புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 ஏப்., 2013


மேடையில் சவால் விட்டு பேசிய ராமதாஸ் மீது வழக்கு ஜெயலலிதா அறிவிப்ப

Tamil-Daily-News-Ramadas-Jaya

சென்னை: பாமக சார்பில் மாமல்லபுரத்தில் நடந்த சித்திரை திருவிழாவின்போது மரக்காணம் பகுதியில் இரு பிரிவினரிடையே கலவரம் வெடித்தது. இதுகுறித்த சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது சட்டப் பேரவையில் நேற்று பல்வேறு கட்சியினர் பேசினர். இதற்கு பதிலளித்து ஜெயலலிதா பேசியதாவது: வன்னியர் சங்கம் அதாவது பாமக சார்பில், ‘சித்திரை முழுநிலவு வன்னியர் இளைஞர் பெருவிழாÕ மாமல்லபுரத்தில் நடந்தது.
கடந்த 20ம் தேதி, காஞ்சிபுரம் மாவட்ட எஸ்பி, விழா அமைப்பாளர்களை அழைத்து, ஒரு கூட்டம் நடத்தி, அதில் விழா எப்படி நடத்தப்பட வேண்டும் என்பது குறித்த உறுதிமொழியையும், சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் எதுவும் ஏற்படாது என்ற உத்தரவாதத்தையும் கூட்ட அமைப்பாளர்களிடம் பெற்றுள்ளார்.
மாமல்லபுரத்தில், 25ம் தேதி, காஞ்சிபுரம் டிஐஜி தலைமையில் மொத்தம் 1,910 பேர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். திட்டமிட்டு கலவரத்தில் ஈடுபட்டதால், வன்முறை நடந்தது. போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தி கலவரத்தை ஒடுக்கினர். விழா நடத்துவதற்கு காவல் துறையினர் விதித்த எந்த நிபந்தனையையும் பாமகவினர் கடைபிடிக்கவில்லை. விழாவில் பங்கேற்ற தலைவர்கள், அனுமதிக்கப்பட்ட நேரமான இரவு 10 மணியை கடந்து கூட்டத்தை தொடர்ந்து 11.35 மணி வரை நடத்தினர். பத்து மணிக்குள் கூட்டத்தை முடித்து கொள்வதாக உறுதி அளித்திருந்தபோதும், இவ்விழாவில் பங்கேற்ற ராமதாஸ் பேசும்போது,
‘11.30 மணிக்கு பேசறேன் போடு வழக்கை. அதெல்லாம் நமக்கு கவலை கிடையாதுÕ என்று கூறியுள்ளார். 10 மணிக்குள் விழாவை முடித்துக் கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையை உதாசீனப்படுத்திய ராமதாஸ் மீது ‘வழக்கு போடுங்கள்’ என்ற அவரது கோரிக்கைக்கு ஏற்ப வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றத்தை ஒப்புக்கொண்டு, நீதிமன்றம் அளிக்கும் தண்டனையை அவர் ஏற்றுக் கொள்வார் என்று நம்புகிறேன்.
இந்த அரசு, ஒரு போதும் வன்முறைகளை சகித்துக் கொள்ளாது. தங்கள் சுய லாபத்திற்காக அப்பாவி பொதுமக்களை சாதி ரீதியாகவும், மத ரீதியாகவும் தூண்டிவிட்டு வன்முறை செயல்களுக்கு காரணமாக இருப்பவர்கள் மீது எந்தவித கருணையும் இன்றி சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

ad

ad