4 ஆக., 2019

நான் வாங்கிய ஆயுதங்களினாலேயே யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது

என்னுடைய காலத்தில் கொள்வனவு ஆயுதங்களினாலேயே மஹிந்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தார் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

களனி பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார். மேலும்,

கடந்த அரசாங்கத்தினை விடவும் இந்த அரசாங்கத்தில் ஊழல் மோசடிகள் குறைவாகவே இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

எனது அரசாங்க காலத்தில் மூன்றில் இரண்டு பகுதி நிறைவுக்குக் கொண்டுவந்திருந்த யுத்தத்தையே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ முடிவுக்குக் கொண்டுவந்தார்.

அந்த மூன்றில் ஒரு பகுதியை நிறைவு செய்ததும் தன்னுடைய காலத்தில் கொள்வனவு செய்த ஆயுதங்களினால் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்