புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 ஏப்., 2013


ஈழத்தமிழர்களின் நிலங்களை இராணுவம் ஆக்கிரமிப்புச் செய்வதை தடுக்குமாறு கருணாநிதி கோரிக்கை
இலங்கையில் தமிழர்கள் வாழ்ந்த அவர்களுக்குச் சொந்தமான நிலப் பகுதிகளையெல்லாம் சிங்கள இராணுவம் ஆக்கிரமித்து கைப்பற்றுகின்ற முயற்சிகளை இந்திய அரசும் உலக நாடுகளும் தலையிட்டு நிறுத்துமாறு திமுக தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இலங்கை இராணுவத்தினரிடமிருந்து தப்பித்து - தங்களைக் காப்பாற்றிக் கொள்ள கடல் கடக்கும் முயற்சியில் ஈடுபட்ட 45 ஈழத் தமிழர்கள் பிடிபட்டனர்.
துபாயில் இறக்கி விடப்பட்ட அவர்களுள் 19 பேரை மீண்டும் இலங்கைக்கே திருப்பியனுப்ப ஐ.நா. உத்தரவிட்டுள்ளது என்றும் 8 பேரை ஸ்வீடன் அரசு ஏற்றுக் கொண்டது என்றும் அமெரிக்கா 11 பேருக்குத் தஞ்சம் தருவதாக வாக்களித்துள்ளது என்றும் ஏற்கனவே 7 பேரை கொழும்புக்குத் திருப்பி அனுப்பிவிட்ட நிலையில் எஞ்சியிருக்கும் 19 பேருக்குத் தஞ்சம் தர நாடுகள் எதுவும் முன்வரவில்லை என்றும் அவர்களை துபாய் அரசு கொழும்புக்கே திருப்பி அனுப்பத் தயாராகி வருவதாகச் செய்திகள் நமக்கு வந்துள்ளன என்றும் அவர்களின் துயரினைக் களைய உடனடியாக இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் 23-4-2013 அன்று கேட்டுக் கொண்டிருந்தேன்.
இந்த வேண்டுகோளை மத்திய அரசு பரிசீலித்ததாகவும், துபாயில் உள்ள அந்த 19 ஈழத் தமிழர்களும் மீண்டும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட மாட்டார்கள் என்றும் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தகவல் அனுப்பியுள்ளார்.
துபாயில் பிடிபட்டிருந்த அந்த ஈழத் தமிழர்களிடமிருந்தும் அதுபற்றி எனக்குத் தகவல் வந்துள்ளது. இதற்காக மத்திய அரசுக்கும, நிதியமைச்சருக்கும் ஈழத்தமிழர்களின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
என்றாலும், இலங்கையில் தொடர்ந்து நடைபெறுகின்ற ஈழத் தமிழர்களுக்கு எதிரான இன்னல்களைக் களைவதில் இந்திய அரசு இன்னமும் மெத்தனமாகவே இருக்கிறது

ad

ad