புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

20 டிச., 2013

நடிகர் விஜய் தன்னை வைத்து படம் தயாரித்த5 தயாரிப்பாளர்களுக்கு தலா 5 லட்சம் வழங்கினார் 
நடிகர் விஜய் திரைத்துறைக்கு வந்து 22-வருடங்கள் ஆகிவிட்டது. இவர் தற்போது தனது 56-வது படமாக ‘ஜில்லா’ படத்தில் நடித்து வருகிறார். இப்படம் பொங்கல் வெளியீடாக வருகிறது. இந்நிலையில், விஜய் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகும்போது
தன்னை வைத்து தயாரித்த 5 தயாரிப்பாளர்களுக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கும் நிகழ்ச்சி இன்று சென்னையில் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடைபெற்றது.


இந்த விழாவில், நடிகர் விஜய், ‘ஜில்லா’ பட இயக்குனர் நேசன், இசையமைப்பாளர் டி.இமான் ஆகியோர் கலந்து கொண்டனர். தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரியும் கலந்து கொண்டார்.


இவ்விழாவில் விஜய்யை வைத்து ‘வசந்த வாசல்’ என்ற படத்தை தயாரித்த எம்.ராஜராம், ‘ராஜாவின் பார்வையிலே’ படத்தை தயாரித்த எஸ்.சவுந்திரபாண்டியன், ‘மின்சார கண்ணா’ படத்தை தயாரித்த ஆர்.சாந்தா கே.ஆர்.ஜி., ‘ஒன்ஸ்மோர்’ படத்தை தயாரித்த சி.வி.ராஜேந்திரன், ‘விஷ்ணு’ படத்தை தயாரித்த எம்.பாஸ்கர் அவருடைய மகன் பாலாஜி பிரபுவுக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கி கௌரவித்தார். மனிதநேய அடிப்படையில் இந்த பணத்தை விஜய் வழங்கியது அனைவரையும் நெகிழவைத்தது.