புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

20 டிச., 2013

டுபாய் மரியோட் விடுதியில் கோத்தபாய என்ன செய்தார்? முன்னணி ஆயுத முகவர்களுடன் இரகசிய சந்திப்பு?

பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச துபாயிலுள்ள மெரியட் ஹோட்டலில் முன்னணி ஆயுத முகவர்கள் சிலரை இரகசியமான முறையில் சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சந்திப்பு நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பை அடுத்து அன்றைய தினம் இரவே துபாயில் இருந்து பாதுகாப்புச் செயலாளர் இலங்கை திரும்பியுள்ளார்.

ராஜபக்ச குடும்பத்தினர் வெளிநாடுகளுக்கு செல்லும் தேவை ஏற்படும் போது, ராஜபக்ஷ குடும்பத்தில் தமக்கு அழுத்தங்கள் இருப்பதாக கூறுவதும், இல்லை என்றால் புற்றுநோய் போன்ற கடுமையான நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிப்பது அல்லது குடும்பத்தினருடன் உள்ள தொடர்புகள் பாதிக்கப்பட்டுள்ளது எனக் கூறுவது போன்ற மோசடியான தந்திரங்களை பயன்படுத்தி செல்லவிரும்பும் நாடுகளுக்குள் இலகுவாக சென்று வருவதாக நம்பிக்கையான தரப்புத் தகவல்கள் தெரிவிப்பதாக இணையத்தளம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.

2ம் இணைப்பு

டுபாய் மரியோட் விடுதியில் கோத்தபாய என்ன செய்தார்? யாரைச் சந்தித்தார்?

உலகின் முன்னணி ஆயுத விநியோகத்தர்கள் சிலரை பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்‌ச மிகவும் இரகசியமாக சந்தித்துள்ளதாக இராஜதந்திர தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்‌ச அண்மையில் அமெரிக்கா சென்று திரும்பும் வழியில் கடந்த 18ம் திகதி புதன்கிழமை டுபாய் மரியோட் (Marriott) விடுதியில் தங்கியுள்ளார். அன்றைய தினம் இரவே கோத்தபாய ஆயுத விநியோகத்தர்களைச் சந்தித்துள்ளதாக தெரியவருகிறது.

தென் இலங்கை கடற்பரப்பில் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்‌சவிற்குச் சொந்தமான மிதக்கும் ஆயுத களஞ்சியம் ஒன்று இருப்பதாக அண்மையில் தகவல்கள் வெளிவந்திருந்தன.

சட்ட எல்லைக்கு புறம்பாக இந்து சமுத்திரத்தில் மிதக்கும் ஆயுத களஞ்சியம் இயங்கி வருவது இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என அந்நாட்டின் கடற்படைத் தளபதி அட்மிரல் டி.கே. ஜோஷி அறிவித்திருந்தமையும் நினைவூட்டத்தக்கது.

சர்வதேச கடல்சார் அமைப்பு இந்த மிதக்கும் ஆயுத களஞ்சியம் தொடர்பில் பொருத்தமான கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் இந்து சமுத்திரத்தில் இடம்பெறும் மிகப் பெரிய சட்டவிரோத நடவடிக்கையாக இது மாறிவிடும். அது மட்டுமல்ல இந்தியாவின் பாதுகாப்புக்கும் பெரும் அச்சுறுத்தலாக அமையும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

உச்சபட்ச அதிகாரங்களுடன் இருக்கும் பாதுகாப்புச் செயலாளர் இவ்வாறு சட்ட எல்லைக்குப் புறம்பாக மிதக்கும் ஆயுதக் களஞ்சியத்தை நிர்வகித்து வரும் வேளையில், உலகின் முன்னணி ஆயுத விநியோகத்தர்களுடன் நடத்தப்பட்டுள்ள தற்போதைய சந்திப்பு மேலும் பல கேள்விகளை எழுப்பியுள்ளதாக இராஜதந்திர தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையின் இவ்வாறான செயல்பாடுகள் இந்தியாவிற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளதாகவும், இவை இந்திய - இலங்கை உறவுகளில் மேலும் சிக்கல்களை ஏற்படுத்தும் எனவும் அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.