புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 ஆக., 2019

கோத்தாவே வேட்பாளர் - அறிவித்தார் மஹிந்த

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோத்தாபய ராஜபக்ச அறிவிக்கப்பட்டுள்ளார். கொழும்பு சுகததாச உள்ளரங்கில் இன்று மாலை நடைபெற்ற முதலாவது தேசிய மாநாட்டில், எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச இதனை அறிவித்தார்.

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோத்தாபய ராஜபக்ச அறிவிக்கப்பட்டுள்ளார். கொழும்பு சுகததாச உள்ளரங்கில் இன்று மாலை நடைபெற்ற முதலாவது தேசிய மாநாட்டில், எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச இதனை அறிவித்தார்.

இந்த மாநாட்டில் உரையாற்றிய பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர், மகிந்த ராஜபக்ச “ இந்த நாள் வராமல் இருப்பதற்கு தற்போதைய அரசாங்கம் கடந்த காலத்தில் செயற்பட்டது, ராஜபக்ஷ குடும்பத்தை அரசியலிற்கு வராமல் இருக்க செய்வதற்காக அரசியலமைப்பை மாற்றியது. அவர்கள் அவ்வாறான விடயங்களை செய்து எமது சுதந்திரத்தை பறித்தனர். நாட்டின் சுதந்திரத்திற்காக எமது சுதந்திரத்தை அர்ப்பணிப்பு செய்தோம்.

எந்தவொரு மதம் தொடர்பில் தற்போதைய அரசாங்கம் கவனத்திற் கொள்ளவில்லை, வெறுப்பினூடாக அரசியலை எடுத்து செல்ல முடியும் என தற்போது தீர்மானமாகி விட்டது. வெறுப்பை முன்னெடுத்து செல்ல அரசியலிற்கு வருவதில்லை.என்னை நேசிக்கும் மக்களிற்காக மாத்திரமே வருகிறோம்.

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிராக செயற்பட்டது. 2015 ஆம் ஆண்டின் பின்னர் சிறிகொத்தவின் நிழல் கட்சியின் மீது விழுந்ததினால் நாட்டை நேசிப்பவர்களுக்கு அந்த இடத்தில் இருக்க முடியவில்லை.

கொழும்பில் குப்பை கூலங்களில் துர்நாற்றம் வீசம் போது மக்களுக்கு எங்களை நினைவு வந்தது. கொச்சிக்கடையில் இருந்து மட்டக்களப்பு வரையில் குண்டுகள் வெடித்த போது மக்களுக்கு எங்களை நினைவு வந்தது. இதனூடாக பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி உருவானது.

எந்தவொரு மதத்தினருக்கும் தனது வணக்கஸ்தலங்களுக்கு செல்லக்கூடிய நாட்டை உருவாக்க வேண்டும். அனைத்து முஸ்லிம்களும் தீவிரவாதிகள் இல்லை என்று எண்ணக்கூடிய நாட்டை உருவாக்க வேண்டும். 365 நாட்களும் நாட்டை பாதுகாக்க கூடிய ஒருவர் நாட்டிற்கு தேவை , தேசிய பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் .

தமிழ் அரசியல்வாதிகளை போல அல்லாமல், செய்வதையே சொல்பவன், சொல்வதையே செய்பவன் . 2015இல் ஐக்கிய தேசியக்கட்சி நாட்டை கைப்பற்றியது. ஆனால் நாடு முன்னேறவில்லை. நாம் அப்போது ஒப்படைத்த நாட்டையே மீள பொறுப்பேற்கப் போகிறோம்.

2005இல் நாம் ஆட்சிக்கு வந்தபோது நாடு எப்படியிருந்ததோ, அப்படியே இப்போதுமிருக்கிறது. இந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப எம்மால் முடியும். 2005ம் ஆண்டு நாம் பதவிக்கு வந்தபோது, 30 ஆண்டு யுத்தத்தை யாரும் முடிவிற்கு கொண்டு வர முடியுமென யாரும் நினைக்கவில்லை.

புகையிரதங்களில் கொழும்பிற்கு வர முடியுமென வடக்கு மக்கள் யாரும் நினைக்கவில்லை. டக்ளஸ் தேவானந்தா மட்டும்தான் நம்பிக்கையுடன் இருந்தார். கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பகுதிகளை அபிவிருத்தி செய்ய முடியுமென யாரும் நினைக்கவில்லை. ஆனால் எம்மால் செய்ய முடிந்தது.நான் செய்வேன் என்று செல்லும் ஒருவர் அல்லாமல் செய்து காட்டிய ஒருவரை கொண்டு வரவேண்டும் எனவும், மக்களை ஏமாற்றாத ஒருவர் வேட்பாளராக ​வேண்டும் .

அன்று ஏமாற்றப்பட்ட இளைஞர்கள் இன்று அரசியல் எனும் வார்த்தையை வெறுக்கின்றனர். நாட்டை நேசிக்கும் ஒருவரை மக்கள் வேண்டிக் கொள்கின்றனர். என்னுடைய விருப்பத்தை விடவும் நாட்டின் விருப்பமே எனக்கு முக்கியம்.மக்கள் கூறியவற்றை அவதானத்திற் கொண்டு புதிய ஒருவரை தேடியதாகவும், நான் தெரிவு செய்யாவிடினும் கோத்தாபய ராஜபக்ஷ உங்களது சகோதரர் ஆகிவிட்டார்.



எனவே கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக கோத்தாபய ராஜபக்ஷவை களமிறக்க தயார். என்னுடைய சகோதரனை நான் உங்களிடம் ஒப்படைக்கிறேன் . கோத்தாபய தன்னை ஜனாதிபதியாக்குமாறு கேட்டுக் கொள்ளவில்லை. உங்களை வலுப்படுத்துவதற்காக அன்றி கோத்தாவை வலுப்படுத்தவதற்காக அவரை நியமிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ad

ad