புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 அக்., 2013

முக்கிய துறைகள் எல்லாம் முதலமைச்சர் வசமே! 
காணி, பொலிஸ் உள்ளிட்ட முக்கிய துறைகளை முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தன் வசம் வைத்துக் கொண்டார்.வடக்கு மாகாண சபையின் அமைச்சர்களின் பொறுப்பு விவரங்கள் நேற்று முதலமைச்சரால் வெளியிடப்பட்டன.

 
இதன்படி மாகாணசபையின் கீழ்வரும் முக்கிய துறைகள் அனைத்தும் முதலமைச்சர் வசமே உள்ளன. மாகாணத்துக்கு உட்பட்ட பொலிஸ் மற்றும் சட்டம் ஒழுங்குத்துறை, நீதி, மாகாணப் பொருளாதாரத் திட்டங்களின் திட்டமிடல், நடைமுறைப்படுத்தல், போருக்குப் பின்னரான நல்லிணக்கம், மாகாண வீடமைப்பு மற்றும் கட்டுமானம், வீதிகள், பாலங்கள், கடற்பாதைகள், மனித உரிமைகள், கூட்டுறவு மற்றும் கூட்டுறவு மேம்பாடு, காணி, சொத்துக்களைச் சுவீகரித்தல் மற்றும் கேள்விக் குட்படுத்தல், புனர்வாழ்வு, சமூக சேவைகள், போருக்குப் பின்னரான புனர்வாழ்வு, மீள்குடியமர்வு, முஸ்லீம்கள் விவகாரம், உள்ளூராட்சி சபைகள், தொழிற்பயிற்சி, வேலை வாய்ப்புகள், சுற்றுலா, மின்சாரம் ஆகியன உள்ளிட்ட முக்கிய துறைகள் முதலமைச்சர் வசமே உள்ளன என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ad

ad