புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 டிச., 2013

சிறீதரன் எம்.பியின் கேள்விக்கு விடை! கிளிநொச்சியில் சர்வதேச தரத்தில் விளையாட்டு மைதானம்
கிளிநொச்சியில் சர்வதேச தரத்திலான விளையாட்டு மைதானம் 324 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த விளையாட்டு மைதானத்தை அரச பொறியியற் கூட்டுத்தாபனம் நிர் மாணிப்பதுடன் 2014ம் ஆண்டு நடுப் பகுதியில் பூர்த்தி செய்யப்படும் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.
விளையாட்டுத்துறை அமைச்சரின் மாகாண மற்றும் மாவட்ட விளையாட்டு கட்டடத் தொகுதியை நிர்மாணித்தல் என்ற தலைப்பின் கீழ் அமைச்சரவைக்கு சமர்ப்பித்து 2012ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20ம் திகதி இதற்கு அங்கீகாரம் பெறப்பட்டது என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் கேட்டிருந்த வாய்மொழி மூல விடைக்கான வினாவுக்கு பதிலளிக்கும் விதத்தில் நேற்று சபையில் சமர்ப்பிக்கப்பட்ட விடையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேள்வியை கேட்ட சிறிதரன் எம்.பி. சபையின் இல்லாததால் விடை சபையில் சமர்ப்பிக்கப்பட்ட

ad

ad