புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 ஏப்., 2013



சட்டசபையில் ஜெயலலிதா-குரு வாக்குவாதம் 

சட்டப்பேரவையில் இன்று மரக்காணம் கலவரம் குறித்த விவாதம் நடைபெற்றது. அப்போது, முதல்வர் ஜெயலலிதாவுக்கும், பாமக உறுப்பினர் குருவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது, மரக்காணம் சம்பவத்துக்கும் பா.ம.க.,வுக்கு எவ்வித சம்பந்தமும் இல்லை என்று கூறினார் குரு எம்.எல்.ஏ. அப்போது பேசிய முதல்வர் ஜெயலலிதா, தீர்மானத்தின் போது பேசிய உறுப்பினர்கள் யாரும் மரக்காணம் சம்பவத்திற்கு பா.ம.க., காரணம் என யாரும் கூறவில்லை. அப்படியிருக்கையில்,  குருவின் பேச்சு எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல் உள்ளது என்றார். மேலும், பாமக எம்.எல்.ஏ குரு தலித் மக்கள் மீது கூறிய ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார் ஜெயலலிதா. இதை அடுத்து, குரு கூறிய குற்றச்சாட்டுகள் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்படும் என்றார் அவைத் தலைவர்.


ad

ad