11 அக்., 2015

தேசிய மட்ட போட்டியில் யாழ்.மாணவன் புதிய சாதனை!


அகில இலங்கைப் பாடசாலைகளுக்கு இடையே தேசிய மட்டத்தில் நடை பெறும் தடகள விளையாட்டுப் போட்டிகளில் அளவெட்டி அருணோதயாக் கல்லூரி மாணவன் என். நெப்தெலி ஜொய்சன் கடந்த பதின் மூன்று வருட சாதனையை முறியடித்து தேசிய மட்டத்தில் புதிய சாதனையை பதிவு செய்துள்ளார். 
19 வயதுப் பிரிவினருக்கான கோலூன்றிப் பாய்தல் போட்டியில் இவர் நான்கு மீற்றர் 21 சென்றி மீற்றர் உயரம் பாய்ந்து இந்த புதிய சாதனையை பாடசாலைகள் மட்டத்தில் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
கடந்த 2002 ம் ஆண்டு மாதம்பை சேனநாயக்கா மத்திய மகா வித்தியாலய வீரன் மதுரங்கா பெர்னாந்துவினால் நான்கு மீற்றர் தூரம்கோலூன்றிப் பாய்ந்து ஏற்படுத்திய சாதனையை இம்முறை அளவெட்டி அருணோதயாக் கல்லூரி வீரன் நெப்தெலி ஜோன்சன் முறியடித்து புதிய சாதனையை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.