புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 டிச., 2013



நாடாளுமன்றத் தேர்தலில், சிவகங்கைப் பாராளுமன்றத் தொகுதியின் பி.ஜே.பி.வேட்பாளர் நான்தான் என தொகுதியில் வலம் வந்துகொண்டிருக்கும் பி.ஜே.பி. மாநிலத் துணைத் தலைவர்  ஹெச்.ராஜாவிற்கு எதிராக, தமிழகம் முழுவதுமுள்ள காவிக் கட்சிக்காரர்களின் வீட்டிற்கு "பி.ஜே.பி. மாநிலத் துணைத் தலைவர் ஹெச்.ராஜாவின்
தில்லாங்கடி மோசடிகள்' என்ற தலைப்பில் 8 பக்க கடிதம் சென்றடைய, தமிழக பி.ஜே.பி. கட்சியின் தலைமைக்குள் மோதல் துவங்கியுள்ளது.

நம்மைத் தொடர்புகொண்ட நகரத்தாரான திருச்சியை சேர்ந்த பழனியப்பன்-ரேவதி தம்பதியினர்...

""பாரதிய ஜனதா கட்சியின் சின்னமான தாமரையின் பெயரில் "லோட்டஸ் பெனிபிட் பண்ட்' என்ற நிதி நிறுவனத்தை குடும்ப நிறுவனமாக 1997-ம் ஆண்டு காரைக்குடியில் துவக்கினார் ஹெச்.ராஜா. அப்பொழுது நான் திருச்சி மாவட்ட பி.ஜே.பி.கட்சியின் மாவட்டத் தலைவராக இருந்தேன். ராஜா, மாநில செயலாளராக இருந்த பரிச்சயத்தால், அவர் மேலுள்ள நம்பிக்கையால், அவர் கேட்டுக்கொண்டபடி, முதலில் ரூ.ஐம்பதாயிரம் மட்டும் "லோட்டஸ் பெனிபிட் பண்ட்'டில் முதலீடு செய்தேன். அதற்கு 2 வட்டி வீதம் கொடுத்திருந்தார். அதற்குப் பிறகு, ரூ.2 லட்சம் கூடுதலாக முதலீடு செய்தேன். அதற்குப் பிறகு ரூ.8 லட்சம் என பத்தரை லட்சம் ரூபாயை அந்த நிறுவனத்தில் முதலீடு செய்திருந்தேன். திடுமென வட்டி வருவது நின்று விட... என்ன என்று கேட்டதற்கு, "நிறுவனத்தில் திருடு போய்விட்டது' என்றார். அதற்குப் பிறகு இன்றுவரை திருச்சியிலிருந்து, காரைக்குடிக்கு 200 தடவைக்கு மேல் வந்து சென்றுவிட்டேன். அவர் எனக்குப் பணத்தைக் கொடுப்பதாகத் தெரியவில்லை. ஆளை வைத்து கொலை செய்வதாக மிரட்டுகிறார். என்னைப் போல் அந்த நிதி நிறுவனத்தில் ஏமாந்தவர்கள் அதிகம். பணத்தை இழந்த அத்தனைப் பேரும் எங்களது பி.ஜே.பி- கட்சியினரே. கட்சியில் மாவட்டப் பொறுப்பிலிருந்த எனக்கே இந்த நிலை என்றால், மற்றவர்களின் நிலை வாய் மூடி மௌனித்திருப்பதே...'' என்றார் பழனியப்பன்.

முன்னாள் தேசியக்குழு உறுப்பினரும், அவருடைய மனைவியுமான ரேவதி பழனியப்பனோ, ""முதலில் ரூ.ஐம்பதாயிரம், அடுத்து ரூ.இரண்டு லட்சம் என அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தது போதும் என்றிருந்தோம். அப்போது  சின்னக்கடை வீதியில் எங்களுக்கு சொந்தமான சொத்தை விற்று வங்கியில் போட்டு வைத்திருந்தோம். அதை தெரிந்துகொண்ட ஹெச்.ராஜா, "பேங்க்கில்- சும்மாதானே பணம் கிடக்குது. இதை எங்ககிட்ட முதலீடு செஞ்சா, 2 வட்டி கிடைக்குமில்ல' என்றார். நாங்களும் அவர் பேச்சை நம்பி முதலீடு செய்து, நடுத்தெருவில் நிற்கிறோம். இப்ப, என் பெண்ணிற்கு திருமண ஏற்பாடு நடக்குது. அதற்காகக் கூட தந்துவிடலாமில்லையா..? வரும் தை பொங்கலுக்குள் எங்களுக்கு தரவேண்டிய பணத்தை தராவிட்டால்  நான், என் கணவர், என் மகள் உட்பட மூன்று பேரும் ஹெச்.ராஜா வீட்டின் முன்னால் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளோம்'' என்றார் அவர்.  

""கட்சியில் சிலநபர்களின் தூண்டுதலால் அவர்கள் அப்படி பேசுகிறார்கள். அந்த நிறு வனத்திலிருந்து நான் வெளியேறி பத்து வருடங்களுக்கு மேலாகிவிட்டது. அந்த நிறு வனத்தை நடத்தியது என்னுடைய மைத்துனரே. இதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அதற்கான அனைத்து டாக்கு மெண்டுகளும் என்னிடம் உள்ளன'' என்றார் ஹெச்.ராஜா நம்மிடம். இது இப்படியிருக்க... பி.ஜே.பி.கட்சிக் காரர்களுக்கு அனுப்பப்பட்ட கடிதம் போன்று அனைத்து சங்க் பரிவார் அமைப்புக்களுக்கும் கடிதம் அனுப்பத் தொடங்கியுள்ளது முகவரியில்லாத எதிர்தரப்பு.             

ad

ad