வடக்கு மாகாணத்தில் உள்ள நில அளவைத் திணைக்களங்களில் நிலவும் சாதாரண ஊழியர்கள் வெற்றிடத்திற்கு 87 சிங்களவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
வடக்கு மாகாணத்தின் 5 மாவட்ட அலுவலகங்களிலும நிலவும் சிற்றூழியர்கள் தரத்திலானோரை நியமிப்பதற்கு பகிரங்கமாக விண்ணப்பம் கோரப்பட்டது.
இதற்கு பலரும் விண்ணப்பித்திருந்தனர். இவ்வாறு விண்ணப்பித்தவர்களிற்கு கொழும்பில் நேர்முகத் தேர்வும் இடம்பெற்றது.
இவ்வாறு இடம்பெற்ற நேர.முகத் தேர்வின் அடிப்படையில் நியமனம் கிடைக்கும் எனப் பலரும் காத்திருந்த நிலையில் நேற்றைய தினம 118 பேருக்கு திடீரென நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு நியமனம் வழங்கப்பட்டவர்களின். 31 பேர் மட்டுமே தமிழர்களாகவும் எஞ்சிய 87 பேரும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் கண்டறியப்பட்டுள்ளது.
இவ்வாறு நியமிக்கப்பட்ட 118 பேரில் வவுனியா , முல்லைத்தீவு மாவட்டங்களிற்கு தலா 35 பேரூம் கிளிநொச்சி மாவட்டத்திற்கு 30 பேரும் மன்னார் மாவட்டத்திற்கு 13 பேரும் நியமிக்கப்பட்டுள்ளதோடு யாழ்ப்பாணத்திற்கு 5 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்