புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 டிச., 2013



சூடு பிடிக்கும் கருத்தடை விவகாரம்: நீதி கோரி கிளிநொச்சியில் வழக்குத் தாக்கல்

கருத்தடை செய்யப்பட்டதை அடுத்து மரணித்த பெண் தொடர்பாக நீதியான விசாரணை வேண்டுமென கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றத்தில் இன்று (19) வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கிளிநொச்சி, மலையாள்புரம் பகுதியில் அண்மையில் கருத்தடை செய்யப்பட்டதன் பின்னர் மரணமடைந்திருந்த சதீஸ் மஞ்சுளாவின் மரணம் தொடர்பாகவே நீதியான விசாரணை வேண்டும் என்று இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மனித உரிமைகள் இல்லத்தைச் சேர்ந்த சிரேஸ்ட சட்டத்தரணிகளான ஸ்ரீ சிவாயா, ப.குகணேஸ்வரன், திருமதி. ம.ரசிதா ஆகியோர் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளனர். வழக்கை கவனத்திற்கொண்ட நீதவான் எதிர்வரும் 24ஆம் திகதி இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
இதேவேளை, வடமாகாணசுகாதார அமைச்சர் வைத்தியகலாநிதி ப.சத்தியலிங்கம் கருத்தடை செய்யப்பட்டதில் தவறுகள் எதுவும் இடம்பெறவில்லை என அண்மையில் கருத்து வெளியிட்ட பின்னரே இவ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ad

ad