புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 டிச., 2013

நிதியுதவிகள் தமிழ் சமூகத்திற்கு செல்லும் என எண்ணியே புலம்பெயர் தமிழர்கள் புலிகளுக்கு நிதி வழங்கினர்!- அமெரிக்காவிடம் கோத்தபாய தெரிவிப்பு
அமெரிக்காவில் உள்ள புலம்பெயர் தமிழர்களிடம் விடுதலைப் புலிகள் நிதி சேகரிப்பதை அனுமதித்தால் விடுதலைப்புலிகளின் வன்முறைக்கு ஆதரவான நிலை தொடரும் என முன்னாள் அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம அமெரிக்காவிடம் தெரிவித்திருந்தாக விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.
வன்முறையை குறைத்து அரசியல் செயற்திட்டத்தை வெளிக்கொண்டு வர வேண்டும்.ஆனால் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் சேகரிக்கப்படும் நிதியை பயன்படுத்தி ஆயுதங்கள் கொள்வனவு செய்யப்படுவதுடன் அந்த ஆயுதங்கள் நாட்டில் தாக்குதல்களை நடத்த பயன்படுத்தப்படுகிறது.
வெளிநாட்டு நிதி உதவிகள் இல்லை என்றால் விடுதலைப் புலிகள் தனிமைப்படுத்தப்படுவார்கள். காரணம் தமது சொந்த சமூகத்தின் இழப்புகள் அவர்கள் மீது சுமத்தப்படும் எனவும் போகொல்லாகம கூறியுள்ளார்.
இலங்கை இந்த பிரச்சினையை தொடர்ந்தும் எழுப்பும் காரணம் இலங்கை தனது நிலைப்பாட்டில் தெளிவாக உள்ளது என போகொல்லாகம தெளிவுப்படுத்தியதாக பிலிப்பைன்ஸ் நாட்டுக்கான அமெரிக்க தூதுவர் வாஷிங்டனுக்கு அறிவித்துள்ளார்.
2007 ஜூலை மாதம் 31 ஆம் திகதி பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அமெரிக்க பிரதிச் செயலாளர் ஜோன் நெக்ரோபொன்ட்டை சந்தித்தமை தொடர்பான அமெரிக்காவின் இரகசியமான ராஜதந்திர கேபிள் தகவலை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.
புலம்பெயர் தமிழர்கள் விடுதலைப் புலிகளின் தீவிரவாதத்திற்காக நிதியுதவிகளை வழங்கவில்லை எனவும் ஆனால் தமது தாயகத்திற்கு நிதிப் பங்களிப்பை வழங்க வேண்டும் என்ற ஆசையில் அவர்கள் புலிகளுக்கு நிதியுதவியளித்து வருவதாகவும் இதன் போது கோத்தபாய ராஜபக்ச கூறியுள்ளார்.
தாம் வழங்கும் நிதி தமிழ் சமூகத்திற்கு போய் சேருகின்றது என்று புலம்பெயர் தமிழர்கள் நினைக்கின்றனர்.
ஆனால் அந்த நிதி ஆயுதங்களை கொள்வனவு செய்ய பயன்படுத்தப்படுகிறது என கோத்தபாய தெரிவித்ததாக அந்த இரகசிய கேபிள் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ad

ad