புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 ஏப்., 2013




          "இது நீங்கள் மவுனமாக இருக்க  வேண்டிய நேரமல்ல. நீங்கள் அமைதியாக இருந்தால் உங்கள் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டை உறுதிப்படுத்துவது  போலாகிவிடும்' nakeeran

- ஒரு பிரதமரை நோக்கி இதைவிட வெளிப்படையாக கருத்து தெரிவித்து கடிதம் எழுதமுடியாது. 2ஜி விவகாரத்தில் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு நாடாளுமன்றக் கூட்டுக்குழுவில் இடம் பெற்றுள்ள பா.ஜ.க.வின் மூத்த தலைவர் யஷ்வந்த்சின்ஹா எழுதி யிருக்கும் நான்காவது கடிதம்தான் இது.

ஜே.பி.சி. தலைவரின் ஒருதலைபட்சம்

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான விவகாரங்களை சி.பி.ஐ. புலனாய்வு செய்து, உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்  மற்றும் கண்காணிப்பின்கீழ் சிறப்பு நீதிமன்றம் விசாரித்துக் கொண்டிருக்கும் அதேவேளையில், நாடாளுமன்றக் கூட்டுக்குழுவின் (ஜே.பி.சி) விசாரணையும்  தனியாக நடைபெற்று வருகிறது. இக்குழுவில் பல கட்சிகளைச் சேர்ந்த மக்களவை-மாநிலங்களவை எம்.பி.க்கள் 30 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இதற்குத் தலைவராக இருப்பவர் காங்கிரஸ் கட்சி எம்.பி.யான பி.சி.சாக்கோ.

இந்தக் குழுவின்  முன் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க  வேண்டும் என்றார் தொலைத் தொடர்புத்துறை முன்னாள் அமைச் சரும் 2ஜி விவகாரத்தில் முதன்மையாகக் குற்றம்சாட்டப்பட்டிருப்பவரு மான  ஆ.ராசா. அவர் ஆஜராக அனுமதிக்க வேண்டும் என குழுவில் இடம்பெற்றுள்ள பா.ஜ.க., சி.பி.எம்., சி.பி.ஐ. உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களும் வலியுறுத்தினர். ஆனால், ஜே.பி.சி. தலைவர் பி.சி.சாக்கோ அந்த வாய்ப்பை வழங்க மறுத்து, ஆ.ராசாவுக்கு கேள்விகள் அடங்கிய தாள்களை அனுப்பி பதில்களை மட்டும்  பெற்றுக் கொண்டார். ஆ.ராசா தனக்கான உரிமையைத்  தொடர்ந்து கோரிவந்தார்.

அதுபோலவே, 2ஜி விவகாரம் தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங் கையும் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தையும் ஜே.பி.சி. முன் ஆஜராகச் செய்யவேண்டும் என்பதை பா.ஜ.க உறுப்பினரான யஷ்வந்த்சின்ஹா தொடர்ந்து வலியுறுத்தி யும் அதையும் சாக்கோ ஏற்கவில்லை. ஜே.பி.சியில் உள்ள எதிர்க் கட்சி உறுப்பினர்களின் கோரிக்கைகளைப் புறக்கணித்துவிட்டு, வரைவு அறிக்கையைத் தயார் செய்தார் சாக்கோ. அந்த அறிக்கை, ஜே.பி.சி உறுப்பினர்களின் விவா தத்திற்கு வைக்கப்படு வதற்கு முன்பாகவே ஊட கங்களில் வெளியாகி பர பரப்பானது. பிரதமரை ஆ.ராசா  தவறாக வழி நடத்தினார் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

2ஜி ஒதுக்கீட்டில் பிரதமரின் பங்கு


தன் மீது வைக்கப் பட்ட குற்றச்சாட்டு களுக்கு பதிலளிக்கும் வகையில், ஜே.பி.சி.க்கு 112 பக்க அறிக்கை ஒன்றை அனுப்பினார் ஆ.ராசா. அதில், 2ஜி முறைகேடு  நடந்ததாகக் கூறப்படும் காலகட்டமான 2007 நவம்பரிலிருந்து 2008 ஜூலை வரை பல முறை பிரதமரை நேரில் சந் தித்தது பற்றி ராசா குறிப்பிட்டிருக்கிறார். பிரதமரை தவறாக வழி நடத்தியதாக தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற் றச்சாட்டுக்கு தன்னுடைய அறிக்கையின் 72-வது பக்கத்தில் விரிவாக பதிலளித்துள்ள ஆ.ராசா, "சி.பி.ஐ.யால்  வைக்கப் பட்ட இந்தக் குற்றச்சாட்டை  ஜே.பி.சி.யும் முன் வைக்கிறது. பிரதமரிடமிருந்து எந்த வாக்கு மூலத்தையும் சி.பி.ஐ. பெற வில்லை. அப்படியிருக்கும்போது, பிர தமரை நான்  தவறாக வழி நடத்தினேன் என்று எந்த அடிப்படையில் கூறுகிறீர்கள். இது தொடர்பாக ஜே.பி.சி. இறுதி முடிவு எடுக்க வேண்டு மென்றால் என்னிடமும் பிரதமரிடமும் வாக்குமூலத் தைப் பதிவு செய்ய வேண் டியது கட்டாயமாகும்' என்று அழுத்தந்திருத்தமாகக் குறிப்பிட்டுள்ளார்.

2ஜி ஒதுக்கீடு  தொடர் பாக 7 கடிதங்களைப் பிர தமருக்கு எழுதியிருப்பதை தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டுள்ள ஆ.ராசா, பிரதமர் மன் மோகன்சிங்கை இது தொடர்பாக நேரில் சந்தித்த விவரங்களையும் சந்திப்பு நடந்த இடங்களையும் கூட அதில் பதிவு செய்துள்ளார். கேபினட் கூட்டங்கள் நடந்த சம யத்திலும், பிரதமரின் அலுவலகம் மற்றும் இல்லத்திலும் இந்த சந்திப்புகள் நடந்திருப்பதைத் தெரிவித் துள்ளார். ராசாவுடனான சந்திப்பு பற்றி பிரதமரே நாடாளுமன்றத்திலும் பத்திரிகையாளர் களிடம் தெரிவித்தது பற்றியும் அந்த அறிக்கையில் குறிப் பிடப்பட்டுள்ளது.

நிறுவனங்களுக்கு அலைக்கற்றை உரிமம்  வழங்குவது என்ற முடி வெடுப்பதற்கு ஒருவாரம்  முன்பாகக்கூட இதுபற்றி பிரதமரை சந்தித்துப்  பேசியிருக்கிறார் ஆ.ராசா. பிரதமரின்  அறி வுறுத்தலின்படி அவரது செயலாளர் புலோக் சாட்டர்ஜியும் முதன்மைச் செயலாளர்  டி.கே.ஏ.நாயரும் ஆ.ராசா எடுத்த முடிவுகளுக்கு ஒப்புதல் வழங்கியிருப்பது பிரதமர் அலு வலகத்தில் உள்ள கோப்புகள் மூலமே தெரிய வருவதை இந்து நாளிதழ் உள்ளிட்ட பத்திரிகைகள் தெளிவாக வெளியிட்டி ருப்பதையும் ஆ.ராசாவின் அறிக்கை குறிப்பிடுகிறது.

ப.சிதம்பரத்துடன் ஆலோசனை

அலைக்கற்றை ஒதுக்கீட்டிற்கு முன்பாக யார்  யாரையெல்லாம் சந்தித்தேன் என்பதை தன் அறிக்கையில் விளக்க மாகத் தெரிவித்திருக்கும் ஆ.ராசா, 2008 ஜூலை 4-ந் தேதி நடந்த சந்திப்பில் அவரும் பிரதமரும் ப.சிதம் பரமும் கலந்துகொண்டதைக் குறிப்பிட்டிருக்கிறார். இந்த சந்திப்பு மற்றும்  விவாதங்கள் குறித்து பிரதமர் ஏற்கனவே நாடாளுமன்றத்தில் பேசி யிருப்பதையும் ஆ.ராசா நினை வூட்டியுள்ளார்.

பிரதமருடனும் அப்போ தைய சட்ட அமைச்சர் பரத்வாஜுடனும் பல சந்தர்ப்பங்களில் சந்தித்து 2ஜி ஒதுக் கீடு குறித்து ஆலோசித்ததையும் தேதி வாரியாகக் குறிப்பிட்டுள்ள ராசா, அனைத்து முடிவுகளும் பிரதமர், நிதியமைச்சர் உள்ளிட்டோருக்குத் தெரிவிக்கப்பட்டு அவர் களின் ஒப்புதல் பெற்றே எடுக்கப்பட்டன எனத் தெரிவித்துள்ளார். 

வலுக்கும் எதிர்ப்பு!

ஜே.பி.சி.யில் 30 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் 20 பேர் மக்களவை எம்.பிக்கள். 10 பேர் மாநிலங் களவை எம்.பி.க்கள். காங்கிரஸ் சார்பில் 11 பேர் உறுப்பினர்களாக இருக்கின்றனர். பா.ஜ.க சார்பில் 6 உறுப்பினர்கள். தி.மு.க., பகுஜன் சமாஜ் கட்சி, ஐக் கிய ஜனதாதளம், கட்சிகளுக்கு தலா 2 உறுப்பினர்கள்,  அ.தி.மு.க., சிபி. எம்., சி.பி.ஐ., சமாஜ்வாடி, தேசியவாத காங்கிரஸ், திரிணா மூல் காங்கிரஸ், பிஜு ஜனதா தளம் ஆகிய கட்சிகளுக்கு தலா 1 எம்.பி. என உறுப்பினர்களின் எண்ணிக்கை உள்ளது. 

காங்கிரஸ் எம்.பி.க்களின் எண்ணிக்கையே மற்ற கட்சி களைவிட அதிகமாக இருப்ப தால், ஏப்ரல் 25-ந் தேதி நடை பெறவிருந்த ஜே.பி.சி. கூட்டத்தில் வரைவு அறிக்கைக்கு ஒப்புதல் பெற்றுவிடமுடியும் என்றும் பிர தமரை நேரில் ஆஜராகாமல் காப் பாற்றிவிடலாம்  என்றும் மேலிடம் நினைத்திருந்தது. ஆனால், ஜே.பி.சி யில் உறுப்பினராக உள்ள 30 எம்.பி.க் களில் 15 பேர் வியாழனன்று (ஏப்.25) சபாநாயகர் மீராகுமாரியை சந்தித்து, "எங்களுக்கு சாக்கோ மீது நம்பிக்கை யில்லை அவரைப் பதவியிலிருந்து  விலகச் செய்ய வேண்டும்' என்று மனு அளித்தனர். இவர்களில் அ.தி.மு.க உறுப்பினர் தம்பிதுரையும் அடக்கம். இதுநாள்வரை, ஆ.ராசாவை சாட்சியத்திற்கு அழைக்க பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவு தரவில்லை என்றே சாக்கோ சொல்லிவந்தார். 30 உறுப்பினர்களின் தலைவரான சாக்கோவுக்கு ஜே.பி.சியில் வாக்களிக்கும் உரிமை கிடையாது. மீதமுள்ள 29 பேரில் 15 பேர் சாக்கோவை பதவி விலகச் சொல்லி மனு தந்திருக்கும் நிலையில், சாக்கோவின் நிலைக்கு ஆதரவாக இருப்பவர்கள் 14 பேர்தான். ராசாவை சாட்சியமளிக்க அழைக்கவேண்டும், பிரதமரை ஜே.பி.சி. முன் நிறுத்தவேண்டும் என்பவர்களின் எண்ணிக்கையே வலுவாக உள்ளது. காங்கிரசுக்கான நெருக்கடி மேலும் அதிகரித்துள்ளது. ஆ.ராசாதான் லாபி செய்து எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்துள்ளார் என்பதை உணர்ந்து கூட்டம் நடைபெறவேண்டிய நாளான ஏப்ரல் 25 அன்று திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. அம்பிகா பானர்ஜி இறந்துபோனதையடுத்து, கூட்டத்தை ஒத்திவைத்துவிட்டார் சாக்கோ. பதிலுக்கு கூட்டணி மற்றும் ஆட்சிக்கு ஆதரவு தரும் கட்சிகளை வளைக்க லாபியில் இறங்கியுள்ளது காங்கிரஸ்.

பழிவாங்கும் படலம்

தி.மு.க.வின் லாபியும் எதிர்க்கட்சிகளின் உறுதியும் 2ஜி விவகாரத்தில் காங்கிரசுக்கு நெருக்கடியை உண் டாக்குவதால் திணறிப்போயிருக்கும் காங்கிரஸ் தலைமை தனது வழக்கமான பழிவாங்கும் படலத்தைத் தொடங்கி விட்டது. கலைஞர் டி.வி கடனாகப் பெற்றதாகச் சொல்லப்படும் 200 கோடி ரூபாய் சம்பந்தமான கணக்குவழக்கில் கனிமொழி கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது, உடல்நிலை முடியாத தயாளு அம்மாளை நேரில் ஆஜராக கோர்ட்டிலிருந்து  சம்மன் வந்துள்ளது. மருத்துவ சான்றிதழ்களை சமர்ப்பித்து விலக்குப் பெறலாம் என்பது  தி.மு.க நிலை.  சட்டரீதியாக இது சாத்தியம் என்பதை  காங்கிரஸ் அரசும் உணர்ந்திருக்கும் நிலையில், புதிய நெருக்கடியாக கலைஞர் டி.விக்கு 90 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளதாம் அமலாக்கத்துறை. 200 கோடி ரூபாய் கடன் தொடர்பான ஆவணங்கள் சரியாக இல்லை என்று இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாம். 

ஜே.பி.சியில் பிரதமருக்கும் காங்கிரசுக்கும் நெருக்கடி கூடக்கூட, என்ஃபோர்ஸ் மெண்ட்-சி.பி.ஐ. போன்றவற்றின் மூலம்  தி.மு.க தரப்புக்கு நெருக்கடி தருவது என்பதில் காங்கிரஸ் மேலிடம் தீவிரமாக இருக்கிறது. அதேநேரத்தில், 2ஜியில் காங்கிரஸ் மற்றும் பிரதமரின் பங்கை வெளிக்கொண்டுவந்தே தீருவது என்பதில் எதிர்க்கட்சிகள் உறுதியாக உள்ளன. 

ad

ad