11 அக்., 2013


பெற்ற மகளையே கட்டிப்போட்டு
கற்பழித்த தந்தைக்கு 14 ஆண்டு சிறை
 
ராஜபாளையம் சேத்தூர் சமத்துவபுரம் காலனியை சேர்ந்தவர் காளிமுத்து,38. இவருக்கு, ஈஸ்வரி, தங்கம் என, இரு மனைவிகள் உள்ளனர். 
தங்கத்தின் மகள் கவிதா,13,( பெயர் மாற்றப்பட்டுள்ளது). 
   கடந்த 2010 ஏப்ரல் 10 மாலை 3 மணிக்கு, வீட்டில் தனியாக இருந்த போது, வாயை பொத்தி, இரு கைகளையும் கட்டி போட்டப்படி, காளிமுத்து கற்பழித்து ள்ளார். சம்பவத்தை வெளியில் சொன்னால் ,உன்னையும், தாயையும் கொலை செய்து விடுவேன் என, மிரட்டி உள்ளார்.


இதை தொடர்ந்து, அதே மாத இறுதியில், தங்கத்தை வெளியே அனுப்பி விட்டு, மீண்டும் கவிதாவை கற்பழித்தார். பின் கவிதா, தனது தாயுடன், சென்னையில் உள்ள, தனது சித்தி வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கிருந்து, மீண்டும் ஊருக்கு வர மறுத்துள்ளார். அவரிடம், தாய் தங்கம், விசாரித்ததில், தந்தை கற்பழித்த விபரம் தெரியவந்தது.
இதையடுத்து 2010 ஜூன் 6ல், ராஜபாளையம் மகளிர் போலீசில்,தங்கம் புகார் செய்தார்.  இது தொடர்பான வழக்கு, ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட முதன்மை குற்றவியல் கோர்ட்டில் நடந்து வந்தது. விசாரித்த நீதிபதி தேவதாஸ், ’’ இது போன்ற மன்னிக்க முடியாத, காட்டு மிராண்டி தனமான மிருகங்களை விட ,கேவலான குற்றச்செயலை செய்ததற்காக , குற்றவாளிக்கு ஏழு ஆண்டு கடுங்காவல் தண்டனை, 3 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிப்பதோடு, கற்பழித்து விட்டு, சம்பவத்தை வெளியில் சொன்னால் ,உன்னையும், தாயையும் கொலை செய்து விடுவேன் என, மிரட்டியதற்காக, மற்றொரு ஏழு ஆண்டு கடுங்காவல் தண்டனையும் விதிக்கப்படுகிறது.

இத்தண்டனையை, ஒன்றன்பின் ஒன்றாக அனுபவிக்கவும், உத்தரவிடப்படுகிறது. மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு, எதிர்கால வாழ்வினை இயல்பாக்கும் வகையில், அவருக்கு ஆலோசனை, அறிவுரை வழங்கி, அவர், தொடர்ந்து கல்வி பயில்வதற்கு உதவிகளை வழங்கவும், விருதுநகர் கலெக்டருக்கு உத்தரவிடப் படுகிறது’’என, தெரிவித்தார்.