புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 அக்., 2013

பைலின் புயலால் தமிழகத்துக்கு பாதிப்பு இல்லை: வானிலை இலாகா தகவல்
ஒடிசாவில் நாளை கரையை கடக்கும் புயலால் தமிழகத்துக்கு பாதிப்பு இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 


அந்தமான் அருகே உருவான பைலின் புயல் குறித்து சென்னை வானிலை மண்டல ஆராய்ச்சி இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் கூறியதாவது:–
பைலின் புயல் மிகவும் தீவிரம் அடைந்துள்ளது. இந்த புயல் வங்க கடலில் ஆந்திர மாநிலம் கலிங்கப்பட்டினத்தில் இருந்து 500 கிலோமீட்டர் தூரத்தில் கிழக்கு தென் கிழக்கில் மையம் கொண்டுள்ளது. அது மிக வலுவாக உள்ளது. இந்த புயல் ஆந்திர மாநிலம் கலிங்கப்பட்டினத்திற்கும், ஒடிசா மாநிலம் பரதீப் என்ற இடத்திற்கும் இடையே கோபால்பூரில் கரையை கடக்கும். ஆனால் இந்த புயலின் தாக்கம் தமிழ்நாட்டில் இருக்காது.
வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் அநேக இடங்களில் மழை பெய்து வருகிறது. அதுபோல இன்று தமிழ்நாட்டில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். .இவ்வாறு எஸ்.ஆர்.ரமணன் தெரிவித்தார்.

ad

ad