வருவாய் தரும் துறைகள் எல்லாம் முதலமைச்சர் வசமே!
மாகாணத்துக்கு உட்பட்ட பொலிஸ் மற்றும் சட்டம் ஒழுங்குத்துறை, நீதி, மாகாணப்பொருளாதாரத் திட்டங்களின் திட்டமிடல், நடைமுறைப்படுத்தல், போருக்குப் பின்னரான நல்லிணக்கம், மாகாண வீடமைப்பு மற்றும் கட்டுமானம், வீதிகள், பாலங்கள், கடற்பாதைகள், மனித உரிமைகள், கூட்டுறவு மற்றும் கூட்டுறவு மேம்பாடு, காணி, சொத்துக்களைச் சுவீகரித்தல் மற்றும் கேள்விக் குட்படுத்தல், புனர்வாழ்வு, சமூக சேவைகள், போருக்குப் பின்னரான புனர்வாழ்வு, மீள்குடியமர்வு, முஸ்லீம்கள் விவகாரம், உள்ளூராட்சி சபைகள், தொழிற்பயிற்சி, வேலை வாய்ப்புகள், சுற்றுலா, மின்சாரம் ஆகியன உள்ளிட்ட முக்கிய துறைகள் முதலமைச்சர் வசமே உள்ளன என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார். ஏற்கனவே கொழும்பிலிருந்த தருவிக்கப்பட்டுள்ள தனது ஆதரவாளர்கள் மூலம் அவற்றை நிர்வகிக்க அவர் திட்டமிட்டுள்ளதாக தெரியவருகின்றது.