புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 ஆக., 2019

மயிலிட்டி துறைமுகம் மக்களிடம் கையளிப்பு

நீண்டகாலத்தின் பின் புனரமைப்பு செய்யப்பட்டுள்ள யாழ்ப்பாணம் - மயிலிட்டி துறைமுகம் இன்று (15) காலை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் பொது மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

30 வருடங்கள் உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் முடக்கப்பட்டிருந்த மயிலிட்டி துறைமுகம் அண்மையில் விடுவிக்கப்பபட்டதுடன், மக்களின் நீண்டகால கோரிக்கையான துறைமுக அபிவிருத்தி தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.



இந்நிலையில், சுமார் 150 மில்லியன் ரூபாய் செலவில் மயிலிட்டி துறைமுகத்தின் புனரமைப்பு பணிகளை 2018ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 22ம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.

இந்த புனரமைப்பு பணிகளின் முதல் கட்டம் நிறைவுக்கு வந்துள்ள நிலையில் மீன்பிடி வலை தயாரிக்கும் நிலையம், சனசமூக நிலையம், எரிபொருள் நிரப்பு நிலையம் ஆகியற்றை திறந்து வைத்த பிரதமர், துறைமுக புனரமைப்பு நினைவு கல்லினையும் இன்று காலைதிறந்து வைத்தார்

ad

ad