11 அக்., 2013

திருமாவளவன் கூட்டத்துக்கு தடை நீங்கியது

தாம்பரத்தில் விடுதலை சிறுத்தைகள் சார்பில் அக்டோபர் 10 மண்ணுரிமை நாள் மற்றும் தலித் மற்றும் சிறுபான்மையினர் விடுதலை நாள் பொதுக்கூட்டம் இன்று மாலை மேற்கு தாம்பரம் சண்முகம் சாலையில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.இதில் விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் மற்றும் மனித நேய மக்கள் கட்சி மூத்த தலைவர் ஜவாஹிருல்லா ஆகியோர் கலந்துகொள்ள இருந்தனர் இதற்கான ஏற்பாடுகளை தாம்பரம் நகர செயலாளர் சாமுவேல் செய்திருந்தார். இதற்காக கடந்த செப்டம்பர் 20–ந் தேதி போலீஸ் அனுமதி கேட்டு மனு செய்திருந்தார். கூட்டத்திற்காக ஏராளமான சுவ ரொட்டிகள் பேனர்கள் தாம்பரம் மற்றும் புறநகர் முழுவதும் வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இந்த பொதுக்கூட்டத்திற்கு தாம்பரம் போலீசார் அனுமதி மறுத்து தடை விதித்தனர். இதையடுத்து அவசர அவசரமாக செயல்பட்டு அனுமதி வாங்கப்பட்டது.  தடை நீங்கி திருமாவளவன் பேசுகிறார்.