11 அக்., 2015

திசைமாறும் நடிகர் சங்கத் தேர்தல் விவகாரம்; வருத்தத்தில் மூத்த நடிகர்கள்

நடிகர் சஙகத் தேர்தலில் செயலாளராக போட்டியிடும் நடிகர் விஷாலுக்கு எதிராக  மதுரையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்
பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் வரும் 18-ம் தேதி நடைபெற உள்ளது. சரத்குமார் அணி, விஷால் அணி என இரண்டு பிரிவினராக நடிகர்கள் தேர்தலைச் சந்திக்க உள்ள நிலையில், இரண்டு அணிகளும் பரபரப்பான பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. அதனை அடுத்து இந்த விவகாரம் வேறுதிசையில் பயணிக்கத் துவங்கியுள்ளது.
நாடக நடிகர்களிடம் ஆதரவு கேட்டு நடிகர் விஷால் தலைமையிலான பாண்டவர் அணி தமிழகம் முழுவதும் சுற்றி வருகிறது. இரண்டு நாட்களுக்கு முன் நடிகர் வடிவேலு மதுரை வந்து, சரத் அணியை வெளுத்து வாங்கிவிட்டுச் சென்றார்.

இன்று விஷால் தலைமையில் நடிகர்கள் வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் விஷாலை கடுமையாக விமர்சித்தும், முதல்வர் ஜெயலலிதாவுக்கு விஷால் எதிரானவர் போலவும் சித்தரித்து சுவரொட்டிகள் மதுரை முழுக்க ஒட்டப்பட்டுள்ளன. இதில் விஷால் மீது இனரீதியான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதை ஒட்டியவர் புறாமோகன் என்ற ஒரு சமூக அமைப்பை சேர்ந்த பிரமுகர். 
இதனால் மதுரையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. விஷாலின் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பதிலுக்கு சுவரொட்டி ஒட்ட தயாராகி வருகிறார்கள்.

நடிகர் சங்க விவகாரம் சாதிய பிரச்னையாக வடிவெடுத்திருப்பது நடுநிலையான மூத்த நடிகர்களிடம் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது