புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 அக்., 2015

சமாதான ஊர்வலத்தில் குண்டு வெடிப்பு : 86 பேர் சாவு


துருக்கியின் தலைநகரான அங்காராவில் இடம்பெற்ற சமாதான ஊர்வலமொன்றின் போது குண்டுத் தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளது.


 அங்காராவின் ரயில் நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற இத்தாக்குதலில் இதுவரை 86 பேர் கொல்லப்பட்டுள்ளதோடு, 186 பேர் காயமடைந்துள்ளதாக துருக்கியின் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
 இரு குண்டுகள் வெடித்துள்ளதாக அந்நாட்டு அரசாங்கத்தகவல்கள் தெரிவித்துள்ளதோடு, இதில் ஒன்று தற்கொலைக் குண்டுத்தாக்குதலாக இருக்கலாம் என சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 'சமாதானமும் ஜனநாயகமும்' எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற குறித்த ஊர்வலத்தில் குர்திஷ் சார்பு கட்சி ஒன்றும் பங்கேற்றிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
 இத்தீவிரவாத தாக்குதலை கண்டிப்பதாக தெரிவித்த அக்கட்சி, தங்களது அனைத்து தேர்தல் பேரணிகளையும் இரத்து செய்வதாக தெரிவித்துள்ளது.
 துருக்கியில் எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி தேர்தல் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 கடந்த ஜூன் மாதம் இடம்பெற்ற அந்நாட்டுத் தேர்தலின்போது எந்த கட்சியும் பெரும்பான்மையைப் பெற்றிராத நிலையிலேயே இத்தேர்தலுக்கு அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
                         
                         

ad

ad