11 அக்., 2015

விசால் அணியை பிரிக்கும் ராதிகாவின் தந்திரம்

நடிகர் சங்க தேர்தல் விவகாரத்தில் விஷால், எடுத்து வைக்கும் ஒவ்வொரு ஸ்டெப்பும் ஒவ்வொரு ஓட்டாக மாறிக்
கொண்டிருக்கிறது என்கிறார்கள் இந்த விஷயத்தை கூர்ந்து கவனித்து வரும் பத்திரிகையாளர்கள்.
இந்நிலையில் விஷாலின் நிழல் போலவே இருந்த ஆர்யா, ஜெயம் ரவி, ஜீவா ஆகிய முப்பெரும் தளபதிகள் ஏன் விஷால் பக்கமே வராமல் ஒதுங்கியிருக்கிறார்கள்? விஷால் மற்ற ஊருகளுக்கு ஆதரவு திரட்ட செல்லும் போது அவர்கள் ஏன் கலந்துகொள்வதில்லை? இத்தனைக்கும் ஆர்யாவும், ஜெயம் ரவியும் ஷுட்டிங் இல்லாமல் வீட்டில் தான் இருக்கிறார்களாம். ஒருவேளை விஷால் அணியில் விரிசலா? இப்படியெல்லாம் அடுக்கடுக்காக கேள்விகள் எழுந்த வண்ணம் இருக்கிறது.

ஜீவாவை அவரது அப்பா ஆர்.பி.சவுத்ரியே தடுத்துவிட்டதாக ஒரு தகவல் பரவிவருகிறது. அதற்கப்புறம் ஆர்யாவை தடுக்கவோ, அட்வைஸ் பண்ணவோ ஆளே இல்லை. அப்படி பண்ணினாலும் அவர் கேட்க மாட்டார். அவரே ஒதுங்கியிருப்பது தான் அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது. அடுத்து ஜெயம் ரவியையும் இவரது அப்பாவையும் ராதிகாவே நேரே சென்று சந்தித்து பேசினாராம்.
தேர்தல் நெருங்குவதற்குள் விஷாலை சுற்றியிருக்கும் அத்தனை பேரையும் தங்கள் பக்கம் இழுப்பது கூட பிரச்சனையில்லை. அவர்களை விஷால் பக்கம் நெருங்க விடாமல் பார்த்துக் கொண்டாலே போதும் என்று நினைக்கிறாராம் ராதிகா. அதற்கான முயற்சியின் முதல் ஸ்டெப்புதான், விஷாலின் நிழல்களாக இருக்கும் இவர்களை பிரித்தது.
இன்னொருபுறம் உதயநிதி தானே முன் வந்து விஷாலிடம், “நண்பா… நான் வேண்ணா துணைக்கு வரட்டுமா?” என்றாராம். இதற்கு விஷால், “ஐயா சாமீ… இதில் அரசியல் சாயமே வேண்டாம். நீ உள்ளே வந்தால் அது திமுக-அதிமுக யுத்தமாக கலர் மாறிவிடும், ப்ளீஸ்” என்று கையெடுத்து கும்பிட்டுவிட்டாராம்.