19 ஆக., 2019

தொடங்கியது ரணில் ஆட்டம்:கைதாகலாம் கோத்தா?

மகிந்த குடும்பத்திற்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள ஆறு முக்கிய சம்பவங்கள் தொடர்பான விசாரணை அறிக்கையை சமர்பிக்குமாறு பதில் பொலிஸ்மா அதிபர், குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு அறிவுறுத்தியுள்ளார்.

விடுதலைப்புலிகளது மீள் எழுச்சி தொடர்பில் உருவாக்கப்பட்டுவரும் அரசியல் பூதாகரப்படுத்தலின் தொடர்ச்சியாக பளையில் வைத்தியர் சிவரூபன் கைது?

பளை வைத்தியசாலை மருத்துவ பொறுப்பதிகாரி வைத்தியகலாநிதி .சிவரூபன் நேற்றிரவு கைதாகியுள்ளார்.அவர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் நேற்றிரவு பளை வைத்தியசாலையில் வைத்து கைதாகியுள்ளார்.

சித்தார்த்தன் தந்தையினை சுட செல்வம் உத்தரவிட்டாரா?

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஆலாலசுந்தரம் மற்றும் தர்மலிங்கத்தை கொலை செய்ய செல்வம் அடைக்கலநாதன் உத்தரவிட்டதாக டெலோ அமைப்பின் முன்னாள் மூத்த போராளியொருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.
இதனை அக்கொலைகளை அரங்கேற்றுவதில்

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற குழு கூட்டம் இன்று அலரி மாளிகையில்

குறித்த கூட்டத்தில் ஐ.தே.கவின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பிலும், ஐக்கிய தேசிய முன்னணி உள்ளிட்ட கட்சிகள் இணைந்து அமைக்கவுள்ள கூட்டணி தொடர்பிலும் கலந்துரையாடப்படவுள்ளன.அதேவேளை எதிர்வரும் பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துரையாடப்படவுள்ள விடயங்கள் தொடர்பிலும் இந்த கூட்டத்தில் கவனம் செலுத்தப்படவுள்ளது.

கனடாவில் அதிகரித்து வரும் கரடிகள் அட்டகாசம்

பிரிட்டிஷ் கொலம்பியாவில் வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் கண்ணாடியை, கரடியொன்று உடைத்துள்ளது. வன்கூவரிலுள்ள பெண்ணொருவரின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டதையடுத்து அவர் மனிதனொருவரால் உடைக்கப்பட்டிருக்கலாம் என ஆரம்பத்தில்

வங்காளதேசத்தில் பயங்கர தீ விபத்து: 15 ஆயிரம் வீடுகள் எரிந்து சாம்பல்

வங்காளதேசத்தின் தலை நகர் டாக்காவின் உள்மாவட்டங்களில் ஒன்றான மிர்பூரில் சலந்திகா என்னும் இடத்தில் ஒன்றோடு ஒன்று ஒட்டியவாறு 1500-க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் இருந்தன. கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவில் அங்கிருந்த குடிசை வீடுகளில் திடீரென தீப்பற்றியது. பல

ஓடிப்போன கோத்தா போட்டியிட முடியாது

நாட்டை விட்டு ஓடிப்போனவருக்கு நாட்டின் மீது பற்று இருக்கமுடியாது.வேறுநாடொன்றின் பிரஜையான ஒருவர் நாட்டில் நடைமுறை அரசியலமைப்புக்கிணங்க தேர்தலில் நிற்க முடியாதென பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார்.

பொறுப்புக்கூறி விட்டு போட்டியிடட்டும்நா- உ .சி.சிவமோகன்

இறுதிப் போரில் சரணடைந்தவர்களுக்கு என்ன நடந்தது என்பதை பகிரங்கமாக தெரிவித்து விட்டு கோத்தாபய தேர்தலில் போட்டியிடட்டும் என்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கோத்தா குறித்து இன்று விசாரணை

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்‌ஷவுக்கு எதிராக தேர்தல்கள் ஆணைக்குழுவில் செய்யப்பட்டுள்ள முறைப்பாடு குறித்து ஆணைக்குழு இன்று ஆராயவுள்ளது.கோத்தாபய ராஜபக்‌ஷவின் கடவுச்சீட்டின் உண்மைத் தன்மை மற்றும் இலங்கை பிரஜாவுரிமை குறித்து ஆணைக்குழு ஆராயவுள்ளது.
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி

18 ஆக., 2019

கோத்தாவை ஆதரிக்கமாட்டேன் – மைத்திரி

சிறிலங்கா அதிபர் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக போட்டியிடும் கோத்தாபய ராஜபக்சவை ஆதரிக்கமாட்டேன் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இம்முறை போட்டியிடுவது உறுதி-சஜித் பிரேமதாஸ

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் தான் நிச்சயமாக போட்டியிடுவேன் என்று ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். அம்பலாந்தொட்ட பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மெக்சிகோவில் சிக்கிய இலங்கையர்கள்

சட்டவிரோதமாக கனடாவுக்கு செல்ல முயன்ற இலங்கையர்கள் உட்பட 67 பேர் மெக்சிக்கோவில் கைது செய்யப்பட்டுள்ளனர். புகலிடக் கோரிக்கையாளர்கள் மெக்சிக்கோ கரையோர அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்துக் கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டுள்ளனர் என கூறப்படுகிறது.

கோத்தாவுக்கு வாக்குகள் கிடைப்பது கடினம்- சித்தார்தன்

கோத்தாபய ராஜபக்ஷவுக்கு, தமிழ் மக்களின் வாக்குகள் கிடைப்பது மிகக் கடினம் என தான் கோத்தாவிடம் தெளிவாக எடுத்து கூறியுள்ளதாக புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்தன் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்தன் கடந்த வாரம், பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர்

ரணிலை சந்தித்த தமிழ்க்கட்சி தலைவர்

பிரதமர் ரணில் விக்ரமசிங்காவுக்கும், தமிழ் அரசியல் கட்சி ஒன்றின் தலைவருக்கும் இடையில் முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்றுமுன்தினம் இரவு இந்த சந்திப்புஇடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

17 ஆக., 2019

ஐதேமுவின் முக்கிய கலந்துரையாடல் தோல்வி

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்காக அமைச்சர் ராஜித சேனாரத்னவின் இல்லத்தில் இன்று (17) காலை இடம்பெற்ற ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சித் தலைவர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் தீர்மானம் இன்றி நிறைவுற்றது.

மகள் வருவதில் தாமதம் பரோலை நீட்டிக்கக்கோரி உள்துறை செயலாளருக்கு நளினி

மகள் வருவதில் தாமதம் பரோலை நீட்டிக்கக்கோரி உள்துறை செயலாளருக்கு நளினி மனுமகள் வருவதில் தாமதம் ஆவதால் மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிக்கக்கோரி உள்துறை செயலாளர், சிறைத்துறை தலைவருக்கு நளினி மனு அனுப்பி உள்ளார்

யாழ் அபிவிருத்தி தொடர்பில் ரணில் தலமையில் கூட்டம்

யாழ்.மாவட்டத்தின் அபிவிருத்திக்கான முன்மொழிவுகள் தொடர்பான கூட்டம் ஒன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலமையில் யாழ்.மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.

ஐதேக கூட்டணி பங்காளிகளின் முக்கிய கூட்டம் இன்று

புதிய அரசியல் கூட்டணியை உருவாக்குவது தொடர்பாக, முக்கிய முடிவை எடுப்பதற்காக, ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களின் கூட்டம் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் இல்லத்தில் இன்று காலை நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கோத்தாவுக்கு வாக்களிக்கக் கூடாது

தமிழர் ஒருவர் தேர்தலில் போட்டியிடுவதில் எந்தவித நன்மையும் கிடைக்க போவதில்லை எனத் தெரிவித்துள்ள, வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் எந்த ஒரு தமிழனும் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு வாக்களிக்கக்கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவசரமாக அமெரிக்கா பறக்கிறார் கோத்தா!

ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கோத்தபாய ராஜபக்ஷ அவசரமாக அமெரிக்கா செல்லவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தேர்தலை இலக்கு வைத்து விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டு வரும் கோத்தபாய ராஜபக்ஷ, அமெரிக்கா செல்ல தயாராகி வருகிறார்

16 ஆக., 2019

விக்கியை போட்டிக்கு அழைக்கும் சுதந்திரக் கட்சி

ஜனாதிபதி தேர்தலில் தம்மை போட்டியிடுமாறு சிறிலங்கா சுதந்திர கட்சியின் சில உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஜேவிபி வேட்பாளராக அநுரகுமார!

ஜனாதிபதி தேர்தலில் ஜேவிபியின் வேட்பாளராக அநுரகுமார திஸாநாயக்க களமிறக்கப்படுவார் என அக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஜனாதிபதி தேர்தலில் ஜேவிபியின் வேட்பாளராக அநுரகுமார திஸாநாயக்க களமிறக்கப்படுவார் என அக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கோத்தாவின் கடவுச்சீட்டு- தொடங்கியது விசாரணை

முன்னாள் பாதுகாப்பு செயலாளரும் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளருமான கோத்தாபய ராஜபக்‌ஷ, குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்திலிருந்து கடவுச்சீட்டை எவ்வாறு பெற்றுக்கொண்டார் என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பலாலியில் இருந்து ஒக்ரோபரில் விமான சேவை

பலாலி விமான நிலையம் தொடர்பான விசேட கலந்துரையாடல் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று இடம்பெற்றது.
பலாலி விமான நிலையத்தில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் பலாலியிலிருந்து சர்வதேச விமான சேவையை ஆரம்பிப்பது

பலாலி ஓடுபாதைக்கு காணிகளை சுவீகரிக்க முயற்சி?

பலாலி விமான நிலையத்தின் ஓடுபாதை விஸ்தரிப்பின் போது மேலதிக காணிகளை சுவீகரிக்க அனுமதிக்க முடியாது என கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

கோத்தாவை கைது செய்ய முயற்சி

பொதுஜன பெரமுன கட்சிவின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் கோத்தாபாய ராஜபக்ஷவை கைது செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சட்டத்தரணி அஜித் பிரசன்ன தெரிவித்துள்ளார்.

15 ஆக., 2019

அமெரிக்க குடியுரிமை துறப்பு பட்டியலில் கோத்தாவின் பெயர் இல்லை

அமெரிக்க குடியுரிமையை துறந்தவர்களின் புதிய பட்டியலிலும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்வின் பெயர் இடம்பெறவில்லை. இதனால் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

எழுவர் விடுதலையை தங்கள் உரிமையாக கருதக் கூடாது; தமிழக அரசு பதில்.

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 7 பேரும் தற்போது 28 வருடங்களுக்கும் மேலாகச் சிறைத் தண்டனை அனுபவித்து வருகின்றனர்.
இதில் தண்டனை பெற்று வரும் நளினி தங்களை விடுதலை செய்ய வேண்டும் எனச் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

மயிலிட்டி துறைமுகம் மக்களிடம் கையளிப்பு

நீண்டகாலத்தின் பின் புனரமைப்பு செய்யப்பட்டுள்ள யாழ்ப்பாணம் - மயிலிட்டி துறைமுகம் இன்று (15) காலை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் பொது மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

10 வயது சிறுவனை முதலை தின்றது

பிலிப்பைன்ஸ் தீவுகளில் ஒன்றான பலவான் தீவு இயற்கை வளங்கள் நிறைந்தது. எனினும், அச்சுறுத்தல் நிறைந்த பகுதியாகவும் உள்ளது.
இங்குள்ள பாலபக் பகுதியில் நீர்நிலைகளில் உப்புநீர் வகையை சேர்ந்த முதலைகள் வசித்து வருகின்றன.

காஷ்மீர் பகுதியை மீட்க இந்தியா போருக்கு தயார் ஆகிறது!

பாகிஸ்தான் வசம் உள்ள காஷ்மீர் பகுதியை மீட்க இந்தியா போருக்கு தயார் ஆகிறது என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கூறியுள்ளார்.
காஷ்மீரில் மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் பாகிஸ்தான், தங்கள் தரப்புக்கு ஆதரவாக

காஷ்மீர் பகுதியை மீட்க இந்தியா போருக்கு தயார் ஆகிறது

பாகிஸ்தான் வசம் உள்ள காஷ்மீர் பகுதியை மீட்க இந்தியா போருக்கு தயார் ஆகிறது என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கூறியுள்ளார்.
காஷ்மீரில் மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் பாகிஸ்தான், தங்கள் தரப்புக்கு ஆதரவாக உலக

14 ஆக., 2019

நாம் எவருக்கும் முட்டுக்கொடுக்கவில்லை; ஒற்றுமை, சர்வதேச ஆதரவே எமது பலம் சுமந்திரன் உறுதி

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு எவ­ருக்கும் முட்டுக்கொடுக்­க­வில்லை. ஓர்­மை­யுடன் குரல் கொடுத்து தன்­மா­னத்­துடன் தலை­நி­மிர்ந்து வாழ அடித்­த­ள­மிட்டு வரு­கின்­றது என்று தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பின் ஊடக பேச்­சா­ளரும், பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எம்.ஏ.சுமந்­திரன் தெரி­வித்தார்.

ரூ.154 கோடி மதிப்பிலான 500 புதிய பேருந்துகளை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்

தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை சார்பாக, இரண்டு கட்டங்களாக, 1,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 5,000 புதிய பேருந்துகளை வாங்க, அரசாணை வெளியிடப்பட்டிருந்தது. கடந்த இரண்டரை ஆண்டு காலகட்டங்களில் 1,160 கோடி ரூபாய் செலவில் 3,881 புதிய பேருந்துகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.

ஹாங்காங்கில் நுழைய முனைந்த அமெரிக்கா! தடுத்து நிறுத்திய சீனா

ஹாங்காங்கில் நிறைவேற்றப்பட்ட சர்ச்சைக்குரிய நாடுகடத்தல் மசோதாவால் நகரத்தில் மிகப் பெரிய ஆர்ப்பாட்டங்கள் அரசாங்கத்துக்கு எதிராக தொடர்ந்து வருவதால்,aஅங்கு வானூர்தி நிலையம் முதல் அனைத்து இடங்களும் முடங்கியிருக்கும் நிலையில்.

தளபதி முன்னே:ரணில் பின்னே யாழ்.வந்தனர்?

யாழ்ப்பாணத்திற்கு விஐயம் ஒன்றினை சத்தம் சந்தடியின்றி மேற்கொண்டுள்ள இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆரியகுளம் நாகவிகாரையில் வழிபாட்டில் இன்று மாலை ஈடுபட்டார்.பின்னர் யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்களை சந்தித்துள்ளார்.

மாகாணசபைத் தேர்தல்- உயர்நீதிமன்றத்தை நாடிய மைத்திரி

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதா என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயர்நீதிமன்றிடம் வியாக்கியானம் கோரியுள்ளார்.ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதா என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயர்நீதிமன்றிடம்

புலிகளின் காலத்துப் பலம் ஒன்றை இழந்து விட்டோம் - கலங்கிய சேனாதி

போர்க் காலத்தில் அரச இராணுவம் தேமாவரி குண்டுகள், பொஸ்பரிங் காஸ் குண்டுகளை பயன்படுத்தியது என்று பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.இன்று (14) வல்லிபுனத்தில் இடம்பெற்ற செஞ்சோலை படுகொலையின் 13ம் ஆண்டு நினைவேந்தலில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார்.

யாருடனும் பேசவில்லை, எவருடனும் பேசத் தயார்

தமிழர்களுக்கான தீர்வுத் திட்டங்கள் தொடர்பாக, எந்த தரப்பினருடனும் பேச்சு நடத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராகவே உள்ளது என்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் தெரிவித்தார்.
கிளிநொச்சியில் நேற்று இடம்பெற்ற

பரோலில் வந்த நளினி சிறையில் முருகனுடன் சந்திப்பு!

பரோலில் வந்த நளினி வேலூர் ஜெயிலில் முருகனை இன்று சந்தித்து பேசினார். முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில், ஆயுள் தண்டனை பெற்று, வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நளினி, மகளின் திருமணத்துக்காக, ஒரு மாதம் பரோலில் வெளியே வந்து,

12 ஆக., 2019

மீண்டும் வலுப்பெறும் ராஜபக்ச குடும்ப ஆதிக்கம் – ஷிரந்தி மாற்று வேட்பாளரா?

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் முதலாவது தேசிய மாநாட்டில், ராஜபக்ச குடும்பத்தினருக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டமை, குறித்து பலத்த விமர்சனங்கள் எழுந்துள்ளன.

ஜனாதிபதி தேர்தலை விடவும் புதிய அரசியல் யாப்பே நாட்டுக்கு அவசியம் -ஐரோப்பிய ஒன்றிய குழுவிடம் சம்பந்தன் தெரிவிப்பு

தற்போது நாட்டுக்கு முக்கிய தேவையாக உள்ளது ஒரு ஜனாதிபதி தேர்தல் அல்ல மாறாக ஒரு புதிய அரசியல் யாப்பே என ஐரோப்பிய ஒன்றிய குழுவினரிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

கோயில் கும்பிட யாழ்.வரும் கோத்தா?

பொதுஜன பெரமுனக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ இன்று அநுராதபுரத்துக்கு விஜயம் செய்யவுள்ளார்.
இன்று இரவு 7 மணிக்கு ருவன்வெலி மஹா விகாரையில் இடம்பெறும் ஆசிர்வாத பூஜையில், கோட்டாபய ராஜபக்ஷ,

வேலூரில் வெற்றி தோல்வியை தீர்மானித்தது சீமான்தான்:

ஆகஸ்ட் 5ஆம் தேதி நடந்த வேலூர் மக்களவைத் தேர்தலில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த், அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தைவிட சுமார் 8,000 வாக்குகளே அதிகம் பெற்று வெற்றி பெற்றார். இந்த நிலையில் திமுக, அதிமுக ஆகிய இரு முக்கியக் கட்சிகளைத் தவிர இந்தத் தொகுதியில்

கோட்டாவிற்கு குடைபிடிக்கும் துணைக்குழுக்கள்?

கோட்டபாய ராஜபக்சவிற்கு விளக்கு பிடிக்க முன்னாள் துணை ஆயுதக்குழுக்கள் பலவும் மீண்டும் களமிறங்க தொடங்கியுள்ளன.கோட்டாவிற்கே வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் வாக்களிப்பார்கள் என முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தனது முதலாவது பிரசங்கத்தை ஆரம்பித்துள்ளார்.

பிரான்சில் இருந்து வந்து ஆட்கடத்தல்- கப்பம் கோரிய நால்வர் கைது

வவுனியாவை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவரை கடத்தி பணம் பெறும் முயற்சியில் ஈடுபட்ட பிரான்சில் வசிக்கும், ஒருவர் உள்ளிட்ட 4 பேரை முல்லைத்தீவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குற்றச்சாட்டுக்குரிய ஒருவர் எமது நாட்டின் ஜனாதிபதி வேட்பாளரா?

பிரஜா உரிமையே கேள்விக்குறியாகியுள்ள குற்றச்சாட்டுக்குரிய ஒருவர் எமது நாட்டின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்படுவதையிட்டு நான் தனிப்பட்ட ரீதியில் வெட்கப்படுகிறேன் என நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

கொலைக்கார கும்பலுக்கு என் ஆதரவு கிடைக்காது-சந்திரிகா குமாரதுங்க

ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாய ராஜபக்ஷ நிறுத்தப்பட்டுள்ளது மிகவும் ஆபத்தான விடயம் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
'கோத்தபாய ராஜபக்ச என்பவர் மிகவும் ஆபத்தானவர். கொலைக்கார கும்பலுக்கு நாட்டை கொடுக்க கூடாது.கடந்த மஹிந்த
தாத்தாவின் மண்கும்பான் காணியை விகாரை அமைக்க கொழுத்த விலைக்கு பிக்குவுக்கு விற்றாரா ஐ தே க பிரமுகர் பிரபு நேற்றுமுந்தினம் மண்கும்பான் பிள்ளையார் ஆலயத்திற்கும் - முருகன் கோயிலுக்குமிடைப்பட்ட பகுதியில் விசய கலாவின் தீவக இணைப்பாளர் என்றும் ஐக்கிய தேசிய கட்சியின் தீவக அமைப்பாளர் ( இக்கட்சிக்கு தீவகத்தில் சிறு அலுவலகம் கூட

சடலத்தை அடையாளம் காணுமாறு கோரிக்கை!

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் கடந்த திங்கட்கிழமை கண்டெடுக்கப்பட்ட சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சடலத்தை அடையாளம் காட்டுமாறு பொதுமக்களிடம் பொலிஸார்

தமிழர்களிடம் கேட்க கோத்தாவுக்கு வெட்கமில்லையா?


போர்க்குற்றச்சாட்டுக்களுக்குள்ளான கோத்தபாய ராஜபக்ச எந்த முகத்தோடு தமிழ் மக்களிடம் வாக்குக் கேட்பார்? இவருக்கு வெட்கமில்லையா என்று கேள்வி எழுப்பியுள்ளார் முன்னாள் இராணுவத் தளபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா
"போர்க்குற்றச்சாட்டுக்களுக்குள்ளான கோத்தபாய ராஜபக்ச எந்த முகத்தோடு தமிழ் மக்களிடம் வாக்குக் கேட்பார்?" என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

கோத்தாவே வேட்பாளர் - அறிவித்தார் மஹிந்த

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோத்தாபய ராஜபக்ச அறிவிக்கப்பட்டுள்ளார். கொழும்பு சுகததாச உள்ளரங்கில் இன்று மாலை நடைபெற்ற முதலாவது தேசிய மாநாட்டில், எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச இதனை அறிவித்தார்.

10 ஆக., 2019

இன்னமும் முடிவில்லை:சுமந்திரன்?

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் யார் என்பதை அறிமுகம் செய்து, அவரின் கொள்கை என்ன வென்பதை வெளிப்படுத்திய பின்னர் அவருடன் நடத்தும் பேச்சுவார்த்தையே தமிழ் தேசிய கூட்டமைப்பு யாருக்கு ஆதரவு வழங்கும் என்பதை தீர்மானிக்கும் என்று அக் கட்சியின் பேச்சாளரும்

இனியும் முடியாது:ஆறுதிருமுருகன்

கன்னியா வெந்நீரூற்றுப் பகுதியில் சுமார்- 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிள்ளையார் ஆலயம் இடித்தழிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் நீண்டகாலமாகப் பிள்ளையார் ஆலயம் இருந்தமைக்கான அனைத்து ஆதாரங்களும் உள்ளன. மீண்டும் முன்னரிருந்த இடத்தில் பிள்ளையார்

கோத்தாவே தேசத் துரோகியே

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ ஒரு தேசத் துரோகி என்று சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். சர்வதேச நாடுகளுடன் செய்து கொள்ளவுள்ள ஒப்பந்தங்களை சபைக்கு சமர்ப்பிக்கக் கோரி எதிர்க்கட்சி உறுப்பினர் தினேஷ் குணவர்தன

தமிழீழ செயற்பாட்டாளர் கனடா செல்வராசா மறைவு!கனடாவில் தமிழீழ விடுதலைக்கு பல்வேறு வழிகளில் பங்களிப்புச் செய்து வந்த திரு.ஐயாத்துரை செல்வராசா (இராச) அவர்கள் நேற்று முன்தினம்  கனடாவில் காலமானார். புயம்பெயர்ந்து கனடாவில் வாழ்ந்து வந்த சூழலில் தமிழீழ விடுதலைக்கான பரப்புரைப் பணிகளைச் செய்து வந்த செல்வராசா அவர்கள், கனடா கந்தசாமி கோவிலின் ஆரம்ப கால பொறுப்பாளராக இருந்து கோயிலின் வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்புச் செய்தவர்.
கனடாவில் தமிழீழ விடுதலைக்கு பல்வேறு வழிகளில் பங்களிப்புச் செய்து வந்த திரு.ஐயாத்துரை செல்வராசா (இராச) அவர்கள் நேற்று முன்தினம் கனடாவில் காலமானார். புயம்பெயர்ந்து கனடாவில் வாழ்ந்து வந்த சூழலில் தமிழீழ விடுதலைக்கான பரப்புரைப் பணிகளைச் செய்து வந்த செல்வராசா அவர்கள், கனடா கந்தசாமி கோவிலின் ஆரம்ப கால பொறுப்பாளராக இருந்து கோயிலின் வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்புச் செய்தவர்

யாழ். நாடாளுமன்ற ஆசனங்களுக்கு வந்துள்ள ஆபத்து

வலிகாமம் வடக்கில் மீளக்குடியமர அனுமதிக்கப்படாத 21 கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த வெளியில் உள்ள மக்களை வாக்காளர்களாகப் பதிவு செய்யத் தவறியுள்ளதால், காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் 30 ஆயிரம் வாக்காளர்கள் நீக்கப்படும் அபாயம் காணப்படுகின்றது

கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு வலைவீச்சு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் சிலர் இன்று காலை எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். கொழும்பு விஜேராம வீதியில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவரின் வாசஸ்தலத்தில் இன்று காலை இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

9 ஆக., 2019

கோத்தாவுக்கு எதிராக முறைப்பாடு

ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கும் கோத்தபாய ராஜபக்ச, சட்டரீதியற்ற வகையில் கடவுச்சீட்டை பெற்றுக்கொண்டமை தொடர்பில் சிவில் செயற்பாட்டாளர்கள் இருவர் முறைப்பாடு செய்துள்ளனர்.பேராசிரியர் சந்ரகுப்த தேனுவர மற்றும் காமினி வியாங்கொட ஆகியோரே பொலிஸ் மா அதிபர் பணிமனையில் இந்த முறைப்பாட்டை செய்துள்ளனர்.

கூட்டமைப்பின் ஆதரவு தேவையில்லை-பசில் ராஜபக்ச

வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் பெரும்பான்மையான ஆதரவு எமது வேட்பாளருக்கே கிடைக்கும் என முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

நல்லுார்-எதிர்ப்புகளால் நிறுத்தப்படும் பாதுகாப்பு சோதனை

ல்லுார் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த திருவிழாவில் பங்கேற்கும் பக்தர்களிடம் நடத்தப்படும் பாதுகாப்பு சோதனைகள் தொடர்பாக கடுமையான விமா்சனங்கள் எழுந்துள்ள நிலையில், பாதுகாப்பு சோதனைகளை நிறுத்துவதற்கு அரசாங்கம் முடிவு செய்துள்ளது. வடக்கு ஆளுநர் சுரேன்

வேலூரில் கடும்போட்டியின் பின்னர் சொற்ப வாக்கு வித்தியாசத்தில் தி மு க வெற்றி வே

வேலூரில் கடும்போட்டியின் பின்னர் சொற்ப  வாக்கு வித்தியாசத்தில்  தி மு க  வெற்றி
 வேலூர் பாராளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி பெற்றதை தொடர்ந்து அண்ணா அறிவாலயத்தில் தொண்டர்கள் பட்டா

8 ஆக., 2019

வை கோ வுக்கும் காங்கிரசுக்கும் பூசல் வை கோ பாராளுமன்றில் காங்கிரசை எதிர்த்து பேசியதன் விளைவு  ஒரு இனத்தையே  அழி த்தவர்கள் காங்கிரஸ் என்று  வை கோ பேச்சு 

கோத்தாவுடன் சந்திப்பு -இரகசியத்தை அவிழ்த்தார் சித்தார்த்தன்

தமிழ் மக்களின் வாக்குகள் இல்லாமலேயே ஜனாதிபதி தேர்தலில் தன்னால் வெற்றி பெற முடியும் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தன்னிடம் தெரிவித்தார் என்று புளொட் தலைவர் த.சித்தார்த்தனை தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களின் வாக்குகள் இல்லாமலேயே

சஹ்ரானின் சொத்துக்கள் பலநூறு கோடி

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் சூத்திரதாரியான சஹ்ரானுக்கு சொந்தமான முடக்கப்பட்டுள்ள சொத்துகளின் விவரத்தை குற்றப் புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளனர்.

சிறிதரனுக்கு டக்ளஸ் சவால்

தன்மீது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் சுமத்தியிருக்கும் அவதூறுகளை உண்மையென நிரூபிக்க முடியுமானால், நீதி விசாரணையை நடத்துமாறு சவால் விடுத்துள்ளார் ஈபிடிபி செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா.

கோட்டாவுடன் இரகசிய சந்திப்பில் சித்தாத்தன்-

முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த கோட்டபாய ராஜபக்சவை பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தாத்தன் சந்தித்து இரகசிய பேச்சுவர்த்தையில் ஈடுபட்டுள்ளார்.

மீனவர்கள் 11 பேர் நிபந்தனைகளுடன் விடுதலை;சிறீலங்கா நீதிமன்றம் உத்தரவு!

கடந்த ஜூலை மாதம் 29ந் தேதி இராமேஸ்வரத்தில் இருந்து விசைபடகில் மீன்பிடிக்க சென்ற எழு மீனவர்களை இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்களை பிடித்தாக வழக்கு பதிவு செய்த சிறீலங்கா கடற்படை மீனவர்களை கைது செய்து வவுனியா சிறையில் அடைத்தனர்.

ஐ.தே.க. சார்பாக சரத் பொன்சேகாவை நிறுத்துமாறு அக்கட்சியினர் கோரிக்கை

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் கோட்டபாய ராஜபக்ஷ போட்டியிட்டால் அவருக்கு போட்டியாக ஐ.தே.க. சார்பாக சரத் பொன்சேகாவை நிறுத்துமாறு அக்கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இராணுவ புலனாய்வாளர்கள் விடுவிப்பு

ரிவிர பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் உபாலி தென்னகோன் மீதும், அவரது மனைவி மீதும் தாக்குதல் நடத்தியமை தொடர்பில் சந்தேக நபர்களாக பெயரிடப்பட்டுள்ள இராணுவ புலனாய்வாளர்கள் 8 பேரில் 6 பேருக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யும் அளவுக்கு

தமிழர்களை ஏமாற்ற முனைகிறார் மஹிந்த

புதிய அரசியலமைப்பைக் கொண்டு வரும் செயற்பாட்டை பாராளுமன்றில் மஹிந்த ராஜபக்ஷ தரப்பே கடுமையாக எதிர்த்து வருகையில் 13ஆவது திருத்தச்சட்டத்திற்கு அப்பால் சென்று அரசியல் தீர்வை வழங்குவேன் என மஹிந்த கூறுவதன் நோக்கம், தேர்தலை இலக்கு வைத்து மீண்டும்

சூறைக்காற்றில் பறந்த வீட்டுக் கூரைகள்

வவுனியாவின் பல பகுதிகளிலும் நேற்று மதியம் திடீரென வீசிய சூறைக்காற்றினால் 6 வீடுகள் சேதமடைந்தன. 18 பேர் பாதிப்படைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

சாவகச்சேரியில் பற்றியெரிந்த கடைகள்

ஏ 9 பிரதான வீதியில், சாவகச்சேரி- மடத்தடி சந்தியில் அமைந்துள்ள இரண்டு வர்த்தக நிலையங்களில் நேற்று இரவு 9.00 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த பகுதியில் அமைந்துள்ள வெல்டிங் கராஜ் மற்றும் பழக்கடை ஒன்றுமே தீப்பற்றி எரிந்தன.
தமிழகம் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர்  மணிகண்டன்  நீக்கப்பட்டுள்ளார் 

ஜம்மு காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு: வீட்டுச்சிறையில் முன்னாள் முதலமைச்சர்கள்?

காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக அமர்நாத் யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்கள் பயணத்தை முடித்து தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்ப மாநில அரசு உத்தரவிட்டது. அங்கு 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டதால் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

7 ஆக., 2019

ஜம்மு காஷ்மீர் விவகாரம்: இந்தியாவுடனான தூதரக உறவை முறித்துக் கொண்டது பாகிஸ்தான்

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்ததும், தூதரக உறவை முறித்துக் கொள்வதாக பாகிஸ்தான் கூறியுள்ளது.
காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது தொடர்பாக விவாதிப்பதற்காக பாகிஸ்தான் நாடாளுமன்றம் கூடியது. அப்போது பேசிய மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மந்திரி பா

கர்ப்பப்பை அகற்ற சென்ற பெண்ணுக்கு கையை அகற்றிய மருத்துவர்கள்

பெண் ஒருவர் கர்ப்பப் பையை அகற்றுவதற்குப் பதிலாக, கை ஒன்று அகற்றப்பட்டமை தொடர்பில், உடனடி விசாரணை நடத்த சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன உத்தரவிட்டுள்ளார்.சுகாதார அமைச்சரால் அமைக்கப்பட்டுள்ள விசாரணைப் பிரிவினருக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன் இதற்காக விசேட நிபுணர் குழுவொன்று மாரவில வைத்தியசாலைக்குச்

முன்னாள் போராளிகளுக்குள் உருவாகும் இன்னொரு குழு

ஜனநாயக போராளிகள் கட்சியின் செயற்பாடு தமக்கு திருப்தியளிக்கவில்லையென, முன்னாள் போராளிகளின் ஒருங்கிணைந்த குழுவின் பேச்சாளர் ப.செல்வகுமார் தெரிவித்தார்வவுனியா - நெளுக்குளத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

வடக்கு மாகாணத்தில் உள்ள நில அளவைத் திணைக்களங்களில் ஊழியர்கள் வெற்றிடத்திற்கு 87 சிங்களவர்கள்

வடக்கு மாகாணத்தில் உள்ள நில அளவைத் திணைக்களங்களில் நிலவும் சாதாரண ஊழியர்கள் வெற்றிடத்திற்கு 87 சிங்களவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
நேற்றைய தினம் இரகசியமான முறையில் மொத்தமாக தமக்கு தெரிவிக்காமல் 115 பேர் நியமனம செய்யப்பட்டுள்ளதாக தமிழரசுக்கட்சி குய்யோ

சற்றுமுன் காலமானார் பாஜாகவின் சுஷ்மா

இந்தியாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சரும் ஆளும் பாரதியா ஜனதாக் கட்சியின் மூத்த தலைவருமான சுஷ்மா ஸ்வராஜ் சற்றுமுன் காலமானார்.
முன்னைய பாஜக ஆட்சியில் வெளியுறவு அமைச்சராக இருந்த சுஷ்மா ஸ்வராஜ், சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை.

தேர்தலிலும் தோல்வியை தழுவினால் அரசியலில் இருந்து விலகுவேன் டக்ளஸ்

ஜனாதிபதி தேர்தல் மூலம் மீண்டும் இனப்படுகொலையாளன் மஹிந்தவுடன் கூட்டு சேர்வது தொடர்பில் டக்லஸ், வரதாஜ பெருமாள் மற்றும் சிறிதரன் உட்பட்டவர்கள் பேச்சு நடத்தியுள்ளனர்.

6 ஆக., 2019

ஊடகவியலாளர் நிபோஜனிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவு விசாரணை

கிளிநொச்சி ஊடகவியலாளர் எஸ்.என் நிபோஜனிடம் கொழும்பில் இன்று(06) பயங்கரவாத தடுப்பு பிரிவினர் மூன்று மணிநேரம் விசாரணை செய்துள்ளனர்.
விடுதலைப்புலிகளுடன் தொடர்புள்ளவர் என்ற சந்தேகத்தில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் தேடப்படும் ஒருவர் புலம்பெயர் நாடு

காஷ்மீர் இரண்டாக பிரிக்க முடிவெடுப்பதற்கு மத்திய அரசு எடுத்த நடவடிக்கை என்ன?காஷ்மீர் இரண்டாக பிரிக்க முடிவெடுப்பதற்கு முன்னதாக ஒரு மாதம் இது குறித்து மத்திய அரசு அலசி ஆராய்ந்து உள்ளது.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது அரசியல் சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டுள்ளது. அந்த மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதனால், 72 ஆண்டு கால காத்திருப்புக்கு பிறகு, காஷ்மீரை புதிய வண்ணத்தில் நாடு காணப்போகிறது.

நீதிமன்றத் தீர்ப்பு - விக்னேஸ்வரன் கருத்து

டெனீஸ்வரனைப் பதவியில் இருந்து நீக்கியது தொடர்பான வழக்கில் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் ஒரு முக்கிய விடயத்தைக் கவனத்தில் எடுக்கவில்லை போல் தெரிகின்றது என வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இந்த வழக்கின்

வேலூர் மக்களவை தேர்தல்: 72% வாக்குகள் பதிவு - தேர்தல் அதிகாரி அறிவிப்பு

வேலூர் மக்களவை தேர்தலில் மொத்தம் 72 சதவீகிதம் வாக்கு பதிவாகி உள்ளதாக தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்ட வேலூர் தொகுதிக்கு இன்று தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம்,

5 ஆக., 2019

சஹ்ரானுடன் ஆயுத பயிற்சி - மூவர் அதிரடி கைது

தடை செய்யப்பட்ட ஜமாத்தே மிலாத்து இப்ரஹிம் பயங்கரவாத அமைப்பின் உறுப்பினர்கள் மூவர் இன்று (05) அம்பாறையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைதானவர்கள் பயங்கரவாதிகளின்

வடக்கு ஆளுநருக்கு எதிராக வழக்கு

வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவனுக்கு எதிராக வடமாகாண பொதுச்சேவை ஆணைக்குழு உறுப்பினர்கள் உயர் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.
வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவனுக்கு எதிராக வடமாகாண பொதுச்சேவை ஆணைக்குழு உறுப்பினர்கள் உயர் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.

மூன்று ஆளுநர்கள் பதவியேற்பு

ஊவா, மத்திய, தென் மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்.
ஊவா, மத்திய, தென் மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில்

சுவிட்சர்லாந்து,லூசர்ன் ஏரியில் மூழ்கி ஈழத்தமிழ்ச் சிறுமி மரணம்!

சுவிட்சர்லாந்து, நிட்வால்டன் மாநிலத்தில் உள்ள லூசர்ன் ஏரியில், நேற்று மாலை ஆறு மணியளவில் ஈழத்தமிழ்ச் சிறுமி ஒருவர் விழுந்து உயிரிழந்துள்ளார்.சுவிட்சர்லாந்தில் வசிக்கும் ராஜ்மதன் சோனா என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மைத்திரி- சஜித் கூட்டு என்பது பொய்

சஜித் பிரேமதாசவுடன் இணைந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புதிய கூட்டணியை உருவாக்கப் போவதாக வெளியாகியுள்ள செய்திகளில் உண்மை இல்லை என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, தெரிவித்துள்ளார்.

நீதி நழுவிய நீதியரசர் விக்கி டெனீஸ்வரனை நீக்கியது தவறு - விக்கிக்கு எதிராக நீதிமன்றம் தீர்ப்பு!

வடக்கு மாகாண சபையின் மீன்பிடி மற்றும் போக்குவரத்து அமைச்சராக இருந்த பி.டெனீஸ்வரனை, முதலமைச்சராக இருந்த சி.வி. விக்னேஸ்வரன் பதவியிலிருந்து நீக்கியமை சட்டவிரோதமானது என மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
வடக்கு மாகாண சபையின் மீன்பிடி

யாருக்கு ஆதரவு?- அவசரப்பட வேண்டாம்!

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக நாம் அவரசப்பட்டு எந்த முடிவுக்கும் செல்ல வேண்டியதில்லை. முதலில் கட்சிகள் தமது வேட்பாளர்களை அறிவிக்கட்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் நேற்று திருகோணமலையில் நடைபெற்றது. அதில் கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு

வேலூர் மக்களவைத் தொகுதியில் மதியம் 1 மணி நிலவரப்படி 29.46 சதவிகிதம் வாக்குப்பதிவு

வேலூர் மக்களவைத் தொகுதியில் மதியம் 1 மணி நிலவரப்படி 29.46 சதவிகிதம் வாக்குப்பதிவாகி உள்ளது.தமிழகத்தில் மொத்தம் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளில், 38 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. பணப்பட்டுவாடா

4 ஆக., 2019

மேலுமொரு எண்ணெய் கப்பலை ஈரான் கைப்பற்றியது

வளைகுடா பகுதியில் மேலும் ஒரு வெளிநாட்டு எண்ணெய் கப்பல் ஒன்றை ஈரானிய படைகள் கைப்பற்றியுள்ளது என ஈரான் அரசுசார் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது

நான் வாங்கிய ஆயுதங்களினாலேயே யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது

என்னுடைய காலத்தில் கொள்வனவு ஆயுதங்களினாலேயே மஹிந்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தார் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம் வேலையற்ற பட்டதாரிகள்

வேலையற்ற பட்டதாரிகளால் யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.இந்த போராட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை மாவட்ட செயலகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டது.அரச நியமனம் வழங்குமாறு கோரி பட்டதாரிகள் இந்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

விபத்தில் 6 பேர் பலி, 52 பேர் காயம்

களுத்துறை பகுதியில் காலி வீதியில் இடம்பெற்றகோர விபத்தில் 6 பேர் பலியாகியுள்ளதுடன் 52 பேர் காயமடைந்துள்ளதாக காவல் துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.களுத்துறை, வஸ்கடுவ பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்திலேயே இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

3 ஆக., 2019

விஷாலுக்கு சிறையிலிருந்து வெளியில் வராதபடி பிடியாணை!

நடிகர் விஷாலுக்கு சொந்தமான விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தில் கடந்த 5 ஆண்டுகளாக, பல்வேறு நபர்களுக்கு வழங்கிய தொகைக்கு டி.டி.எஸ் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த டிடிஎஸ் தொகையை வருமானவரித் துறைக்கு குறித்த காலத்துக்குள் செலுத்தவில்லை

இங்கிலாந்து அழகியாக இந்திய மருத்துவ பெண் தேர்வு

இங்கிலாந்தில் வசித்து வரும் 23 வயதான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பாஷா முகர்ஜி மிஸ் இங்கிலாந்து போட்டியில் முடிசூடியுள்ளார்
இரண்டு வெவ்வேறு மருத்துவ பட்டங்களைப் பெற்றவர் அவர் , 146 IQ கொண்டவர், ஐந்து மொழிகளில் சரளமாக உரையாட
எதிர்வரும் 10  ஆம் திகதி  சுவிஸ்  விண்டதூர்   நகரில் நடைபெறவுள்ள தமிழீழக் கிண்ணத்துக்கான  வளர்த்தோர்  உதைபந்தாடட   போட்டிகளில் பங்குபற்றும் குழுக்களை  தெரிவு  செய்வதற்கான    தர அடிப்படையிலான   குழுமக்குழுக்கள்   அதிஷ்டா  சீட்டிழுப்பின்  மூலம் இவற்றில் அ^வ்வொரு குழுவில் இருந்தும்  ஒவ்வொரு  அணிகள்  வீதம் எடுக்கப்பட்டு  குழுக்கள்  தெ ரிவாகும் குல  ஒன்றிலும் இரண்டிலும் இதுவரை   2001 இல் இருந்து  பங்குபற்றி  சிறந்த பெறுபேறுகளை  பெட்ரா  கழகங்கள்   குழு மூன்றில் இந்த இரண்டிலும் இடம்பிடிக்காத சுவிஸ்  தவிர்ந்த மற்ற  நாட்டை  சேர்ந்த   கழகங்கள்   குழு  நான்கில் குழு  1  2 3 இல்  இல் இடம் பிடிக்காத  எஞ்சிய  வெளிநாட்டுக்கழகங்கள்   குழு  ஐந்தில் எஞ்சிய  சுவிஸ் நாட்டுக்கழகங்கள்