்துல்லாவும் சொல்லியிருக்கிறார்களே? 


சோனியாவும் ராகுலும்தான் காங்கிரஸ் கட்சியின் பலம். இதை உணர்ந்ததால்தான் காங்கிரஸோடு அவர்கள் கூட்டணி உறவு வைத்துள்ளனர். இன்றைக்கு மாநில தேர்தலில் தோல்வியடைந்ததற்காக "பலகீனமான தலைமை' என்று சொல்வது ஆரோக்கியமானதல்ல. மூத்த அரசியல் தலைவர்களான அவர்களே அரசியலை கணிக்கத் தவறுகிறார்களோ என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

தேர்தல் முடிவுகளை வைத்து பா.ஜ.க.வை நோக்கி தி.மு.க. நகர்வதாகச் சொல்லப்படுகிறது? 


தி.மு.க., காங்கிரஸின் ஆரோக்கியமான தோழமை கட்சி. சில கருத்து வேறுபாடுகளால் பிரிவு ஏற்பட்டி ருக்கிறது. இது நிரந்தரம் என்றும் சொல்ல முடியாது. நெருக்கடி என்றும் சொல்ல முடியாது. இது ஒரு புறமிருக்கட்டும். மதச்சார்பின்மையை தூக்கிப்பிடிக்கும் மூத்த தலைவர்களில் கலைஞர் முதன்மையானவர். மத்தியில் மதவாத சக்திகள் தலைதூக்கக் கூடாது என்கிற கருத்தில் அழுத்தமாக இருப்பவர். அதனால் பா.ஜ.க.வுடன் தி.மு.க. கூட்டணி சேரும் என்று சொல்வதில் எனக்கு நம்பிக்கை இல்லை. பா.ஜ.க.வுடன் கூட்டணி வரவேண்டும் என தி.மு.க.வில் சிலர் விரும்பலாம். சிலரின் விருப்பத்திற்கெல்லாம் கூட்டணியை உருவாக்குவாரா கலைஞர் என்பதிலும் எனக்கு நம்பிக்கை கிடையாது. இன்னும் சொல்லப் போனால்,…எனக்கு கிடைத்த தகவல்படி தமிழக பா.ஜ.க.தான் தி.மு.க. கூட்டணிக்கு வலை விரிக்கிறதே தவிர தி.மு.க. அந்த முயற்சியை எடுப்பதாகத் தெரிய வில்லை.

நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸை தனிமைப்படுத்தும் முகமாக அதனுடன் மீண்டும் கூட்டணி உறவை ஏற்படுத்தக் கூடாது என்பது தி.மு.க. தொண்டர்களின் கருத்தாக இருந்து அந்தக் கருத்துக்கு கலைஞர் மதிப்பளித்தால்...?


தேர்தலுக்கு நாட்கள் இருக்கிறது. யார், யாருடன் கூட்டணி அமைப்பார்கள் என்பதெல்லாம் இப்போதே முடிவாகிற விஷயம் அல்ல. காங்கிரஸை யாரும் தனிமைப்படுத்தி விட முடியாது.

ஜெயலலிதாவின்  பிரதமர் கனவு குறித்து? 


கனவு காண்பதற்குக்கூட அவருக்கு உரிமை இல்லையா? ஜனநாயக நாட்டில் எல்லோரும் கனவு காணலாம். ஜெயலலிதா மட்டும் அதற்கு விதி விலக்கா என்ன?  மம்தா, சுஷ்மா, மாயாவதி, அத்வானி, மோடி, நிதிஷ்குமார் எல் லோரும் அதே கனவில்தான் மிதக்கிறார்கள். ஏன், தேவகௌடாவைக் கூட அந்த கனவு இம்சைப்படுத்துவதாக கேள்விப்பட்டேன். அதனால், கனவுதானே... காணட்டும். அதில் உங்களுக்கும் எனக்கும் என்ன பிரச்சினை?

ad

ad