புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 அக்., 2013

பைலின் புயலால் தமிழகத்துக்கு பாதிப்பு இல்லை: வானிலை இலாகா தகவல்
ஒடிசாவில் நாளை கரையை கடக்கும் புயலால் தமிழகத்துக்கு பாதிப்பு இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
காமன்வெல்த்: இலங்கையில் நடத்த எதிர்ப்பு தெரிவிக்க வலியுறுத்தி ஆளுநர் மாளிகை முற்றுகை: எஸ்.டி.பி.ஐ கட்சி அறிவிப்பு
காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்த இந்தியா எதிர்ப்பு தெரிவிக்க வலியுறுத்தி சனிக்கிழமை ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் என்று எஸ்.டி.பி.ஐ கட்சி அறிவித்துள்ளது.  
2014 உலக கிண்ண உதைபந்தாட்ட போட்டிகளுக்கு சுவிட்சர்லாந்து தெரிவாகி உள்ளது .
இன்று நடைபெற்ற தகுதிகாண் குழு நிலைப் போட்டியில் அல்பேனியாவை 2-1 எனற ரீதியில் வெற்றி பெற்ற சுவிஸ் தனது குழுவில் 21புள்ளிகளை எடுத்து முதலாம் இடத்தை தக்க வைத்தது .இன்னும் ஒரு போட்டி ச்லோவானியாவுடன் விளையாட வேண்டி இருந்தாலும் முன்கூட்டியே  எந்த நாடும் இனி முந்த முடியாத வாறு புள்ளிகளை எட்டி உள்ளது .சுவிஸ் இது வரை நடைபெற்ற ௯ போட்டிகளில் எதிலுமே தோல்வியுறவில்லை என்பது சிறப்பானது . ஆறு போட்டிகளில் வெற்றியையும் மூன்று போட்டிகளில் சமநிலையையும் பெற்றது சுவிஸ் .  இன்று ஜெர்மனியும் பெல்ஜியமும் கூட தகுதியை பெற்றுள்ளன
மன்னார் ரொலோ மாகாண சபை உறுப்பினர் கலந்து கொள்ளாமைக்கு காரணம் “விபத்து”: அரசியல் சாயல் இல்லை
வட மாகாண சபை உறுப்பினரும் வைத்தியருமான குணசீலன் இன்றைய பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொள்ளாமைக்குரிய காரணம் அவரது மனைவி எதிர்பாராத விதமாக விபத்திற்குள்ளாகியமையே
அவசர செய்தி ..தோழர் தியாகுவின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து உள்ளதாக தகவல் அதனால்தான் மருத்துவ மனையில் இருந்து அனுப்பி உள்ளதாகவும் தகவல் ..இரண்டு நாட்களில் எதுவும் சம்பவிக்கலாம் .. உறவுகளே தோழர் தியாகுவின் உயிரை காப்போம் ..போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் !!!

11 அக்., 2013

11வது நாளாக உண்ணாவிரதம் தொடர்ந்த தோழர் தியாகுவை தமிழக காவல்துறை-மருத்துவதுறை கூட்டாக ராயப்பேட்டை பொது மருத்துவமனையிலிருந்து வெளியேறச் சொன்னபின் புரசைவாக்கம் மக்கள் கல்வி மாமன்றத்தில் தன் பட்டினப்போரைத் தொடர்கிறார்.

கோரிக்கையை தமிழகம் முழுவதும் கொண்டுசெல்வோம். இனக்கொலை இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டிற்கு இந்திய அரசை செல்லவிடாமல் தடுப்போம். தோழர் தியாகு உயிரைக் காப்போம்.

வடக்கில் வறுமை, பொருளாதார சுமைகளால் பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடும் நிர்ப்பந்தம்: விசாகா தர்மசேன

இலங்கையில் வடக்கு பகுதியில் யுத்தத்தின் பின்னர் அதிகளவான பெண்கள் தங்களது வருவாய் மூலமே குடும்பத்தை நடத்த வேண்டிய வறுமையான சூழல் உருவாகியுள்ளது.
வடமாகாண சபை சத்திய பிரமாணம் /படங்கள் 

வருவாய் தரும் துறைகள் எல்லாம் முதலமைச்சர் வசமே!

காணி, பொலிஸ் உள்ளிட்ட முக்கிய துறைகளை முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தன் வசம் வைத்துக் கொண்டுள்ளார்.வடக்கு மாகாண சபையின் அமைச்சர்களின் பொறுப்பு விவரங்கள் நேற்று முதலமைச்சரால் வெளியிடப்பட்டன. இதன்படி மாகாணசபையின் கீழ்வரும் முக்கிய துறைகள் அனைத்தும் முதலமைச்சர் வசமே உள்ளன.

மாகாணத்துக்கு உட்பட்ட பொலிஸ் மற்றும் சட்டம் ஒழுங்குத்துறை, நீதி, மாகாணப்பொருளாதாரத்
முக்கிய துறைகள் எல்லாம் முதலமைச்சர் வசமே! 
காணி, பொலிஸ் உள்ளிட்ட முக்கிய துறைகளை முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தன் வசம் வைத்துக் கொண்டார்.வடக்கு மாகாண சபையின் அமைச்சர்களின் பொறுப்பு விவரங்கள் நேற்று முதலமைச்சரால் வெளியிடப்பட்டன.
 ஐங்கரநேசனுக்கும் எனக்கும் தொடர்பு இல்லை;நேற்று தமிழரசுக் கட்சிக்கு சுரேஷ் தெரிவிப்பு 
ஐங்கரநேசனுக்கும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணிக்கும் (ஈ.பி.ஆர.எல். எவ்) இடையே எதிர்காலத்தில் எந்தவிதத் தொடர்பும் இல்லையென்றும், அவருக்கு வழங்கப்பட்டுள்ள
திமுக வேட்பாளர் வெ. மாறன்
ஏற்காடு இடைத்தேர்தலில் திமுக சார்பில் வெ.மாறன் போட்டியிடுகிறார்.   திமுக தலைவர் கலைஞர் தலைமையில் நடந்த வேட்பாளர் நேர்காணலில் மாறன் தேர்வு செய்யப்பட்டார்.
சந்திரபாபுநாயுடு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்
டெல்லியில் உண்ணாவிரதம் இருந்த சந்திரபாபுநாயுடு, உடல்நிலை மோசமாக ஆனதால் சிகிச்சைக்காக் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர்கள் இன்று பதவியேற்றனர்.
இன்று காலை 9 மணிக்கு தந்தை செல்வாவின் உருவச் சிலைக்கு அஞ்சலி செலுத்திய பின் உறுப்பினர்கள் அங்கிருந்து வீரசிங்கம் மண்டபத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.
வடமாகாண சபை கூட்டமைப்பு உறுப்பினர்கள், அமைச்சர்கள் இன்று யாழ்ப்பாணத்தில் பதவியேற்பு! 8 உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை
வட மாகாண சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் இன்று யாழ்ப்பாணத்தில் சத்தியப் பிரமாணம் செய்துகொள்ளவுள்ளனர்.
இன்று காலை யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இந்த வைபவம் நடைபெறவுள்ளது.
கடுமையான சட்டங்களுக்கு மத்தியில் இலங்கை அகதிகள் படகு அவுஸ்திரேலியாவுக்குள் பிரவேசித்தது
அவுஸ்திரேலிய கொக்கோஸ் தீவுகளுக்கு இலங்கையில் இருந்து அகதி படகு ஒன்று சென்றுள்ளது.அபோட்டின் அரசாங்கம் அகதிகள் தொடர்பில் கடுமையான நடவடிக்கைகளை அறிவித்துள்ள நிலையில் இந்த படகு சென்றுள்ளது.
பொதுநலவாய மாநாடு: பிரித்தானிய பாராளுமன்றக் கதவைத் தட்டும் தமிழர் பேரவை
பொதுநலவாய மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் என்ற பிரித்தானியத் தமிழர் பேரவையின் போராட்டம் பாராளுமன்ற கதவுகளை தொடர்ந்து தட்டுகிறது.
நடைபெறவிருக்கும் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் பிரித்தானியப் பிரதமர் கமரூன், இளவரசர் சார்ள்ஸ் ஆகியோரை கலந்து கொள்ள வேண்டாமென்று,
இலங்கையில் ஐக்கிய நாடுகளின் தோல்வி அறிக்கை விரைவில் வெளியாகும்
இலங்கையின் இறுதிப்போரின் போது ஐக்கிய நாடுகள் சபை தமது கடமைகளில் இருந்து தோல்வி கண்டமை குறித்த ஆராய்வு அறிக்கை விரைவில் சபையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

பெற்ற மகளையே கட்டிப்போட்டு
கற்பழித்த தந்தைக்கு 14 ஆண்டு சிறை
 
ராஜபாளையம் சேத்தூர் சமத்துவபுரம் காலனியை சேர்ந்தவர் காளிமுத்து,38. இவருக்கு, ஈஸ்வரி, தங்கம் என, இரு மனைவிகள் உள்ளனர். 
தங்கத்தின் மகள் கவிதா,13,( பெயர் மாற்றப்பட்டுள்ளது). 
திருமாவளவன் கூட்டத்துக்கு தடை நீங்கியது

தாம்பரத்தில் விடுதலை சிறுத்தைகள் சார்பில் அக்டோபர் 10 மண்ணுரிமை நாள் மற்றும் தலித் மற்றும் சிறுபான்மையினர் விடுதலை நாள் பொதுக்கூட்டம் இன்று மாலை மேற்கு தாம்பரம் சண்முகம் சாலையில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.

ad

ad