சிஐடியினால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ள ரணில்! [Wednesday 2025-08-20 07:00] |
![]() முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 22ஆம் திகதி வெள்ளிக்கிழமை குற்றப் புலனாய்வுத் துறைக்கு அழைக்கப்பட்டுள்ளார். தனிப்பட்ட வெளிநாட்டு பயணத்திற்கு அரசாங்க நிதி பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணைக்காகவே அவர் அழைக்கப்பட்டுள்ளார். இந்தப் பயணம் 2023 ஆண்டு, செப்டம்பர் 22 மற்றும் 23 ஆகிய திகதிகளில் நடந்ததாகக் கூறப்படுகிறது. |
இந்தப் பயணத்தில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் பத்து பேர் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்குறித்த விசாரணை தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் தனிப்பட்ட செயலாளர் சாண்ட்ரா பெரேரா ஆகியோரிடமிருந்து வாக்குமூலங்களைப் பதிவு செய்ய குற்றப் புலனாய்வுத் துறை முன்னர் நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. |
-
20 ஆக., 2025
www.pungudutivuswiss.com