புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

20 டிச., 2013


செங்கோட்டையை அதிமுக அடைவதை யாராலும் தடுக்க முடியாது : ஜெயலலிதா
பாராளுமன்ற அமைப்பிலும், செங்கோட்டை அமைப்பிலும் அதிமுக செயற்குழு - பொதுக்குழு கூட்ட அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.   இக்கூட்டத்தில் பேசிய ஜெயலலிதாவின் பேச்சிலும் செங்கோட்டை கனவுதான் வெளிப்பட்டது. அ.தி.மு.க. செயற்குழு–பொதுக்குழு கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளரும், தமிழக முதலமைச்சருமான ஜெயலலிதா தலைமையில் இன்று நடந்தது.
பொதுக்குழு கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. மக்களவை தேர்தல் குறித்து முடிவு எடுக்க ஜெயலலிதாவுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இலங்கை கடற்படை வீரர்களுக்கு பயிற்சி தரக்கூடாது என்று தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. 

தமிழகத்தின் திட்டங்களுக்கு போதிய நிதி அளிக்காத மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.  பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதி களையும் கைப்பற்ற இலக்கு நிர்ணயித்து தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
கூட்டத்தில் பேசிய முதல் அமைச்சர் ஜெயலலிதா,  தேர்தல் குறித்து முடிவு எடுக்க அதிகாரம் வழங்கியதற்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். மத்தியில் தற்போது உள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை தூக்கி எறியவேண்டும்.


அடுத்த ஆண்டு அ.தி.மு.க. செயற்குழு–பொதுக்குழு கூட்டம் நடைபெறும் போது நாட்டை வழி நடத்தும் சக்தியாக அ.தி.மு.க. இருக்க வேண்டும். செங்கோட்டையை அ.தி.மு.க. அடைவதை யாராலும் தடுக்க முடியாது. 40 தொகுதியிலும் வெற்றி பெற்றால்தான் இது சாத்தியமாகும்.  தேர்தலில் அ.தி.மு.க. வெற்றிபெற பாடுபடுமாறு தொண்டர்களுக்கு  அழைப்பு விடுத்தார்.