புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 ஏப்., 2013

உல்லாசத்துக்கு வர மறுப்பு: சித்தியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை
 
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள செவ்வாத்தூர் காமராஜ் நகரை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி. இவரது மகன் புகழேந்தி (வயது22). அதே பகுதியை சேர்ந்தவர் சிவானந்தம். இவரது மனைவி ராஜம்மாள் (30)
. இவர்களுக்கு இளங்கோ என்ற மகனும், அகிலா என்ற மகளும் உள்ளனர். புகழேந்திக்கு ராஜம்மாள் சித்தி முறை ஆகும்.
 
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புகழேந்திக்கும், ராஜம்மாளுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதனால் 2 பேரும் யாருக்கும் தெரியாமல் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
 
இந்த நிலையில் கடந்த 1.4.2011-ந்தேதி ராஜம்மாளின் வீட்டிற்கு சென்ற புகழேந்தி ராஜம்மாளை உல்லாசத்துக்கு அழைத்துள்ளார். பள்ளிக்கூடம் முடிந்து குழந்தைகள் வந்துவிட்டார்கள். அதனால் இப்போது வரமுடியாது என ராஜம்மாள் மறுத்தார். இதனால் ஆத்திரமடைந்த புகழேந்தி மண்எண்ணையை எடுத்து ராஜம்மாளின் உடலில் ஊற்றி தீ வைத்துள்ளார்.
 
அவரின் அலறல் சத்தம் கேட்டு பக்கத்தில் நின்று கொண்டிருந்த அவரது மகனும், மகளும் கூச்சலிட்டனர். அதற்குள் புகழேந்தி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
 
பின்னர் சிகிச்சைக்காக அவர் திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு வந்த புகழேந்தி இந்த உண்மையை யாரிடமாவது கூறினால் உன்னுடைய கணவர், குழந்தைகளை கொலை செய்து விடுவேன் என மிரட்டியதாக கூறப்படுகிறது.
 
இதனால் பயந்து போய் ராஜம்மாள் போலீசில் புகார் தெரிவிக்காமல் இருந்துள்ளார். ராஜம்மாள் உயிருக்கு போராடி கொண்டிருந்த நிலையில் ஒரு மாதத்திற்கு பிறகு கந்திலி போலீஸ் நிலையத்தில் ராஜம்மாள் இதுகுறித்து புகார் தெரிவித்தார்.
 
அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து புகழேந்தியை கைது செய்தனர். மேலும் நடந்த சம்பவம் முழுவதையும் ராஜம்மாள் மரண வாக்குமூலம் அளித்தார்.
 
அதன்பிகு கடந்த 9.5.11-ந்தேதி ராஜம்மாள் பரிதாபமாக இறந்தார். இந்த வழக்கு திருப்பத்தூரில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் டில்லிபாபு வாதாடினார்.
 
26.04.2013 வெள்ளிக்கிழமை இந்த வழக்கின் இறுதி கட்ட விசாரணை நடந்தது. வழக்கை நீதிபதி முருகன் விசாரித்து குற்றம் சாட்டப்பட்ட புகழேந்திக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். அதைத் தொடர்ந்து புகழேந்தி வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

ad

ad