புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

11 அக்., 2013

திமுக வேட்பாளர் வெ. மாறன்
ஏற்காடு இடைத்தேர்தலில் திமுக சார்பில் வெ.மாறன் போட்டியிடுகிறார்.   திமுக தலைவர் கலைஞர் தலைமையில் நடந்த வேட்பாளர் நேர்காணலில் மாறன் தேர்வு செய்யப்பட்டார்.சேலம் அயோத்தியாப்பட்டிணத்தைச் சேர்ந்த வெ.மாறன், திமுக இளைஞரனி உறுப்பினர்.
ஏற்காடு இடைத்தேர்தல் டிசம்பர் 4-ந்தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் நவம்பர் 8-ந்தேதி தொடங்குகிறது. இடைத்தேர்தலில் போட்டியிட விரும்பும் தி.மு.க.வினர் மனு கொடுக்கலாம் என்று தி.மு.க. தலைமை அறிவிப்பை வெளியிட்டது. இதை தொடர்ந்து அண்ணா அறிவாலயத்தில் நேற்று தி.மு.க. வினர் மனு அளித்தனர்.
மனுக்களை பெற்றுக்கொள்வதற்காக தி.மு.க. தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகி யோர் அண்ணா அறிவாலயம் வந்தனர். அவர்களை தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.
ஏற்காடு தொகுதியில் கடந்த முறை தி.மு.க. சார்பில் போட்டியிட்டு 37 ஆயிரத்து 582 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவிய முன்னாள் எம்.எல்.ஏ. தமிழ்செல்வன் மீண்டும் போட்டியிட மனு அளித்தார். அவரை தொடர்ந்து 10 பேர் மனு செய்தனர்.
ஏற்காடு தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் குறித்து மனு அளித்தவர்களிடம் தி.மு.க. தலைவர் கலைஞர், பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் இன்று நேர்காணல் நடத்தினர்.  நேர்காணலில் வெ.மாறன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.