14 ஆக., 2019

தளபதி முன்னே:ரணில் பின்னே யாழ்.வந்தனர்?

யாழ்ப்பாணத்திற்கு விஐயம் ஒன்றினை சத்தம் சந்தடியின்றி மேற்கொண்டுள்ள இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆரியகுளம் நாகவிகாரையில் வழிபாட்டில் இன்று மாலை ஈடுபட்டார்.பின்னர் யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்களை சந்தித்துள்ளார்.

நாளை பிரதமர் பங்கெடுக்கும் நிகழ்வுகளில் வேலையற்ற பட்டதாரிகளை கலந்துகொள்ள அரச அமைச்சரான விஜயகலா பணித்துள்ளார்.அவ்வாறு பங்கெடுப்பவர்களிற்கே வேலை வாய்ப்பு நியமன கடிதங்கள் வழங்கப்படுமென நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.


இதனிடையே இலங்கை இராணுவத் தளபதி மகேஸ் சேனாநாயக்க வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர்க் கந்தன் ஆலயத்திற்குச் சென்று விசேட வழிபாடுகளில் ஈடுபட்டதுடன் நல்லூர்க்கந்தன் ஆலய உற்வசகால பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பிலும் ஆராய்ந்துள்ளார்.


இதன் போது இராணுவத்தளபதியுடன் யாழ்.மாவட்ட இராணுவத் தளபதி உள்ளிட்ட இராணுவத்தினரும் ஆலய வழிபாட்டில் ஈடுபட்டிருந்தனர்.

இராணுவத் தளபதியின் நல்லூரிற்கான வருகையை முன்னிட்டு ஆலயத்தில் பலத்த பாதுகாப்புக்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.நேற்று முன்தினமிரவு மூன்று முஸ்லீம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ள தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் அவரது வருகை கவனத்தை பெற்றுள்ளது.


இதே வேளை இன்றிரவு யாழில் தங்கியுள்ள இலங்கை பிரதமர் நாளை நல்லூரிற்கு சென்று வழிபடவுள்ளதாக தெரியவருகின்றது.அவரது வருகையை முன்னிட்டு தொடர்ந்தும் ஆலய சூழலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.