புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 டிச., 2013

அதிமுக, காங்கிரஸ், பாஜகவுடன் கூட்டணி வைத்துக்கொண்டால்
 மார்க்சிஸ்ட் அவர்களோடுதான் இருக்குமா?கலைஞர்


திமுக தலைவர் வெளியிட்டுள்ள கேள்வி - பதில் அறிக்கை:
கேள்வி :- காங்கிரசுடனும், பா.ஜ.க.வுடனும் கூட்டணி கொள்வது பற்றி நீங்கள் பொதுக்குழுவில் பேசியதற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்
மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் எந்தக் காரணம் கொண்டும், தி.மு.க. வுடன் அவர்கள் கட்சி தேர்தல் உடன்பாடுவைத்துக் கொள்ளாது என்று சொல்லியிருக்கிறாரே?


கலைஞர் :- கம்யூனிஸ்ட் கட்சிகளோடு கூட்டணி கொள்வதைப் பற்றி நாங்களே நினைத்துக்கூடப்பார்க்காத காரணத்தால்தான் நான் பொதுக் குழுவில் அவர்களைப் பற்றியே பேசவில்லையே?அவர்களுக்கு அடுத்த நாடாளுமன்றத் தேர்தலைவிட, மாநிலங் களவைத் தேர்தலில் இந்தியக்கம்யூனிஸ்ட் கட்சிக்கு டி.ராஜா விற்கும், அடுத்த மாநிலங்களவைத் தேர்தலில் டி.கே.ரெங்கராஜனுக்கும்இடம் பெறுவது முக்கிய மாகும். இவர்கள் இருவரும் ஏற்கனவே மாநிலங் களவை உறுப்பினர்களாகவருவதற்கு தி.மு.க. தேவைப்பட்டது. அதனால் அப்போது தி.மு.க.வோடு கம்யூனிஸ்ட்கள் கூட்டணிவைத்துக் கொண்டார்கள் போலும்! எப்படிப்பட்ட கட்சி, இப்போது எப்படி ஆகிவிட்டது?


அ.தி.மு.க.வோடு சேர்ந்து, நாடு தழுவிய அளவில் மதச்சார்பற்ற கட்சிகளை இணைக்க மார்க்சிஸ்ட்\ கம்யூனிஸ்ட் கட்சி முயற்சித்து வருகிறது என்று ராமகிருஷ்ணன் கூறுகிறார்! தமிழ்நாட்டு மக்களுக்குமிகவும் தேவையான, அத்தியாவசியமான சேது சமுத்திரத் திட்டம் கூடவே கூடாதென்று அ.தி.மு.க.உச்ச நீதிமன்றம் வரை சென்று வழக்காடி வருகிறதே; அதுவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்குஉடந்தையான செயல்பாடுதானா? நல வாரிய குளறுபடிகளுக்கு முடிவுகட்ட வேண்டுமென்று17-12-2013 அன்று சி.ஐ.டி.யு. சார்பில் தமிழகமெங்கும் போராட்டம் நடத்தியிருக்கிறார்களே, அதுஅ.தி.மு.க. அரசை எதிர்த்துத்தானே? ஏன் 18-12-2013 தேதிய “தினத்தந்தி” நாளேட்டில், மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி நூதனப் போராட்டம் என்ற தலைப்பில், எருமை மாட்டிடம் கோரிக்கை மனுகொடுக்கும் காட்சியைப் புகைப்படத்தோடு வெளியிட்டிருக்கிறார்கள். அந்த அளவிற்கு இன்றையஆட்சியாளர்கள் மீது நல்ல அபிப்பிராயம்!


ஊழல் குற்றச்சாட்டுகளில் தி.மு.க.வுக்கு பங்கு உள்ளது என்று ராமகிருஷ்ணன் கூறியிருக்கிறாரே;அந்தக் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுவிட்டதா? வழக்கு விசாரணையிலேதான் இருக்கிறது.அப்படியென்றால், சொத்துக் குவிப்பு ஊழல், டான்சி நில ஊழல், கொடைக்கானல் ஓட்டல் ஊழல்,நிலக்கரி இறக்குமதியில் ஊழல், ஸ்பிக் பங்கு ஊழல், ஆம்னி பஸ் வரி குறைப்பு ஊழல் என்ற நீண்டபட்டியலுக்கு உரியவர் யார்? ஊழல் புகார் அ.தி.மு.க. மீது சொல்லப்பட்டால் அது கணக்கில் வராது,தி.மு.க. மீது ஊழல் புகார் என்றால்தான் கம்யூனிஸ்ட்களுக்கு இடிக்குமோ?


ஏனென்றால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக தோழர் வரதராஜன் இருந்தபோது, சிறுதாவூரில் “தலித்” மக்களுக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தை, ஜெயலலிதா குழுவினர் ஆக்கிரமித்துக் கொண்டதாக, முதலமைச்சராக இருந்த என்னிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கள் புகார் மனு கொடுத்து, நானும் அதனை உடனடியாக ஏற்று “சிவசுப்ர மணியம் கமிஷன்” நியமிக்கப்பட்டதே, அந்த ஊழல் எல்லாம் அந்தக் கட்சிக்கு ராமகிருஷ்ணன் பொறுப்பாளராக ஆகிவிட்டதால், வசதியாக மறந்து விட்டதா? காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. அல்லாத அணியை தி.மு.க. அமைத்தாலும் ஏற்கமாட்டோம் என்று கூறுகின்ற ராமகிருஷ்ணன், அ.தி.மு.க., காங்கிரஸ் கட்சியுடனோ, பா.ஜ.க.வுடனோ கூட்டணி வைத்துக் கொள்ளுமே யானால், அப்போதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அவர்களோடுதான் இருக்குமா?

ad

ad