புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 ஏப்., 2013

தமிழ் நாட்டு ராஜ பக்சேவும் சித்திரை முழுநிலவும் ....... 
ஆர்.எஸ்.எஸ்.பரிவாரங்கள், முசுலீம் எதிர்ப்பு இந்துமத வெறி பாசிசத்தை முன்னிறுத்தி அட்டூழியங்களை எப்படிச் செய்து வருகின்றனவோ அப்படியே தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக ஆதிக்க சாதி வெறியர்களை நிறுத்தி மோடியைப் போல
ரத்தச் சேற்றில் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளத் துணிந்து விட்டார் ராமதாசு.

அதனை எடுத்துரைக்கவே இந்தச் “சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் கலாச்சார மாநாடு”.

அன்புமணி மத்திய சுகாதார அமைச்சராக இருந்த போது அமைச்சரவையிலேயே சிறந்த அமைச்சர் என்று ஐநா சபையே புகழ்ந்ததாம். மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கியதில் பலகோடி சுருட்டியதாக அன்புமணி மீது வழக்கு உள்ளதை அக்கினி சட்டி பரம்பரையினர் யாருக்கும் நினைவில்லை போலும். பசுமைத்தாயகம் திட்டத்திற்காக ஏகாதிபத்திய நாடுகளிடமிருந்து பெறப்படும் நிதி எங்கே போகிறது என்ற கேள்விக்கு பதில் இல்லை. 

சித்திரை முழுநிலவு நிகழ்ச்சி நடந்த அன்று பகலில் புதுச்சேரியிலிருந்து கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக மாமல்லபுரம் வந்தவர்கள் மரக்காணம் வழியாக வரக்கூடாது என்று போலீஸ் தடுத்தும் கூட கேட்காமல் அதே வழி வந்தவர்கள் வேன் கூரைமேல் அமர்ந்து குடித்து விட்டு பீர் பாட்டிலை சாலையில் நின்ற இளைஞர்கள் மீது எரிந்திருக்கிறார்கள். 

அது மட்டுமல்லாமல் கத்தி, அரிவாள் உருட்டுக் கட்டை போன்ற ஆயுதங்களுடன் மரக்காணம் காலனிக்குள் சென்று வீட்டிலிருந்தவர்களைக் கண்மூடித்தனமாகத் தாக்கியுள்ளனர். கடைகளுக்குள் புகுந்து சூறையாடியதுடன் சாப்பிட்டதற்கு பணம் கேட்டவர்களை அடித்து உதைத்ததாகத் பல்வேறு தினசரிகளின் செய்திகள் கூறுகின்றது. அதுமட்டுமல்லாமல் தாக்குதலில் 17 வயது இளைஞர் ஒருவர் இறந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகரனின் வாகனமும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. 

வன்னியன் ஆண்ட பரம்பரை என்பதற்கு காடுவெட்டி தரும் ஆதாரம் என்ன? பித்ரு முனிவர் யாகத்தில் பிறந்தவனாம். சிவன்- பார்வதி வழித்தோன்றல்களாம். இத்தகைய புளுகு பார்ப்பனப் புரட்டுக்கள்தான் வன்னியர் வரலாறு என்றால் பெரியார் மட்டும் இருந்திருந்தால் குருவை வெறித்துப் பார்த்தே விரட்டியிருப்பார். 

இன்றும் பெரும்பான்மை வன்னியர்கள் பெரியாரை மதிப்பவர்கள் என்பதால்தான் பாமக, வன்னியர் சங்க சாதி வெறியை அவர்கள் ஏற்கவில்லை. அதுதானே ராமதாஸ் மற்றும் குருவுக்கு எரிச்சலைத் தருகிறது. 

தலித்துகளைப் பற்றி குரு பேசியது வெளிப்படையான சாதித்தமிர். ஏதோ இவர்களது தயவில்தான் தலித்துகளுக்கு கொஞ்சம் சுதந்திரம் கிடைத்தது போலவும் அதை கெடுத்துக் கொண்டால் நடப்பது வேறு என்பதாக பச்சையாக மிரட்டி பேசினார். இதை தமிழ்த்திரைப்படங்களில் நம்பியார், பொன்னம்பலம் போன்றோர் கிராமத்து ஏழைகளைப் பார்த்து பேசுவது போலவே அச்சு அசலாக இருந்தது...

ராமதாஸின் காதல் குறித்த விளக்கம் என்ன? அதாவது தைலாபுரம் தோட்டத்து வன்னிய பண்ணைகள் காங்கிரசிலிருக்கும் கிருஷ்ணசாமி போன்ற பண்ணைகளோடு காதல் வைத்துக் கொள்ளலாம். இதைத் தாண்டி ஒரு ஏழை வன்னிய இளைஞன் கூட ஒரு பணக்கார பாமக வன்னியர் பெண்ணை காதலிக்கக் கூடாது. இதைத் தவிர மற்ற காதல்களையெல்லாம் நாடகம் என்று எதிர்க்கிறார் ராமதாஸ்..

இன்றைக்கு உலகமயமாக்க ஏகாதிபத்திய பண்பாட்டுச் சூழலில் மண முறிவு என்பது அதிகரித்து வருவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. இதற்கு ஒரு குறிப்பிட்ட பிரிவினரை மட்டுமே குற்றம் சுமத்துவது நவீன மனுவாதம் அன்றி வேறென்ன? சாதியை வைத்துப் பிழைப்பு நடத்த துணிந்து விட்ட ராமதாசுக்கு தன் சாதியக் கூட்டமைப்பு தகர்வதைக் கண்டு பொறுக்க முடியவில்லை. எனவே தான் மோடியைப் போல திட்டமிடுகிறார்..

வன்னிய இளைஞர்களை நல்வழிப் படுத்துவதற்காக அவர்களுக்கு பல்வேறு பயிற்சிப் பட்டறை நடத்துவதாகச் சொல்கிறார். அதன் லட்சணம் மரக்காணத்தில் அப்பட்டமாக வெளிப்பட்டுள்ளது. 

வீரம் என்பது காலம் காலமாக ஒடுக்கப்பட்டுக் கிடக்கும் ‘சேரி’ (ராமதாசு சொன்ன வார்த்தை) மக்களை மேலும் மேலேறித் தாக்குவது, குடி போதையில் ரவுடித் தனத்தைக் கட்டவிழ்த்து விடுவது, சேரிப் பெண்களைப் பெண்டாள்வது இது தான் இவர்களுக்கு கற்றுத்தரும் பண்பாட்டின் பின்னணி. 82 % பெரும்பான்மை சமூகம் 18% சிறுபான்மை சமூகத்தைக் கண்டு அஞ்சுகிறது என்று ராமதாசு சொல்வது வடிவேலுவே பொறுத்துக் கொள்ள முடியாத காமெடி..

அப்பட்டமான பிழைப்பு வாத சந்தர்ப்பவாத அரசியல் நடத்தி மதிப்பிழந்து போன ராமதாசு கேடு கட்ட சாதி அரசியலைக் கையிலெடுத்து மறுபடியும் முதல் பரோட்டாவிலிருந்து தொடங்கியிருக்கிறார். இந்தக் கழுதைக்குப் பெயர் முத்துமாலையாம். Taken from Vinavu.com...

ad

ad