புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 டிச., 2013

பாராளுமன்ற உறுப்பினர் பியசேன உண்ட வீட்டுக்கே இரண்டகம் செய்கிறார் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இராஜேஸ்வரன்

அம்­பாறை மாவட்ட தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்­காக அளித்த வாக்­கு­களால் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான பிய­சேன இன்று கூட்­ட­மைப்பு பற்றி பேசு­வது வேடிக்­கை­யா­க­வுள்­ளது. முடிந்தால் கூட்­ட­மைப்­பி­லி­ருந்து இரா­ஜி­னாமா செய்­து­விட்டு
தேர்தல் கேட்டு எம்.பி. யாகட்டும் பார்க்­கலாம் என கிழக்கு மாகா­ண­சபை உறுப்­பினர் மு. இரா­ஜேஸ்­வரன் தெரி­வித்தார்.
காரை­தீவு 2003 உயர்­த­ரப்­பி­ரிவு சமூக அமைப்பின் வரு­டாந்த ஒன்று கூடல் தலைவர் அரு­ளா­னந்தம் வாகீசன் தலை­மையில் நடை­பெற்ற போது அதில் பிர­தம அதி­தி­யாக கலந்து கொண்டு உரை­யாற்­று­கையிலேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.
வைப­வத்தில் காரை­தீவு பிர­தேச சபை உப­த­வி­சாளர் கே.தட்­ச­ணா­மூர்த்தி, மனித உரி­மைகள் இல்ல அக்­க­ரைப்­பற்று பொறுப்­பாளர் நிசாந்­தினி ஆகியோர் கெள­ரவ அதி­தி­யா­கவும் கலந்­து­கொண்­டனர்.
அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்:-
தமிழ் மக்­களின் பிச்­சையில் பாரா­ளு­மன்றம் சென்ற அவர் இன்று தான் எம்.பி.யாக கார­ண­மான தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பை விமர்­சிப்­பதும் மூத்த எம்.பி.க்களை சாடு­வதும் கண்­ட­னத்­துக்­கு­ரி­யது.
நாம் யாரையும் காட்டிக் கொடுத்தும் வர­வில்லை. அப்­ப­டி­யொரு தேவையும் எமக்­கில்லை. அந்த எட்­டப்பன் வாழ்க்­கை­யை­விட நாம் சாகலாம். தமிழ்த் தேசி­யத்­திற்­காக உயிரைக் கொடுத்த தமிழர் பரம்­ப­ரையில் வந்­த­வர்கள் நாம் எனவே, எம்­மைப்­பற்றி பேச அவ­ருக்கு உரி­மையோ, அரு­க­தையோ இல்லை என்றார்.
இந்­நி­கழ்வில் கலை­மகள் பாலர் பாட­சாலை மாண­வருக்கு கற்றல் உப­க­ர­ணங்கள் வழங்­கப்­பட்­ட­துடன் அமைப்பின் மூன்று வருட சேவையை யொட்டி மீள்பார்வை என்ற நூல் வெளியீட்டு விழாவும் காணொளியும் வெளியிட்டு வைக்கப் பட்டன.
Close

ad

ad