புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 அக்., 2015

இராணுவ தலைமைச் செயலகத்தில் “தேனீர் குடித்த” தமிழ் பாடசாலை

Vakri Palsani 02
10.10.2015 திகதி அன்று கல்வி சுற்றுலா சென்ற போது கண்டியில் உள்ள இராணுவ தலைமைச் செயலகத்தில் தேனீர் உபசாரம் வழங்கப்பட்டுள்ளது.

இது நல்லதா தீயதா என்பது விவாதமல்ல இராணுவ மயமாதல் என்ற வகையில் பல அநீதிகள் இழைக்கப் படுகின்றன அவற்றை சுட்டிக் காட்டி ஐ.நாவின் அறிக்ககை கூட வந்தள்ள நிலையில் இப்படியான சுற்றுலா இன்றைய தமிழர் தரப்பிற்கு சாதகமா
காரணம் இன்றைய ஐநாவின் இன அழிப்பு ஆதாரத்தில் மட் ஃ பால்சேனை அ.த.க பாடசாலை மீது நடத்தப் பட்ட பல்குழல் எறிகனைத் தாக்குதல் அதில் சுமார் 34 உயிர்கள் பறிக்கப் பட்டமை 2009 யுத்தத்தின் முதல் பதிவாக உள்ளது.
ஐ.நாவிசாரணைக்கான நாட்கள் குறிக்கப் பட்டுள்ள நிலையில் மிக பிரதான ஆதாரமான பாடசாலையின் மாணவர்களை கண்டியில் உள்ள இராணுவ தலைமைச் செயலகத்திற்கு அழைத்துச் சென்றமையை தென்னிலங்கை எப்படி பிரசாரத்திற்கு பயன் படுத்தும் பாதிக்கப் பட்ட பகுதி மாணவர்களே இராணுவத்தைத் தேடி வருகின்றனர் ஏன் இராணுவம் மீது விசாரணை தமிழ் மக்கள் இராணுவத்தை அன்பு செய்கின்றனர் எனும் மாயை ஏற்படுத்த இவைகள் ஆதாரமாதகலாம்.
ஏன் படித்த பலர் உள்ள இங்கு எதற்காக இராணுவ தலைமைச் செயலகத்திற்கு மாணவர்களை அழைத்து சென்றது தேனீர் வழங்கவா புரியாத புதிராக உள்ளது
இன்றை காலத்தில் அனைவரும் அவதானமாக சிந்திக்க வேண்டும் அதை விடுத்து நல்ல சுதந்திரம் என நினைந்த உலா வந்தால் அதன் பலா பலன்களை வெகு விரைவில் அனுபவிப்பதைத் தவிர வேறு வழி இல்லை
மகிந்தவை விட ரணில் தந்திரமாக தமிழரை அழிபட்பார் சிந்திப்பீர்களா தமிழர்களே…..Vakri Palsani 03

ad

ad