புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 ஏப்., 2013


அழகிகள் நடனம் பார்க்க வேலை பார்த்த
நகை கடையில் 360 பவுன் கொள்ளையடித்த ஊழியர்
 
சென்னை புரசைவாக்கத்தில் 'கேரளா ஜுவல்லர்ஸ்' என்ற பிரபல நகை கடை உள்ளது. இதன் உரிமையாளர் சிபிஜோசப். இவர் தனது கடையில் உள்ள நகை கையிருப்பு அவ்வப்போது ஆய்வு செய்வது உண்டு. இப்படி ஆய்வு செய்த போது 417 பவுன்
நகைகள் மாயமாகி இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
குறிப்பாக தங்க வளையல்கள் அதிகமாக காணாமல் போய் இருந்தது. வளையல் பிரிவுக்கு பாஸ்கர் என்பவர் பொறுப்பாளராக இருந்தார். அவர் மீது சிபி ஜோசப் சந்தேகம் கொண்டார்.
இது குறித்து அவர் கீழ்பாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் பாஸ்கரனை பிடித்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் நகைகளை கொள்ளையடித்ததை அவர் ஒப்புக்கொண்டார். அவரை போலீசார் கைது செய்தனர்.
43 வயது நிரம்பிய பாஸ்கர் கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்தவர். 30 வருடமாக கேரள ஜுவல்லர்ஸ் கடையில் வேலை பார்த்து வருகிறார். நம்பிக்கைக்குரிய ஊழியராக இருந்ததால் அவர் சென்னை நகை கடையின் வளையல் பிரிவில் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.
அயனாவரம் அருகே உள்ள நம்மாழ்வார் பேட்டை ராமலிங்கபுரத்தில் உள்ள சாமி பக்தர் தெருவில் மனைவி பிரேமலதா மற்றும் மகள், மகனுடன் வசித்து வருகிறார். மகள் கல்லூரிலும், மகன் பள்ளியிலும் படித்து வருகிறார்கள். அவருக்கு மாதம் ரூ.13 ஆயிரம் சம்பளம் வழங்கப்பட்டது. அந்த பணத்தில் பொறுப்பாக கடையில் வேலை பார்த்து குடும்பத்தை நடத்தி வந்தார்.
இந்த நிலையில் 2 ஆண்டுக்கு முன்பு பாஸ்கருக்கு ஒரு நண்பர் அறிமுகமானார். அவர் பாஸ்கரிடம் 'நட்சத்திர ஓட்டலில் நடக்கும் நடன அழகியின் நடனம் நன்றாக இருக்கும் என்று கூறி அவரை அண்ணாசாலையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலுக்கு அழைத்துச் சென்றார். நடன மங்கையின் அழகில் பாஸ்கர் மயங்கினார். அதோடு கவர்ச்சி உடையில் அவர்கள் போட்ட ஆட்டத்தில் பாஸ்கர் சொக்கி போனார். இதனால் அவர் அடிக்கடி அந்த நட்சத்திர ஓட்டலுக்கு சென்றார்.
சம்பாதிக்கும் பணத்தையெல்லாம் டான்ஸ் பார்க்க செலவிட்டார். ஆதனால் பணம் போதவில்லை. இதனால் நகை கடையில் நகையை சுருட்ட ஆரம்பித்தார். தினமும் ஒரு வளையலை திருடினார். அதனை புரசைவாக்கத்தில் 2 நிதி நிறுவனத்தில் அடகு வைத்தார். அதில் கிடைத்த லட்சக்கணக்கான பணத்தில் நட்சத்திர ஓட்டல்களுக்கு சென்று அழகியின் நடனத்தை ரசித்தார்.
இதில் ஒரு நடன அழகியுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. அவளது அழகில் பாஸ்கர் மயங்கினார். நகையை கொள்ளையடித்த பணத்தில் ஒரு சொகுசு கார் வாங்கி அழகிக்கு பரிசாக அளித்தார். மேலும் 2 மோட்டார் சைக்கிள்களும் வாங்கி கொடுத்தார். அதோடு கடையில் திருடிய தங்க வளையல்களையும் அன்பளிப்பாக வழங்கினார். பாஸ்கரன் தாராளமாக செலவு செய்வதை பார்த்து 'இவர் வசதி படைத்தவர்' என்று அழகியும் நினைத்தார். அவருக்கு சுகங்களை அள்ளிக் கொடுத்தார். பதிலுக்கு பாஸ்கரும் தங்க வளையல்களை பரிசாக அளித்தார்.
இந்த வகையில் 417 பவுன் நகைகளை கொள்ளையடித்து அழகியுடன் கும்மாளமிட்டுள்ளார். மேற்கண்ட தகவலை போலீஸ் இணை கமிஷனர் சங்கர் நிருபர்களிடம் கூறினார். அப்போது துணை கமிஷனர் பவானீஸ்வரி, உதவி கமிஷனர் ராஜாராம் ஆகியோர் உடன் இருந்தனர். பாஸ்கரிடம் இருந்து 360 பவுன் நகைகளை போலீசார் மீட்டனர். மேலும் கொகுசு கார், 2 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

ad

ad