புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 டிச., 2013


இந்தியாவின் பிரதமரை தீர்மானிக்கும் வாய்ப்பு தமிழகத்துக்கும் வந்துள்ளதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் தெரிவித்துள்ளார்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் நேற்று இது தொடர்பில் யோசனை ஒன்றை நிறைவேற்றியுள்ளது.

இதுவரைகாலமும் கர்நாடகா, குஜராத், பஞ்சாப், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களின் மக்கள் தமது சார்பில் பிரதமர்களை தெரிவுசெய்தனர்.
தற்போது தமிழகத்துக்கு அதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்று ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.
இந்த தீர்மானத்தின் மூலம் எதிர்வரும் லோக்சபா தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் முக்கிய பங்கை ஆற்றவுள்ளமையை ஜெயலலிதா சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜெயலலிதாவின் மூலம் மாத்திரமே இந்தியாவில் ஜனநாயகத்தை நிலைநாட்ட முடியும் என்று குறித்த தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஜெயலலிதாவின் அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் தமிழகத்திலும் புதுச்சேரியிலும் 39 லோக்சபா தொகுதிகளில் தனித்து போட்டியிடவுள்ளது.
கட்சியின் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர் செய்தியாளர்கள் மத்தியில் உரையாற்றிய ஜெயலலிதா தம்மை பிரதம மந்திரி வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்பது கட்சி உறுப்பினர்களின் விருப்பம் என்று குறிப்பிட்டார்.
எனவே தாம் அதனைப் பற்றி எதுவும் கூறமுடியாது என்று ஜெயலலிதா குறிப்பிட்டார்.
நடைமுறை காங்கிரஸ் அரசாங்கத்தின் காலத்தில் விலையுயர்வுகள் காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை போன்ற நாடுகளால் ஆபத்துக்கள் ஏற்பட்டுள்ளன என்று ஜெயலலிதா குற்றம் சுமத்தினார். எனவே அதனை தூக்கிய எறியவேண்டிய காலம் வந்து விட்டது என்றும் அவர் கூறினார்.
இந்தநிலையில் அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் “ரெட் போட் எக்ஸ்பிரஸ்” கடுகதி புகையிரதம் போல டெல்லி செங்கோட்டையை நோக்கி புறப்படவுள்ளது.
ஏற்கனவே “போட் சென் ஜோர்ஜ் எக்ஸ்பிரஸ்” மூலம் அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் தமிழகத்தின் ஆட்சியை எம் ஜி ஆர் காலத்தில் 3 தடவைகள் உட்பட்ட 6 தடவைகள் கைப்பற்றியுள்ளது.
இந்தநிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மக்களின் ஆசியுடன் அந்த புகையிரத இயந்திரத்தை இயக்கிச் செல்லப்போவதாக ஜெயலலிதா குறிப்பிட்டார்.

ad

ad