புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

20 டிச., 2013

உயர்தர பரீட்சை விஞ்ஞான பிரிவில் முதலிடம் பெற்று மட்டு. புனித மைக்கேல் கல்லூரி மாணவன் சாதனை
க.பொ.த. உயர்தர பரீட்சையில் மட்./ புனித மைக்கேல் கல்லூரி மாணவன் விஞ்ஞான பிரிவில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலாம் இடத்தினைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.
மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரி மாணவனான குழந்தைவடிவேல் சரண் என்ற மாணவனே மாவட்டத்தில் முதல் நிலைபெற்று மருத்துவபீடத்துக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளார்
இவர் க.பொ.த சாதாரண தரப்பரீட்சையில் எட்டு ஏ சித்திகளையும் ஒரு பி சித்தியையும் பெற்றிருந்ததுடன் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் மாவட்டத்தில் பத்தாவது இடத்தினையும் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்திருந்தார்.
இவர் வர்த்தகர் குழந்தைவடிவேல்- சுபா தம்பதியரின் புதல்வராவார்.
இவருக்கு பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.