புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 டிச., 2013

கோவையில் ‘குடிமகள்’கள் தொல்லை : அரை குறை ஆடையில் நடுரோட்டில் ஆட்டம் - பாட்டம்
 கோவை உக்கடம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் நேற்று மாலை 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ஆப் பாட்டில் மது வாங்கினார். ரோட்டோரத்தில் நின்று ராவாக குடித்த அவர், சில நிமிடங்களில் தள்ளாட தொடங்கினார்.
பஸ் ஸ்டாண்ட் வழியாக வின்சென்ட் ரோட்டில் நுழைந்தார்.


அப்போது கட்டியிருந்த சேலை அவிழ்ந்தது. முந்தானையை வீசி விட்டு பாட்டிலும் கையுமாக நடந்த அந்த பெண்ணை, பள்ளி மாணவ மாணவிகள் உள்பட பலர் வேடிக்கை பார்த்தனர். அவர் திடீரென பாட்டிலுடன் டான்ஸ் ஆட தொடங்கினார். இது குறித்து உக்கடம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ரோந்து போலீசார் உடனடியாக வந்து அந்த பெண்ணிடம் இருந்த ஆப் பாட்டிலை பறித்து கொண்டு சென்றனர்.
போலீசார் பெண்ணை அழைத்து விசாரிப்பார்கள், நடவடிக்கை எடுப்பார்கள் என எதிர்பார்த்திருந்த மக்களுக்கு போலீசாரின் நடவடிக்கை வியப்பை ஏற்படுத்தியது. போலீசாரிடம் பாட்டிலை பறி கொடுத்த போதை பெண் ரோட்டில் உட்கார்ந்து கதறினார். ரொம்ப நாள் கழிச்சு ‘ஆப்‘ பாட்டில் வாங்கிட்டு வந்தேன். அதுவும் போச்சே என அவ்வழியாக வந்தவர்களிடம் குமுறினார்.


ஆப் போனா என்ன, கையில நூரு ரூவா இருக்கு, அதுல குவார்ட்டர் வாங்கி குடுக்கிறேன், யார் தடுக்கிறாங்கன்னு பார்க்கிறேன்னு சவால் விட்ட அவர் மீண்டும் டாஸ்மாக் நோக்கி தள்ளாடியபடி சென்றார். இதை பார்த்த அந்த பகுதி மக்கள், இந்த பெண் இப்படி குடிச்சுட்டு திரியுதே என தலையில் அடித்து கொண்டனர். உக்கடம் பஸ் ஸ்டாண்ட் அருகே இரண்டு டாஸ்மாக் கடைகள் உள்ளது.
இந்த கடையில் உள்ள பாரில் பெண்கள் சிலர் மது குடிக்கின்றனர். அதிக போதையில் பெண்கள் விழுந்து கிடப்பதும் நடக்கிறது. இதனால் பார் ஊழியர்கள் பெண்களை பாரில் மது குடிக்க அனுமதிக்காமல் வீட்டுக்கு அனுப்பி வைக்கும் சம்பவங்கள் நடக்கிறது. வீட்டுக்கு செல்லும் வழியில் சரக்கு அடிக்கும் ‘குடிமகள்‘களால் தொல்லை ஏற்படுவதாக மக்கள் புலம்புகின்றனர்.

ad

ad