புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 ஏப்., 2013

இறந்து கிடந்த பிச்சைகாரரிடமிருந்து எடுக்கப்பட்ட 1 லட்சத்து 42ஆயிரம் ரூபாய் பணம்
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலத்தில் 80 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் நீண்ட நாட்களாக பிச்சை எடுத்து பிழைத்து வந்துள்ளார்.
இந்த நிலையில் அவர் நேற்று ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வளாகத்தின் அருகே இறந்து கிடந்தார். இதுகுறித்து அவர்கள் ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்மணியிடம் தகவல் தெரிவித்தனர்.
அதைத் தொடர்ந்து அவர் விரைந்து வந்து பார்த்தார். அப்போது அவரது அருகில் பை ஒன்று கிடந்தது. அந்த பையை பொதுமக்கள் மத்தியில் திறந்து பார்த்தார். அதனுள் சிறு, சிறு காகிதத்திலும், தாம்பபூல பைகளிலும் ரூ.500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் கட்டு, கட்டுகளாக இருந்தன.
அதை எடுத்து எண்ணி பார்த்தபோது அதில் ரூ.1 லட்சத்து 42 ஆயிரத்து எழுநூற்று ஐம்பது இருந்தது தெரியவந்தது. மேலும் அந்த பையில் டெலிபோன் எண் ஒன்றும் இருந்தது. பொலிசார் அந்த டெலிபோன் எண்ணை கைப்பற்றி அவர் யார்? எந்த ஊர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பிச்சைக்காரரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பணத்தை பொலிசார் ஊராட்சி மன்றத் தலைவரிடம் ஒப்படைத்தனர்.

ad

ad