புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 ஆக., 2025

www.pungudutivuswiss.com


ஐ.நா பொறுப்புக்கூறல் செயற்திட்ட அதிகாரிகளை நாட்டுக்குள் அனுமதிக்க வேண்டும்!
[Wednesday 2025-08-20 07:00]


ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டது முதல் 'நல்லிணக்கம்' தொடர்பில் அநுரகுமார திஸாநாயக்க பலமுறை பேசியிருந்தார். ஆனால் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆசனங்களை தம்வசம் வைத்திருக்கும் அவரது அரசாங்கம் யுத்தகாலப்பகுதியில் இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உத்தரவாதத்தை வெளிக்காட்டும் வகையில் எந்தவொரு நகர்வையும் மேற்கொள்ளவில்லை. இந்நிலையில் இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்ட அதிகாரிகள் நாட்டுக்குள் பிரவேசிப்பதற்கும், விசாரணைகளை முன்னெடுப்பதற்கும், பாதிக்கப்பட்ட தரப்பினர் மற்றும் சாட்சியங்களைச் சந்திப்பதற்கும் அரசாங்கம் இடமளிக்கவேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.

ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டது முதல் 'நல்லிணக்கம்' தொடர்பில் அநுரகுமார திஸாநாயக்க பலமுறை பேசியிருந்தார். ஆனால் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆசனங்களை தம்வசம் வைத்திருக்கும் அவரது அரசாங்கம் யுத்தகாலப்பகுதியில் இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உத்தரவாதத்தை வெளிக்காட்டும் வகையில் எந்தவொரு நகர்வையும் மேற்கொள்ளவில்லை. இந்நிலையில் இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்ட அதிகாரிகள் நாட்டுக்குள் பிரவேசிப்பதற்கும், விசாரணைகளை முன்னெடுப்பதற்கும், பாதிக்கப்பட்ட தரப்பினர் மற்றும் சாட்சியங்களைச் சந்திப்பதற்கும்

அரசாங்கம் இடமளிக்கவேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 8 ஆம் திகதி ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ள நிலையில், இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

இலங்கையில் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், மிகமோசமான சர்வதேசக் குற்றங்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதற்கும், நம்பகரமான உள்ளக பொறுப்புக்கூறல் பொறிமுறை எதுவும் அமுலில் இல்லாத நிலையில் நீதியை அடைந்துகொள்வதற்குப் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழிகாட்டுவதற்கும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடரின்போது இலங்கை விடயத்தில் பேரவைக்கும், ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கும் வழங்கப்பட்டிருக்கும் ஆணை மேலும் இரு வருடங்களுக்குப் புதுப்பிக்கப்படவேண்டும்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆட்சிபீடமேறி சுமார் ஒரு வருடம் பூர்த்தியடைந்திருக்கிறது. இலங்கையின் மனித உரிமைகள்சார் கடப்பாடுகளை உரியவாறு நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்திருக்கின்ற போதிலும், கரிசனைக்குரிய முக்கிய மனித உரிமைகள் விவகாரங்களில் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான முன்னேற்றமே எட்டப்பட்டுள்ளது. அதேபோன்று மிகப்பாரதூரமான அட்டூழியங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களைப் பொறுத்தமட்டில் தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கு இன்னமும் தொடர்கிறது.

ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரை நாட்டுக்கு வருகைதருமாறு கடந்த ஜுன் மாதம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் அழைப்புவிடுத்திருந்தது. இருப்பினும் உயர்ஸ்தானிகருடனான சந்திப்பின்போது தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்தை உறுதிசெய்வதிலும், பொருளாதார சவால்களை எதிர்கொள்வதிலும் தாம் கொண்டிருக்கும் கடப்பாடு கு;திரம் ஜனாதிபதி உரையாடினாரே தவிர, பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையினால் முன்னெடுக்கப்பட்டுவரும் முயற்சிகளை வெளிப்படையாக ஆதரிப்பதற்குத் தவறியிருந்தார்.

அதேவேளை உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் நாட்டுக்கு வருகைதந்திருந்தபோது, இலங்கையில் தொடரும் 'தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கு' எனும் பொறி குறித்து எச்சரித்ததுடன் நீதியை நிலைநாட்டப்படாமையானது வலுவான சமாதானத்தில் சீர்குலைவை ஏற்படுத்தும் என சுட்டிக்காட்டியிருந்தார். இலங்கையில் ஆட்சிபீடமேறிய அரசாங்கங்கள் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதில் தடையேற்படுத்தியதன் மூலம் பாதிக்கப்பட்டோரின் துன்பத்தை மேலும் ஆழப்படுத்தின. அவ்வரசாங்கங்கள் தாம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்குத் தவறியதன் காரணமாக உண்மை, நீதி மற்றும் இழப்பீடு வழங்கலை உறுதிப்படுத்தவேண்டிய நிலை மனித உரிமைகள் பேரவைக்கு ஏற்பட்டது.

அதுமாத்திரமன்றி நீண்டகாலக் காத்திருப்பும், அக்காலப்பகுதியில் முகங்கொடுத்த கசப்பான அனுபவங்களும் பாதிக்கப்பட்ட தரப்பினர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் உள்ளகக் கட்டமைப்புக்களிலும், பொறிமுறைகளிலும் நம்பிக்கை இழப்பதற்கு வழிகோலியிருக்கின்றன. எனவே தற்போதைய அரசாங்கத்தின்கீழும் தொடரும் ஒடுக்குமுறை அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினர் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டத்துடன் தொடர்புகளைப் பேணிவருகின்றனர்.

ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டது முதல் 'நல்லிணக்கம்' தொடர்பில் அநுரகுமார திஸாநாயக்க பலமுறை பேசியிருந்தார். ஆனல் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆசனங்களை தம்வசம் வைத்திருக்கும் அவரது அரசாங்கம் யுத்தகாலப்பகுதியில் இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உத்தரவாதத்தை வெளிக்காட்டும் வகையில் எந்தவொரு நகர்வையும் மேற்கொள்ளவில்லை.

இவ்வாறானதொரு பின்னணியில் இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்ட அதிகாரிகள் நாட்டுக்குள் பிரவேசிப்பதற்கும், விசாரணைகளை முன்னெடுப்பதற்கும், பாதிக்கப்பட்ட தரப்பினர் மற்றும் சாட்சியங்களைச் சந்திப்பதற்கும் அரசாங்கம் இடமளிக்கவேண்டும். அத்தோடு ஜனாதிபதித்தேர்தல் விஞ்ஞாபனத்தில் வாக்குறுதியளிக்கப்பட்டவாறு சட்டமா அதிபர் திணைக்களத்திலிருந்து வேறுபட்டவகையில் பொதுக் குற்றவியல் தாக்கல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குரிய செயன்முறை அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.

மேலும் வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விவகாரத்தைப் பொறுத்தமட்டில், நாடளாவிய ரீதியில் மனிதப்புதைகுழிகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு சர்வதேச தொழில்நுட்ப உதவிகளை அனுமதிக்கவேண்டும். அத்தோடு பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களின் நம்பிக்கையை வென்றெடுக்கக்கூடியவகையில் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தை மறுசீரமைக்கவோ அல்லது பதிலீடு செய்யவோ வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

ad

ad